MYPNO



Tue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அப்பறம் ஒரு சின்ன சேதி...

  • PDF

வாப்பு: அஸ்ஸலாமு அலைக்கும் பத்ரு

பத்ரு: வ அலைக்குமுஸ் ஸலாம் வாப்பு! எங்கே முத்து மரைக்கானே காணோம்?
 
வாப்பு: கிழுர் நபி பள்ளில தொழுதுட்டு வரேன்னு சொன்னான்.. தோ வந்துட்டான்...
 
முத்து மரைக்கான்: அஸ்ஸலாமு அலைக்கும்
 
வாப்பு & பத்ரு: வ அலைக்குமுஸ் ஸலாம்
 
வாப்பு: ஏன் பத்ரு...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ சொல்ல ஆரம்பிச்சியே, என்னா அது?

பத்ரு: அதுவா.. என் தங்கச்சி,  நம்ம கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல படிக்கிறாஹல்ல... அங்கே ஹெட் மாஸ்டர்-ல ஆரம்பிச்சு ஆறாம் கிளாஸ் வரைக்கும்  ஆம்பள வாத்தியார்ங்களும் நெறைய பேர் இக்கிறாங்களாம்.... அது மட்டுமில்லாம முக்காடு போடாமத்தான் கிளாஸ்ல உக்காறனும்னு சொல்றாங்களாம்.. அத உம்மாட்ட சொல்லி அழுவுனாஹ...

முத்து மரைக்கான்:  கொஞ்ச நாளக்கி முன்னாடி கூட ஒரு ஆம்பள வாத்தியார் இன்னொரு ஆம்பள வாத்தியார்ட்ட அசிங்கமா நடந்த சேதி வந்து, ஆம்பள வாத்தியாரயெல்லாம் மாத்திட்டு நிறய பொம்பள டீச்சர ஏற்பாடு பண்ணுவோம்னு சொன்னங்களே... அப்ப அந்த மாதிரி நடக்கலயா?

வாப்பு: ..ம்ஹும் அப்படி எதுவும் பெருசா நடக்கல... .

முத்து மரைக்கான்:  அப்ப என்னத்தான் செய்றது?

பத்ரு: இன்னும் கொஞ்சம் நாள்ல நம்மூர்ல பெற்றோர் மாநாடு நடக்குதல்ல... அந்த மாநாட்ட ஏற்பாடு செய்றவங்கிட்ட போய் நம்ம ஊர் பள்ளிக்கூடங்கள பத்தி உள்ள கொறபாடுங்க எல்லாத்தையும் எழுதி குடுப்போம். அத அவங்க பார்த்துட்டு மாநாட்டுலேயே தீர்மானமா போட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவாங்க.

முத்து மரைக்கான்: பத்ரு சொல்றதும் நல்ல ஐடியாதான்... அத மாதிரியே செஞ்சுடுவோம்... அதுக்கு மொத வேலயா நம்மூர் பள்ளிக்கூடங்கள்ல நடக்குற இந்த மாதிரி பிரச்சினைகள கேட்டு தெரிஞ்சுப்போம்...ஓகேயா?

வாப்பு: அப்பறம் ஒரு சின்ன சேதி..... நம்ம கிழுர் நபி பள்ளி இருக்கே அந்த ஆத்தங்கரைத் தெருவுக்கு "ஸாஹிப் மியான் தெரு" அப்படின்னு நம்ம தமிழக அரசின் பதிவுத் துறை வெப்சைட்ல போட்டிருக்கு

பத்ரு: அடடே.... மிர்ஜா மியான் தெருன்னா சின்னத் தெருன்னு தெரியும், நீ சொல்றத மேட்டரு புதுசா இருக்கே

முத்து மரைக்கான்: சரி.. சரி.. மஹ்ரிபுக்கு நேரமாயிடுச்சி இன்ஷா அல்லாஹ் நாளக்கி பாக்கலாம்...

புதன்கிழமை, 27 ஜனவரி 2010 11:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # நௌஷாத் அலி 2010-01-27 04:57
நிச்சயமாக நாம் இதற்குள்ள ஏற்பாட்டை செய்தாகவேண்டும் ..அதற்கு நேரம் வெகு அருகாமையில்........ பெற்றோர்கள் மாநாடு என்ற வாகனத்தை இன்சா அல்லாஹ் எதிர்நோக்கி இருக்கிறோம் ..
அதில் பிரயாணம் செய்து உரிய இடத்தை சென்றடைவோம..
நன்றி கலீல் அவர்களே ..

நௌஷாத் அலி - Saudi Arabia
Reply | Reply with quote | Quote
 
 
0 # Nazir Ubaidullah 2010-01-27 08:38
இந்த வார கொளத்துமோட்டில் விவாததுக்கு எடுத்து கொண்ட பொருள் பெற்றோர்கள் மாநாடு ! சபாஷ் !!

அதே சமயம் வாரம் வாரம் இந்த தொடரின் தலைப்பை "கொளத்துமோடு" என்றே தலைப்பிட்டு வரவும்.அப்போது தான் வாசிப்பவர்களுக்கு அடையாளம் காண வசதியாக இருக்கும்.மேலும் கொளத்துமோட்டில் கூடி விவாதிக்கும் நபர்களின் பெயரும் தொடர்ந்து ஒரே பெயராக வந்தால் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இத்தொடரை வழங்க முடியும்.ஆசிரியர் குழு இதை பரிசீலனைக்கு எடுத்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh