Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

  • PDF

 

 

'சாம்பார்' என்பது தமிழ் வார்த்தையே கிடையாது என்கிறார்கள் சமையல் ஆராய்ச்சியாளர்கள். மராட்டியர்கள் தஞ்சாவூரை ஆண்டபோது அவர்கள் விட்டுச் சென்ற வார்த்தையாம். புளிப்பு, பருப்பு, வாசனையூட்டும் பொருட்கள், துணைப் பொருட்கள் இவைதான் சாம்பாருக்கு அடிப்படை. புளிக்குப் பதில் புளிப்புச் சுவை அளிக்கும் மாங்காய், தக்காளி, மோர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தினால் அந்தந்த ஸ்பெஷல் சாம்பார். இதே போல, துவரம் பருப்புக்குப் பதில் பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு மாதிரியான பருப்புவகை களையும் பயன்படுத்தலாம். துணைப் பொருட்களான காய்கறி, கீரைத்தண்டு, மாங்கொட்டை போன்ற வற்றையும் சாம்பார் செய்யப் பயன்படுத்தலாம். அருகே உள்ள அட்டவணையில் உள்ளபடி மூலப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், துணைப் பொருட்கள் ஆகியவற்றை மாற்றி மாற்றிக் கலந்து அதனுடன் ருசிக்கு ஏற்ப உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டால் விதவித சாம்பார் தயார்!

சாம்பாருக்கு வாசனையூட்டும் அயிட்டங்கள் ஊருக்கு ஊர் மாறும். சேலத்தில் பூண்டும், கும்ப கோணம், தஞ்சாவூரில் கொத்துமல்லி விழுதும்,செட்டி நாட்டில் சோம்பும், மலேசியா, இலங்கையில் மீன் பொடி அல்லது இறால் பொடியும் சேர்த்து வாசனை கூட்டுவார்கள்.

புளித் தண்ணீரும் வேகவைத்த பருப்பும் ஃபிரிஜ்ஜில் பலநாள் தாங்கும். இவை தயாராக இருந்தால், நிமிடத் தில் சாம்பார் தயார் செய்யலாம். சமைக்க நேரம்இல்லா தவர்கள் சாம்பாரை ஒரு வாரம் வரை ஃபிரிஜ்ஜில் வைக்கலாம். ஆனால், தாளித்து வைக்கக் கூடாது. தேவையான அளவு எடுத்துச் சூடுபடுத்தி தாளித்துக் கொட்டிச் சாப்பிடலாம். சூடுபடுத்திய சாம்பாரை மறுபடியும் ஃப்ரிஜ்ஜில் வைப்பதைத் தவிர்க்கவும்!

source: vikatan

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2009 19:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh