MYPNOTue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அசால்ட்டா நின்னுட்டு இக்கிரிங்க..?!

  • PDF

ஹைதர் அலி:   அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்குமுஸ் ஸலாம்,

கான்சாபு:    என்னாங்க , நா வந்ததுலேந்து பாக்குறேன், ஒரு மாதிரியா இக்கிரிங்க

திப்புசுல்தான்:   இன்னைக்கி தாவத்துலே பிரியாணி சாப்டத்துலேந்து திட்டுமுட்டு தெஹரடியா இக்கிது.

நவாப்:   சரி, அதுக்கு ஏன் கடேசி படி கிட்ட அசால்ட்டா நின்னுட்டு இக்கிரிங்க,  கொளத்துலே உலுந்துட, கிடந்திட போறிங்க மேலே ஏறி வாங்க.

ஹைதர் அலி:   என்ன சொன்னிங்க..?


நவாப்:    அசால்ட்டா நின்னுட்டு இக்கிறாரே, மேலே ஏறி வாங்கன்னு சொன்னேன்.

ஹைதர் அலி:   மேலே ஏறி வர சொன்னது சரி தான், ஆனா அசால்ட்-ங்குற வார்த்தை தான் தப்பு

நவாப்:  ASSAULT தானே?

ஹைதர் அலி:  ஆமாம், இதுக்கு அர்த்தம் என்னான்டா  தாக்கு(தல்) அப்டிங்குறது தான்,  நாம நெனச்சிட்டு இக்கிற மாதிரி அலட்சியம்-ங்குற அர்த்தம் இல்லே

கான்சாபு:   அப்படியா..!!!

ஹைதர் அலி:  . .ம்.. நம்மூர்லே மட்டும் இல்லே, நெறய பேர் இதுக்கு அலட்சியம் தான் அர்த்தம்-ன்னு நெனச்சிட்டு இக்கிறாங்க

திப்புசுல்தான்:   ரொம்ப தேங்க்ஸ்

கான்சாபு:   சரி, நாளக்கி சந்தைக்கி போம்போது என்னையும் கூப்புடுங்க , எல்லாரோம் ஒன்னா போலாம்

திப்புசுல்தான்:   சிதம்பரம் வட்டாரத்துலேயே  நம்மூர்லே தான் பெரிய சந்தை கூடுது, அதனாலே ஏன் இங்க உழவர் சந்தை ஆரம்பிக்கக்கூடாது

நவாப்:   அட..இது நல்ல ஐடியாவா இக்கிதே, வெள்ளாத்து பாலம் தெறந்தாச்சின்னா, மக்கள் போக்குவரத்து அதிகமாகி பிஸினஸும் நல்ல நடக்கும்.

ஹைதர் அலி:   ஆமாம்...ஆமாம்..உழவர் சந்தை ஆரம்பிச்சாச்சின்னா வெவசாயிங்களுக்கும் அது நல்ல ஒதவியா தான் இக்கோம்.

கான்சாபு:   நீங்க சொல்றது சரி தான், மக்களுக்கும் காய்கறி வெல கொறச்சலா கெடக்கோம், இந்த சேதிய நம்ம ஜமாஅத் தலைவரோட கவனத்துக்கு கொண்டு போனா,  நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.

திப்புசுல்தான்:   நம்ம ஜமாஅத் தலைவரே , பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்டாவும் இக்கிறதாலே, கவுன்சில்  மீட்டிங்லே தீர்மானம் நெறவேத்தி கவ்ர்மெண்டுட்டுக்கு அனுப்புவாங்க.

நவாப்:   மழ தூத்த போடுது, கெளம்புவோமா

கான்சாபு:  நா எடுத்த,  வெள்ளாத்து பாலம் லேட்டஸ்ட் போட்டோஸ் இருக்கு பாத்துட்டு கெளம்பலாமே

திப்புசுல்தான்:  அக்கரை பாலத்து போட்டோவே அக்கறையா பாக்குலாம் தான் ஆனா மழ அதிகமாவப்போது, அதால இப்பவே கெளம்பலாம்

ஹைதர் அலி:   சரி, அப்படின்னா, அந்த போட்டோஸ mypno ஆபிஸுலே கொடுத்துடுங்க, அவங்க நெட்-லே போடுவாங்க,  அப்போ பாத்துக்கலாம்.

(மழைச்சாரல் அதிகரிக்கவே  கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)  

புதன்கிழமை, 20 ஜனவரி 2010 17:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # அப்துல் ஹமீது 2010-01-20 06:52
நல்லான்சிப்பா இந்த மேட்ரு, இதுமாரி அடுத்தவார தலைப்பா சால்டுப்பு (சால்ட்-உப்பு) கதய பாக்கலாமா? நம்மஊரு காரஹகிட்ட பிரபளமான வார்த்தைல இது!

இனிமேல அலட்சியம்கிற வார்த்தக்கி:

Dontempt, Disdain, Indifference, levity
இதுல ஏதாவதொன்ன பயன்படுத்துங்க.

"அலட்சியம் செய்"கிறவார்த்தைக்கு
Disdain, pooh-pooh
இதுல ஏதாவதொன்ன பயன்படுத்துங்க.

சரி... எனக்கும் வேலக்கிது... நாம அடுத்தவார கொளத்துமோட்டுல பாக்கலாம்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Nazir Ubaidullah 2010-01-20 08:57
இதை படிக்கும் போது மலையாள சேனலில் வரும் "முன்சீ " என்கிற தொடரை நெனப்புக் காட்டுற மாதிரியுள்ளது.இருந்தாலும் சூப்பரா உள்ளது ! சபாஷ் சகோ. ஹம்துன் அப்பாஸ் !!

இன்று ஒரு நல்ல செய்தியை ஜமாஅத் தலைவருக்கு எடுத்து வைத்துள்ளீர்கள் ! இதை தலைவருக்கு கொண்டு சேர்க்கும் பணியை யார் செய்வது ? உழவர் சந்தை வந்தால் ஊருக்கும் நல்லது விவசாயிகளுக்கும் நல்லது.

தொடரவும் ! வாழத்துக்கள் !!

நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்
Reply | Reply with quote | Quote
 
 
0 # Mohamed kasim 2010-01-20 09:24
Ulloor santhaillirunthu Ulavar santhaikku mantrum seidi sirappaaga irunthathu

Mohamed Kasim .K
Dubai.
Reply | Reply with quote | Quote
 
 
0 # நௌஷாத் அலி 2010-01-20 13:07
சலாம் சகோ.ஹம்தூன் அப்பாஸ் அவர்களே..

கருத்து மற்றும் நினைவூட்டல் கலந்த இந்த நகைச்சுவை தொகுப்பை படிக்க ஆவலாக வுள்ளது..இனி வரும் தங்களது தொகுப்பில் சிதைந்து கிடக்கும் நமதூர் ஒற்றுமை பற்றி நகைச்சுவையாக தொகுப்பு எழுதுங்கள்..


நௌஷாத் அலி
அல் கோபார் - சவூதி அரேபியா
Reply | Reply with quote | Quote
 
 
0 # Haja fakrudeen 2010-01-20 16:55
NICE TO READ

KEEP IT UP.

DO YOU PEOPLE REALLY GOING TO INFORMED THE PRESIDENT OR JUST TALKING AT KOLATHUMODU?

HAJA FROM DUBAI.... :D
Reply | Reply with quote | Quote
 
 
0 # நௌஷாத் அலி 2010-01-21 03:48
சகோ.அப்துல்ஹமீத் சொன்னது போன்று...... இன்னும் சில ஒரே அர்த்தம் கொண்ட தமிழ் ஆங்கில வார்த்தை நடைமுறையில்... இவைகளை கலந்து நகைச்சுவை சேகரித்து கருத்து சொல்லலாம்....

1. SALT உப்பு
2. GATE கதவு
3. நடு CENTRE
Reply | Reply with quote | Quote
 
 
0 # ஜித்தாவிலிருந்து சுஹைல் 2010-01-22 12:49
:idea: சூப்பரா எழுதுரீங்களே ரூம் போட்டு யோசிப்பீங்களோ

அடுத்த கொளத்துமேடு எப்போது? :-)
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh