Fri01192018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நம்மூர் புள்ளாண்டான் ஒருத்தரு கடலூர் கன்ஸுயூமர் கோர்ட்டுலே கேஸ் போட்டாரு...!

  • PDF


கொளத்துமோடு - 10

ஷாஜஹான்  அஸ்ஸலாமு அலைக்கும்

 எல்லோரும்: வ அலைக்குமுஸ் ஸலாம்

 பாபர்சரி….நேத்து சாயிங்காலம் எங்கே போனீங்க?

ஷாஜஹான்:  நே…த்து சாயிங்காலம் எங்கே போனேன்....ஆங் ..! பிரண்ட் ஒருத்தர பாக்குறதுக்காக முட்லூருக்கு போய்ட்டு வந்தேன்.

ஜஹாங்கீர்:  ஆமா..…முட்லூர்-.சிதம்பரம் பைபாஸ் ரோடு வேலை மந்தமாக நடக்குறதா கேள்விப்பட்டேனே..!

ஒளரங்கசீப்: ஆமா…நானோம் பேப்பர்லே நேத்து படிச்சேன்

பாபர்:  காரணம் என்னவோ தெரிலே, அப்படியே வேல இழுத்துகிட்டே போவுது.

ஷாஜஹான்:   பஸ்-ஸுக்கு பாகர் சதுக்கத்துலே காத்து கெடந்து, வெறுத்துடுச்சி

ஜஹாங்கீர்:  பாகர் சதுக்கமா அது எங்கே இக்கிது?

ஷாஜஹான்:  என்னா இப்புடி கேக்குறிங்க,?! முட்லூர்லே எம்.ஜி.ஆர் செல இக்கிதே அந்த இடத்துக்கு பேர் தான் பாகர் சதுக்கம்

ஜஹாங்கீர்:  ஒஹோ…அப்படியா…!

ஒளரங்கசீப்:  ரூட் மட்டும் வாங்கிட்டு நம்ம ஊருக்கு வராம இக்கிற பஸ் நிர்வாகத்து மேல நடவடிக்கை எடுக்கனும்னு சொல்லி எட்டு வருஷத்துக்கு முன்னாடி நம்மூர் புள்ளாண்டான் ஒருத்தரு கடலூர் கன்ஸுயூமர் கோர்ட்டுலே கேஸ் போட்டாரு

ஷாஜஹான்: கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லுங்களேன்

ஒளரங்கசீப்:  சொல்றதுக்குள்ளே அவசரப்பட்ட எப்புடி?, கொஞ்சம் பொறுமையா தான் இரிங்களேன்.

பாபர்:  சரி….சரி….மேட்டருக்கு வாங்க

ஒளரங்கசீப்:  அந்த புள்ளாண்டான் கடலூர்லே வேல பாத்துட்டு ராத்திரி ஊருக்கு வரதுக்கு டிக்கெட் எடுத்திக்கிறாரு, பஸ்-லே பரங்கிப்பேட்டை டிக்கெட் அதிகோம் இல்லேன்னு , பரங்கிப்பேட்டைக்கு வர முடியாது-ன்னு சொல்லி கொத்தட்டை வழியா பஸ் செதம்பரம் போயிடிச்சி,  அந்த ராத்திரி நேரத்துலே பாகர் சதுக்கத்துலே நின்ன கடுப்போட அந்த புள்ளாண்டான், மறுநா காலையிலே கடலூர் போய் கன்ஸுயூமர் கோர்ட்டுலே கேஸ் போட்டுட்டாரு

ஜஹாங்கீர்:  அப்றம் என்னாச்சி…?

ஒளரங்கசீப்: பஸ் கம்பெனி சார்பா சமாதானத்துக்கு வந்தாங்க, ஆனா அந்த புள்ளாண்டான் ஒத்துகுலே, அப்றம் அவருக்கு நஷ்ட ஈடு கொடுத்தாங்க

பாபர்: பரவாயில்லேயே, இவ்வளவு துணிச்சலா செஞ்சிக்கிறாரே..!

ஷாஜஹான்: சரி…அந்த புள்ளாண்டான் யாரு?

ஒளரங்கசீப்: மேட்டர சொன்னா கேட்டுட்டு சும்மா இக்கினோம், அத உட்டுட்டு, நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் கேக்க கூடாது.

ஷாஜஹான்பெருசு…இன்னைக்கி ரொம்ப சூடா இக்கிது, நமக்கு டிஃபன்ஸ் தான் முக்கியம் நான் எஸ்கேப் ஆவுறேன்.

ஜஹாங்கீர்:  இரிங்க, அஞ்சி நிமிஷோம் கழிச்சி எல்லாரோம் கெளம்பலாம்

 

(ஐந்து நிமிடத்திற்கு பிறகு கொளத்துமோடு கூட்டம் கலைந்தது)

 

 

 

புதன்கிழமை, 17 மார்ச் 2010 03:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # Novian4U 2010-03-18 04:53
பாகர் சதுக்கம்: பழையதை புதிதாக்கிய புது தகவலுக்கு நன்றி. அந்த பெயர் வர காரணம் என்ன?
Reply | Reply with quote | Quote
 
 
0 # தமிழழகன், தோஹா 2012-10-30 21:21
நான் mypno இப்போது பார்க்கிறேன். ஊர் நண்பர் ஒருவர் மூலமாக தான் தெரியும். கொளத்துமோடு நன்றாக இருக்கிறது. ஏன் நிறுத்தி விட்டீர்கள். mypnoவில்இன்னும் நிறைய செய்திகள் கொடுங்கள் சார்
Reply | Reply with quote | Quote
 
 
0 # farhan 2014-03-09 19:37
it is tough to read wen font changes to english
Reply | Reply with quote | Quote
 
 
0 # A. Mohamed Arief 2015-11-18 16:35
TNPSC le VAO post call for pannirukanga. Please namma samukathirku threviyunga. TNPSC publish panne paper yeduthu pallivasal suvaril ottunga,


Group IV call for panna poranga.(Very soon)
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh