MYPNOTue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஜமாஅத் ஆம்புலன்ஸ் எங்கேயோ போது...

  • PDF

ஜஹாங்கீர்:   அஸ்ஸலாமு அலைக்கும்!

எல்லோரும்:  வ அலைக்குமுஸ் ஸலாம்!

ஜஹாங்கீர்:   என்ன விஷேசம்? நம்ம லால்பேட்டை லத்தீப், மங்கலம்பேட்டை மன்சூர் இவங்கலெல்லாம் வந்திருக்காங்க!

லத்தீப்:       காஜியார் தெரு ஷாஜஹான் பேரன் கல்யாணத்துக்கு வந்தோம்.

பாபர்:         என்ன கான்சாபு மொபைல் போனயே பாத்துகிட்டு இருக்கிங்க, என்ன விஷயம்?

கான்சாபு:     இல்லே…என் மொபல் போன்லே அஞ்சாம் நம்பர் பட்டன் மேலே ஒரு புள்ளி வச்சிக்கிறாங்களே…   அது எதுக்குன்னு தான் தெரிலே, அத தான் பாத்துகிட்டு இக்கிறேன். ஒளரங்கசீப்:   அட நீங்க வேற, உங்க மொபல்லே மட்டும் தான் அப்படி இக்கிதுன்னு நெனக்கிறிங்களா?,   அது கண் பார்வை இல்லாதவங்க மொபல் போன் யூஸ் பண்றதுக்கு வசதியா எல்லா  மொபல்லேயும்  அஞ்சாம் நம்பர் பட்டன் மேலே இப்புடி தான் புள்ளி, கோடு எதாவது இருக்கோம்,  டெலிபோன்லே கூட இத பாக்கலாம்.

பாபர்:         இருங்க…இருங்க...எதோ சத்தம் கேக்குது

கான்சாபு:      ஜமாஅத் ஆம்புலன்ஸ் எங்கேயோ போது?

லத்தீப்:      முஸ்லிம் அதிகமா இருக்குற எல்லா ஊர்லேயும், மாநில அளவுல இருக்குற தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத்,  இவங்க   போன்ற   இயக்கம் சார்புலே தான் ஆம்புலன்ஸ் இருக்கு, ஆனா உங்க ஊர்லே மட்டும் தான் உங்க ஜமாஅத்லேயே  ஆம்புலன்ஸ் இருக்கு.

மன்சூர்:       லத்தீப் சொல்றது சரி தான், ஆமா…இன்னுமொரு ஆம்புலன்ஸ்-கூட இருக்குறதா கேள்விப்பட்டேனே…

ஜஹாங்கீர்:    ஆமாம், இப்ப ரெண்டு ஆம்புலன்ஸ் இருக்கு, ஆனா ஜமாஅத் ஆபிஸ் கட்டுடம் தான் வசதியா இல்லே, புதுசா ஒரு ஆபிஸ் கட்டுனா நல்லா இருக்கோம்

லத்தீப்:        பல முஸ்லிம் ஊர் ஜமாஅத்-க்கு உங்க ஊரு ஜமாஅத் தானே முன்மாதிரியா இருக்கு, பைத்துல்மால் மூலமா  சிறுதொழில் செய்ய வட்டி இல்லாமே கடனெல்லாம் கொடுக்குறிங்கன்னு மன்சூர் சொன்னாரு கேக்கவே சந்தோஷமா இருக்கு.

பாபர்:          ஜஹாங்கீர் சொல்ற படி  ஜமாஅத் ஆபிஸூக்கு ஒரு புது கட்டுடம் அவசியம் தேவை தான்.

ஒளரங்கசீப்:   இன்ஷா அல்லாஹ், ஜஹாங்கீர் ஆசைப்பட்டது நடக்க எல்லோருக்கும் ஆசை தான்

ஒலிபெருக்கி:  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மஹ்மூதுபந்தர், தாருல் கஜா ஷறா ஷரீப் மஹ்கமா நிக்காஹ் பதிவு தப்தர் நமூனா,  போர்ட்நோவோ, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்,  ரிஜிஸ்டர் நம்பர் 58, பேஜ் நம்பர் 36………..

கான்சாபு:       நிக்காஹ் வாசிக்க ஆரம்பிச்சாச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு நாம இங்கேயே உக்காந்து பேசிட்டுருக்கோம். 

பாபர்:          சரி……சரி….வாங்க கெளம்பலாம்.

(எல்லோரும் திருமணத்திற்கு செல்லவே கொளத்துமோடு கூட்டம் கலைகிறது)

புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # MEERA HUSSAIN MARICAR 2010-02-03 07:56
ஜமாஅத் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அவசியம் தேவை தான். ஜஹாங்கீர் ஆசை நிறைவேற துஆ செய்வோம்.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # கலீல் பாகவீ 2010-02-03 08:03
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....

நல்ல அருமையான யோசனை...! :D

அப்படி ஜமாஅத் விரிவாக்கம் செய்ய புதிய கட்டிடம் கட்டப்பட்டால் (ஓரியண்டல் பள்ளி இருக்கும் இடத்தில் பள்ளிக்கூட பயன்பாட்டிற்கே விட்டுவிட்டு மீதியுள்ள இடத்தில் தற்போதைய ஜமாஅத் அலுவலகம் மற்றும் பழைய தபால் அலுவலகம்) அதை ஏன் ஒரு வணிக வளாகம் போன்று இரண்டடுக்கு அல்லது மூன்றடுக்கு கட்டிடமாக கட்டக்கூடாது?

தரைதளத்தில் அரசாங்க அலுவலகம் (ஒன்றோ அல்லது இரண்டோ - தபால் அலுவலகம் / வங்கி / சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் போன்றவை)

முதள் தளத்தில் ஜமாஅத் அலுவலகம் மற்றும் ஜமாஅத் சார்ந்த செயல்பாடுகள் அல்லது நம் சமுதாய அமைப்புகள் சிறிய நிகழ்ச்சிகள் நடத்த குறைந்த வாடகையில் மீட்டிங் ஹால் போன்றவை...

இரண்டாம் தளத்தில் நம் சமுதாய மக்கள் பயிற்சி பெற தொழில் முறை பயிற்சிக்கூடம் (கம்ப்யூட்டர் / டைப்ரைட்டிங் / தையல் / ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவை....

அது மட்டுமன்று நம்மூரில் பல பள்ளிவாசல்களின் இடங்கள் யாருக்கும் பயன்படாமல் இருப்பதால் அந்த இடங்களில் வணிக வளாகங்கள் அல்லது தொழிற் பயிற்சி கூடங்கள் கட்டி சமுதாய மக்களுக்கு பயன்தரும் விதத்தில் மாற்றியமைக்கலாம்.

ஊர் பெரியவர்கள், முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள் எல்லோரும் ஒன்றுபட்டு முடிவெடுத்தால் எதற்கெடுத்தாலும் சிதம்பரம், கடலூர் என்று அலைய வேண்டிய சூழல் ஏற்படாது இன்ஷா அல்லாஹ்...

இங்கு குறிப்பிட்டவை சாதாரண செய்திகள்தான்.

இன்னும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள், செயற்பாடுகள் போன்றவை நம் நண்பர்களிடத்தில் நிறைய உண்டு. அவை அனைத்தும் வெளிப்பட்டால் நிச்சயமாக நம் சமுதாய மக்களுக்கு பலனுண்டு.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # நன்பன் 2010-02-03 13:27
இரண்டு வார இடைவேளிக்கிபின் ஒர் நல்ல கருத்துடன் வந்துள்ளீருக்கீங்க போல...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?!

அடுத்த வார கொளத்துமேடு தலைப்பை முன்கூட்டியே கொடுத்தா நல்லா இருக்குமேன்?
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Nazir Ubaidullah 2010-02-03 14:56
சுனாமி நிகழ்வுக்கு பிறகு ஜமாஅத்துக்கு கட்டிடம் அவசியம் என்பதை உணர்நது அப்போதே தலைவரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பபட்டது.ஜமாஅத்திற்கு என்று ஒரு சொந்த இடமில்லாத காரணத்தால் அது சாத்தியபடாது என்றார்கள்.

மீண்டும் ஜமாத்திற்க்காக ஒரு இடம் வாங்கலாம் என்கிற யோசனை சொல்லப்பட்டதற்க்கு தற்போது உள்ள இடம் தான் ஜமாஅத் செயல்பாட்டிற்க்கு பொருத்தமான இடமாக உள்ளது என்றும் (ஊரின் மையம், மீராப்பள்ளியை ஒட்டியுள்ளதால் அதற்க்கு தனிச் சிறப்பு) சொல்லப்பட்டது.

தற்போது கொளத்துமோட்டில் இந்த செய்தி விவாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த கோரிக்கைக்கு உயிருட்டப்பட்டுள்ளது. இதை ஜமாஅத் கவனத்தில் எடுத்துக் கொணடால் நல்லது.

ஆமாம ! கொளத்துமோடு பகுதி-1 ல் அதாவது
வெள்ளாற்று பாலத்தின் போட்டோக்களை mypno news ல் கொடுத்து விட்டு போகிறோம் அவர்கள் போட்டு விடுவார்கள் என்று சொன்னீர்களே ! அது என்ன ஆனது ?

நஜீர் உபைதுல்லாஹ்
Reply | Reply with quote | Quote
 
 
+1 # கவிமதி 2010-02-06 17:40
கொளத்துமேடு பகுதியில் இடம்பெரும் செய்திகள் வெரும் அரட்டையாக மட்டும் இருந்துவிடாமல் நம் ஊருக்கு தேவையான பல நல்ல கருத்துகளை விவாதிப்பது சிறப்பு.

தொடர்க உங்கள் கொளத்துமேட்டு விவாதங்களை
வாழ்த்துகள்

கவிமதி
துபாயிலிருந்து
Reply | Reply with quote | Quote
 
 
+1 # P.Balu 2011-11-07 18:00
Nallauruku sir
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh