MYPNO



Tue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இப்படி வேகமா போறது நல்லா இல்லே

  • PDF

கொளத்துமோடு - 6

பாபர்:  அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்

ஜஹாங்கீர்: எப்பவுமே இங்கேயே உக்காந்து பேசிக்கிட்டிக்கிறது அலிப்பா இருக்கு.

ஷாஜஹான்: சரி அதுக்கு என்ன செய்ய சொல்றிங்க

ஜஹாங்கீர்: அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வரலாமேன்னு சொல்றேன்

ஒளரங்கசீப்: சரி வாங்க நடக்கலாம்...

ஜஹாங்கீர்: அட.. நம்ம கோப்பெருஞ்சோழன் அண்ணன் வராரு

ஷாஜஹான்: என்ன அண்ணே எங்கே போயிட்டு வரிங்க

கோப்பெருஞ்சோழன்: எல்லாரும் நல்லா இருக்கிங்களா?  நா,  வி.ஏ.ஒ.-வ பாக்குறத்துக்காக அகரத்துக்கு போய்ட்டு அப்படியே வரும் போது கடைத்தெருக்கும் போய்ட்டு வரேன்.

ஒளரங்கசீப்: வி.ஏ.ஒ, ஆபிஸ், எலிமெண்ட்ரி ஸ்கூல், லைப்ரரி எல்லாம் வண்டிக்கார தெருலே கேர்ள்ஸ் ஸ்கூல் இருந்த எடத்துக்கு வருதுன்னு ரொம்ப நாளக்கி முன்னாடியே சொன்னாங்களே

பாபர்:  சொன்னாங்க தான் ஆனா, என்ன காரணமோ தெரிலே இதுவரைக்கும் அந்த ஆபிஸ்லாம் வண்டிக்கார தெருக்கு எடம் மாறல.

ஜஹாங்கீர்: மக்களுக்கு ரொம்ப செரமாம இருக்குமே,

ஒளரங்கசீப்: அதுக்காக தான் எடத்த மாத்துறதா முடிவு செஞ்சாங்க, இப்ப அதுல அவுங்களுக்கு என்ன செரமமோ தெரில

கோப்பெருஞ்சோழன்: தம்பி, நா கெளம்புறேன், அப்றமா பாக்குலாம்

பாபர்:  சரிண்ணே

ஒலி: பைக் ஒன்று வேகமாக செல்லும் ஒலி எழுகிறது

பாபர்:  முன்னெல்லாம் பெரியத்தெரு பக்கமே பைக் வராது, இப்ப N H ரேஞ்சுக்கு இந்த ரோடு இக்கிறதாலே, நெறய  பேர்  பைக்-ல ஸ்பீடா போறாங்க

ஜஹாங்கீர்: இப்படி வேகமா போறது நல்லா இல்லே,

ஒளரங்கசீப்: இங்கே இவுங்க ஸ்பீடா வீலிங், ஊட்டுலே பேரண்ட்ஸ் ஃபீலிங்

ஷாஜஹான்: இங்கேயே நில்லுங்க நானோம், பாபரும் போய் பஹோடா வாங்கிட்டு வரோம்

 

(பக்கோடா வாங்கி கொண்டு, கொளத்துமோட்டு கூட்டம் மெரைன் பூங்கா-நோக்கி செல்கிறது)

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010 09:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # நன்பன் 2010-02-17 12:05
நல்லாருக்கு...!

ஆமா இப்பெல்லாம் நம்மூர்ல பைக்ல எல்லோரும் ஸ்பீடாத்தான் போறாங்க அதுவும் வீலிங் வுட்டுகுட்டு (அந்த சாகசத்த..?!) பார்க்கனும்னா மெரீன் போங்க பார்க்கலாம்..!
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh