MYPNOTue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சராசரி மனுஸன விட ஆயிரங்கணக்குல நம்ப ரிஸ்கு யெடுக்குறோமா?

  • PDF

கொளத்துமோடு - 9

ஜஹாங்கீர்: அஸ்ஸலாமலைக்கும்

ஷாஜஹான்: வலைக்கும்ஸலாம்

ஜஹாங்கீர்: யன்னா நீங்க ஒன்டி தனியா வொக்கன்ட்டுகிறீங்க?

ஷாஜஹான்: நம்ப பாபர் வூட்டு பக்கத்துல மய்த்தாச்சல்ல... யெல்லம் அங்க போனோம்.... லேட்டா ஆவிடுச்சினு யெல்லாம் வூட்டுக்கு போயிட்டாங்க... நா மட்டும் ச்சும்மா வந்தேன்.

ஜஹாங்கீர்: அட ஆமாங்க! நானோம் காலயிலயே போனோன்னு நெனெச்சேன் ஓ.டி.லேந்து விருந்தாளி வந்துட்டதால போவ முடியாம போயிடுச்சி.

ஷாஜஹான்: அப்டியா?

ஜஹாங்கீர்:ஆமா இந்த மய்த்துக்கு கேன்சர் இந்துச்சாமே! நெசமாவா?

ஷாஜஹான்: ஆமாமா... இப்பத்தான் நெறய கேன்சர் கேசாத்தனே இக்கிது.... ஒன்னம் சொல்லாப்போனா செல பேரு மறச்சிடுறாஹ....

ஜஹாங்கீர்:இப்ப இறிக்கிற காலம் அதமாரி ஆயிடுச்சில்லே.....

ஷாஜஹான்: அப்படி கரெக்ட்டா சொல்ல முடியாது. ஆனா பக்கத்துல இக்கிற சிப்காட் ஒரு முக்கியமான காரண(ம்)ன்டு நெறய சமூக அமைப்பு யெல்லம் ரி்ப்போர்ட் கொடுக்குது. ஆனா யாரோம் பெருசா கண்டுகறது இல்லே...

ஜஹாங்கீர்: நீங்க சொல்ற மாதிரி நெறய பேர் சொல்றாங்கதான்.... ஆனா எனக்கு சரியா புரியமாட்டேங்கிது... அது எப்டி? நம்ப தள்ளிதானே இக்கிறோம்.

ஷாஜஹான்: அட யன்னாங்க நீங்க... ரோடு வழியாத்தான் சுமார 25 கி.மீ. தூரம்... வானத்து வழியா பாத்தீங்கன்னா ரொம்ப கம்மீங்க. அது மட்டும் கெடயாது சிப்காட்டுல இக்கிற நெறய ஃபேக்ட்ரிட கச்சடா கழிவு யெல்லாமே நம்ப கடல்லதான் தானே வந்து கலக்குது.

ஜஹாங்கீர்: அதனால...?

ஷாஜஹான்: அதனால யென்னா....  நம்ப யெல்லாம் சாப்டுற மீனால நமக்கு மத்தவங்களவிட கேன்சர் வற்றதுக்கு சான்ஸ் அதிகாமாச்சே!

ஜஹாங்கீர்: அல்லாவே! அப்ப மீனே சாப்ட கூடாதா?

ஷாஜஹான்: அப்படி சொல்லலே... மீன் சாப்டாம எப்டி இக்கெமுடியும்? சாதரணமா லட்சம் பேர்ல ஒத்தருக்கு இக்கிற கேன்சர் சான்சு, நம்ப ஏரியாவுல ஆயிரம் பேர்ல ஒத்தருக்கு வருதாமே!

ஜஹாங்கீர்: அப்டின்னா... சராசரி மனுஸன விட ஆயிரங்கணக்குல நம்ப ரிஸ்கு யெடுக்குறோமா?

ஷாஜஹான்: ரொம்ப கரெக்டா புரிஞ்சிக்கிட்டீங்க.

ஜஹாங்கீர்: அப்ப இதுக்கு யன்னத்தான் தீர்வு?

ஷாஜஹான்: பெட்டிசன், புகார், அதூஇதுன்டு நெறய ஆக் ஷன் எடுக்குறாங்கத்தான். ஆனா யெதுவும் சரிபட்டு வரலே... வுடுங்க... அதுபாட்டுக்கு எதாவது நடக்கும். அது யாரு உங்க கூட வந்த பையன் மாதிரி இக்கிது. ஆனா தூரமாவே நிக்கிறாரு.

ஜஹாங்கீர்: ஆமாமா! நம்ப நானா மஹன்தான். ஓ.டி.லேந்து வந்திகிறாரு... நவாபு.... இங்க வாயேன்!

நவாபு: சலாமலைக்கும் நானா.

ஷாஜஹான்: வலைக்கும் ஸலாம். ஏமா... யன்னா சேதி?

நவாபு: ஆ(ங்)... நல்ல சேதித்தான் நானா?

ஷாஜஹான்: சரி வூட்டுக்கு வரம்போது இவரயும் கூட்டுட்டு வாங்க

ஜஹாங்கீர்: சரி இன்சாஅல்லாஹ்.....

Info. Reference:(தகவல் ஆதாரம்:)

(INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!)
http://www.alternet.org/healthwellness/85630/?page=entire
http://cuddaloreonline.blogspot.com/2008/05/toxic-chemicals-in-sipcot-cuddalore-and.html
http://www.sipcotcuddalore.com/pr_220308.html
http://www.sipcotcuddalore.com/News_Thaindian_230308.html

புதன்கிழமை, 10 மார்ச் 2010 21:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Nazir Ubaidullah 2010-03-10 14:02
பெட்டிசன், புகார், அதூ இதுன்டு நெறய ஆக்ஷன் எடுக்குறாங்கத்தான். ஆனா யெதுவும் சரிபட்டு வராது ! காரணம் சிப்காட்டில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் எல்லாம் சாதரணவர்கள் அல்ல உலக, இந்திய பணக்காரர்களின் பட்டியலி்ல வருபவர்கள் அவர்களை இந்த பெட்டிசன் புகார்கள் எல்லாம் கட்டுப்படுத்துமா என்ன ? முடிந்த வரை ஊரில் காலியாக உள்ள இடங்களில் மரம் நட வேண்டும் கேன்சர் விளிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

நஜீர் உபைதுல்லாஹ்
தம்மாம்
Reply | Reply with quote | Quote
 
 
0 # நன்பன் 2010-03-10 14:34
ஜஹாங்கீர்: அல்லாவே! அப்ப மீனே சாப்ட கூடாதா?

ஷாஜஹான்: அப்படி சொல்லலே... மீன் சாப்டாம எப்டி இக்கெமுடியும்?


ha ha very nice ...
definitely our people won't be ...!

ஷாஜஹான்: பெட்டிசன், புகார், அதூஇதுன்டு நெறய ஆக் ஷன் எடுக்குறாங்கத்தான். ஆனா யெதுவும் சரிபட்டு வரலே... வுடுங்க... அதுபாட்டுக்கு எதாவது நடக்கும்.

I think so that shajahaan bhai has told this only for this story sake ......
Surely we will have to do something or the other regarding this orelse our future generation will be severely affected by cancer...BE AWARE...
Reply | Reply with quote | Quote
 
 
0 # ghouse 2010-03-10 21:30
nam ooril maram valarkkum vilippunarvai ippothe yerppadutha venum
Reply | Reply with quote | Quote
 
 
0 # Novian4U 2010-03-11 03:22
கொளத்துமேடு கொஞ்சம் சீரியசாக போனாலும் ரொம்பவும் கவனிக்கவேண்டியது. இதைப்பற்றி இன்னும் நாம் விவாதிக்க வேண்டும். Very Good information by mypno.com
Reply | Reply with quote | Quote
 
 
0 # NOUSHAD ALI 2010-03-11 05:37
அஸ்ஸலாமு அழைக்கும்...
இந்த கொளத்து மெட்டு பகுதியில் வரும் தூண்டல் மற்றும் நினைவூட்டல்கள் வரவேற்க தக்கது..
இது தொடர்பாக கூட சென்ற வருடம் கூட நமதூர் குழுமத்தில் விவாதிக்க பட்டது....
இதை நாம் தனியே விண்ணப்பம் கொடுத்து தடுத்து நிறுத்த முடியாது..நமது மாவட்ட அளவில் அனைத்து சுற்றுப்புற ஊர்களும் சேர்ந்து சுகாதார துறைக்கு மனு கொடுத்து அதை பின்தொடர்ந்தாள் உறுதியாக நாம் ஒரு தீர்வை எட்ட முடியும்.. ..

கழிவுகளை கடலில் கொட்டுவதை தவிர்த்து ஆங்காங்கே..தொழிற்கூடத்தின் எல்லையிலேயே ( UNDER GROUND COLLECTION TANK AND TREATMENT PLANT ) கட்டி சுத்திகரிப்பு செய்திட அந்தந்த நிறுவனத்தினால் நிச்சயமாக முடியும்.இதுபோன்ற பல மாற்று வழிகளை அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்...

வெளிநாட்டில் யாரும் கடலில் கொட்டுவது இல்லை..பெரும்பாலும் கழிவுகள் எரிக்க பட்டு விடுகின்றது.HAZARDOUS.WASTE INCINERATION PLANT மூலம் அகற்றபடுகின்றது.. இங்கு JUBAIL என்ற ஊரில் நான் இந்த கட்டுமான பணியில் பார்த்து இருக்கிறேன் ..இங்குள்ளவர்களும் பாத்திருக்க வாய்ப்பு உண்டு

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்..
தொடக்கமாக நமதூர் ஜமாஅத் மூலம் தொடங்கினால் இன்சா அல்லாஹ் இதற்கு ஒரு முடிவு வரும்..
.( அரசியல் செல்வாக்கு இருப்பதினால்தான்..தொழிற்சாலை சொந்தகாரர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்..)

நன்றி ஆசிரியர் அவர்களே..
நௌஷாத் அலி
அல் கோபார் - சவூதி அரேபியா
Reply | Reply with quote | Quote
 
 
0 # NOUSHAD ALI 2010-03-11 05:38
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்..
தொடக்கமாக நமதூர் ஜமாஅத் மூலம் தொடங்கினால் இன்சா அல்லாஹ் இதற்கு ஒரு முடிவு வரும்..
.( அரசியல் செல்வாக்கு இருப்பதினால்தான்..தொழிற்சாலை சொந்தகாரர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்..)

நன்றி ஆசிரியர் அவர்களே..
நௌஷாத் அலி
அல் கோபார் - சவூதி அரேபியா
Reply | Reply with quote | Quote
 
 
+1 # ghouse 2010-03-12 20:01
PERIYAVAGALUKKA IPPADI IRUKKUM BOTHU PIRAKKUM KULANTHAIKKUM NAM PINNAL VARUM SNGATHIKKUM YEVVOLAVO SILA PIRACHINAIGAL VARA VAAIPPUGAL ULLATHU ATHANAAL INTHA PIRACHANAYAI MUDIKKA IPPOTHA NAM OOR MAKKAL UNARNTHU PORADA VENDIYA UTCHA KATTATHIL IRUKKIROM IITHANAI NAAM UDANA YENTHA MUYARCHI YEDUTHAVATHU THADUKKANUM BY.H.M.GHOUSE RIYADH.
Reply | Reply with quote | Quote
 
 
0 # MOHAMED SOHAIL 2011-07-11 17:47
We all struggle with the united voice for that solution will be conducted by the grace of God


MOHAMED SOHAIL (ABHA)
Reply | Reply with quote | Quote
 
 
0 # A. Mohamed Arief 2015-11-18 16:42
Maximum avoid to buy land in Parangipettai.

In future our generation cannot live in parangipettai due to Powerplant which makes cancer.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh