MYPNOTue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தலைநகரத்தில் ஒரு தேவை!

  • PDF

கொளத்துமோடு - 5 

ஒளரங்கசீப்: அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்

பாபர்: எதோ தமுக்கு போட்ற சவுண்டு கேக்குது  கொஞ்சம் அமய்தியா இறிங்க, என்னான்னு கேக்குலாம்.

குரல்:   ஒரு ஆட்டு தலை, நாலு கால், ஒரு கொடல், ஒரு ஈரல் ஒரு செட்டு யரநூறுரூபா நாள காலைலே சின்னக்கடைலே விக்கப்படும்….

ஷாஜஹான்: நாளக்கி சின்னக்கடை மார்க்கெட்டுக்கு போனிங்கன்னா என்னையும் கூப்புடுங்க, நானொம் வரேன். 

ஜஹாங்கீர்:  ஆமா சின்னக்கடை மார்க்கெட்டுன்னு சொன்ன ஒடனே தான் எனக்கு ஞாபகம் வருது, அங்கே அவசியம் ஒரு டாய்லெட் வசதி வேணுங்க, மார்க்கெட்லே இருக்குற வியாபாரிங்க அப்றம் மக்கள் எல்லார்க்கும் ஒதவியா இறிக்கோம்.

பாபர்: ஆமா(ம்) நீங்க சொல்றது சரி தான் சின்னக்கட மார்க்கெட்ல டாய்லெட் அவசியம் தான்.

ஒளரங்கசீப்:  அங்க மட்டுமில்ல சந்தரான் கோயில் தெருவுலேயும் தான் ஒரு டாய்லெட் அவசியம்.

ஜஹாங்கீர்:          அங்க டாய்லெட் வசதி இல்லாம இக்கிறதாலே உள்ளுர் வெளியூராளுவோ, ஆஸ்பத்திரிக்கி வர அக்கம் பக்கம் கிராமத்து ஜனங்க எல்லாரும் அவசரத்துக்கு ஏகாம்பர ஆசாரி சந்த யூஸ் பண்றதாலே அந்த சந்துக்கு பேரே மூத்திர சந்துன்னு மாறிடிச்சி.

பாபர்: சந்தரான் கோயில் தெருவுக்கும் நெல்லுக்கடை தெருவுக்கும் யடயிலே ஒரு சந்து இக்கிதே அந்த சந்து-க்கு பேர்  தானே ஏகாம்பர ஆசாரி சந்து, 

ஜஹாங்கீர்:       ஆமா….அந்த சந்துக்கு பேர் தான் ஏகாம்பர ஆசாரி சந்து

ஷாஜஹான்:   “தலைநகரத்தில் ஒரு தேவை”-ன்னு சொல்லுங்க

ஒளரங்கசீப்:    உங்கள மாதிரி பேச நான் ஒண்ணும் எலக்கியவாதி இல்லே இருந்தாலும் “தலைநகரத்தில் ஒரு தேவை”ன்னு நீங்க சொல்றது நல்லா தான் இக்கிது

ஜஹாங்கீர்:    சரி மெடிக்கலுக்கு போறேன், நா கெளம்புறேன்,

பாபர்:                எல்லோரும் கெளம்பலாம், டைம் ஆயிடிச்சி
(கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2010 03:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # ihsan_pno 2010-02-10 04:41
Assalaamu Alaikum,

Hamdun Abbas migavum mukkiyamaana oru visayathai nalla murayil vilakki ullaar, Sila neram thaan andha theru suthame seyya paduginradhu matra nerangalil andha theru pakkam yaarume pogave mudiyaadhu. Hamdun Abbasin pathivugal thodara vaazhthuginren.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Nazir Ubaidullah 2010-02-10 14:46
எதை அடக்கினாலும் இதை அடக்க முடியாது என்பார்கள் ! அது மட்டுமில்லை தற்போது நிரழிவு நோய் விகதமும் கூடி விட்டது.சின்னக்கடை மார்கேட்டை விட அவசர தேவை சஞ்சீராயர் கோவில் சந்திப்பில் தான் என்பது என்னுடைய கருத்து.காரணம் ஆஸ்பத்திரி,ரிஜிஸ்டர் ஆபீஸ்,பஸ் நிலையம், பல வங்கிகள்,ஜெனிபாஹ் பிரிண்டர்ஸ்,கடைத் தெரு என ஊருக்கே மையப் பகுதியாக உள்ளது.சில நேரங்களில் மணிக் கணககில் காத்து இருக்க வேண்டியும் உள்ளது.வெளியூர் மக்களும் அதிக அளவில் கூடுமிடமாக உள்ளதால் அதற்க்கு முன்னுரிமை கொடுக்கலாம்.அதுவும் கட்டண கழிப்பிடமாக அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊரின் மையப்பகுதி அவ்வளவு தான் ..........! ! ! சரி ! அந்த பகுதியில் ஒரு இறையில்லம் (பள்ளிவாசல்) அமைக்கனும் என்பது ஆசிரியரின் (ஹம்துன் அப்பாஸ்) நீணட் நாளைய ஆசை ! அதையும் கவனத்தில் வைத்தால் நல்லது !

நஜீர் உபைதுல்லாஹ்
Reply | Reply with quote | Quote
 
 
0 # நௌஷாத் அலி 2010-02-11 03:24
சகோதரர் ஹம்தூன் அப்பாஸ் அவர்களின் சிந்தனை கருத்தில் கொள்ளவேண்டும்..நல்ல யோசனை..அவசியமும் கூட..
கட்டண கழிப்பிடம் சஞ்சீவிராயர் கோவில் தெரு முச்சந்தி சின்னக்கடை மார்கட் ,பஸ் நிலையம்,இடங்களில் அமைப்பது நல்லது..அதற்குண்டான் தேவைகளை நமதூர் பேரூராட்சி செய்து முடித்திடமுன்வரவேண்டும்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # muja 2010-02-11 04:54
Ya I agreed it
Reply | Reply with quote | Quote
 
 
0 # நன்பன் 2010-02-11 05:01
//தலைநகரத்தில் ஒரு தேவை! //

அவசியமான அவசர (பின்னே இதற்க்கெள்ளாமா? 108க்கு போன் போட்ற நெலமெ வந்துடக்கூடாது? ) தேவைதான் இது!

அடுத்த தலைப்பு...?
Reply | Reply with quote | Quote
 
 
0 # Novian4U 2010-02-11 09:16
Dear mypno! நல்ல யோசனை. வரவேற்கிறேன்... கொளத்துமோடு இன்னும் சூடான தகவல் தரனும் விவாததத்துடன். I Love MYPNO.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh