Fri01192018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அசால்ட்டா நின்னுட்டு இக்கிரிங்க...?!

  • PDF

 

ஹைதர் அலி:   அஸ்ஸலாமு அலைக்கும்


வ அலைக்குமுஸ் ஸலாம்,


கான்சாபு:    என்னாங்க நா வந்ததுலேந்து பாக்குறேன்ஒரு மாதிரியா இக்கிரிங்க


திப்புசுல்தான்:   இன்னைக்கி தாவத்துலே பிரியாணி சாப்டத்துலேந்து திட்டுமுட்டு தெஹரடியா இக்கிது.


நவாப்:   சரிஅதுக்கு ஏன் கடேசி படி கிட்ட அசால்ட்டா நின்னுட்டு இக்கிரிங்க,  கொளத்துலே உலுந்துடகிடந்திட போறிங்க மேலே ஏறி வாங்க. 


ஹைதர் அலி:   என்ன சொன்னிங்க..?


 

நவாப்:    அசால்ட்டா நின்னுட்டு இக்கிறாரேமேலே ஏறி வாங்கன்னு சொன்னேன்.


ஹைதர் அலி:   மேலே ஏறி வர சொன்னது சரி தான்ஆனா அசால்ட்-ங்குற வார்த்தை தான் தப்பு


நவாப்:  ASSAULT தானே?


ஹைதர் அலி:  ஆமாம்இதுக்கு அர்த்தம் என்னான்டா  தாக்கு(தல்) அப்டிங்குறது தான்,  நாம நெனச்சிட்டு இக்கிற மாதிரி அலட்சியம்-ங்குற அர்த்தம் இல்லே


கான்சாபு:   அப்படியா..!!! 


ஹைதர் அலி:  . .ம்.. நம்மூர்லே மட்டும் இல்லேநெறய பேர் இதுக்கு அலட்சியம் தான் அர்த்தம்-ன்னு நெனச்சிட்டு இக்கிறாங்க


திப்புசுல்தான்:   ரொம்ப தேங்க்ஸ் 


கான்சாபு:   சரிநாளக்கி சந்தைக்கி போம்போது என்னையும் கூப்புடுங்க , எல்லாரோம் ஒன்னா போலாம்


திப்புசுல்தான்:   சிதம்பரம் வட்டாரத்துலேயே  நம்மூர்லே தான் பெரிய சந்தை கூடுது, அதனாலே ஏன் இங்க உழவர் சந்தை ஆரம்பிக்கக்கூடாது


நவாப்:   அட..இது நல்ல ஐடியாவா இக்கிதேவெள்ளாத்து பாலம் தெறந்தாச்சின்னாமக்கள் போக்குவரத்து அதிகமாகி பிஸினஸும் நல்ல நடக்கும்.


ஹைதர் அலி  ஆமாம்...ஆமாம்..உழவர் சந்தை ஆரம்பிச்சாச்சின்னா வெவசாயிங்களுக்கும் அது நல்ல ஒதவியா தான் இக்கோம்.


கான்சாபு:   நீங்க சொல்றது சரி தான்மக்களுக்கும் காய்கறி வெல கொறச்சலா கெடக்கோம்இந்த சேதிய நம்ம ஜமாஅத் தலைவரோட கவனத்துக்கு கொண்டு போனா,  நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.


திப்புசுல்தான்:   நம்ம ஜமாஅத் தலைவரே பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்டாவும் இக்கிறதாலே, கவுன்சில்  மீட்டிங்லே தீர்மானம் நெறவேத்தி கவ்ர்மெண்டுட்டுக்கு அனுப்புவாங்க.


நவாப்:   மழ தூத்த போடுதுகெளம்புவோமா


கான்சாபு:  நா எடுத்த,  வெள்ளாத்து பாலம் லேட்டஸ்ட் போட்டோஸ் இருக்கு பாத்துட்டு கெளம்பலாமே

 

திப்புசுல்தான்:  அக்கரை பாலத்து போட்டோவே அக்கறையா பாக்குலாம் தான் ஆனா மழ அதிகமாவப்போது, அதால இப்பவே கெளம்பலாம்


ஹைதர் அலி:   சரி, அப்படின்னா, அந்த போட்டோஸ mypno ஆபிஸுலே கொடுத்துடுங்கஅவங்க நெட்-லே போடுவாங்க,  ப்போ பாத்துக்கலாம்.


(மழைச்சாரல் அதிகரிக்கவே  கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)  

செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010 12:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh