MYPNOSun04222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

  • PDF

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 09-06-2010 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மாநில தலைவருமான முன்னாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் மத்திய இரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர் மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர் ரஹ்மான், அப்துல் பாஸித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், கல்வி மற்றும் பல்வேறு துறை சம்மந்தமாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு முக்கிய தீர்மானமாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உருவாக்கித்தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பேராசிரியர் கே.எம்.கே அவர்களை MYPNO நேர்காணலுக்காக சந்தித்தோம்.

பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு - பகுதி: 1

 பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு - பகுதி:2

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2010 17:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

-1 # a.m. madaar 2010-06-22 09:26
indiya union muslim leagin sarithiram saamrajayamaga irundadu oru kaalathil. anaal indu ivargal oru siriya vattathukkul irukkiraargal. adai vittu veliyil vandall mattumey nirya sadanaigalai seyya mudiyum.
Reply | Reply with quote | Quote
 
+1 # jamalahamed 2010-06-22 09:27
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இயக்கமாகத் திகழும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்க்கு அமைதியின் மறு உருவமாக தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் திகழ்கிறார்,இந்த இயக்கத்தில் இருக்கும் வரையில் சமுதாய இளைஞர்களுக்கு நேரான வழிகாட்டலும்,நிதானமான செயல்பாடுகளும் உத்திரவாதமாக கிடைக்கும்.அன்புடன்...ஜமால்.
Reply | Reply with quote | Quote
 
-2 # Mohamed 2010-06-22 16:12
இ.யு.மு.லீ சமூதாயத்திற்கு என்ன செய்தது? உண்மையிலே தெரியாம தான் கேக்குறேன்.
Reply | Reply with quote | Quote
 
-1 # Anvar deen 2010-06-23 07:45
கலீல் பாகவி அவர்களே - கீழ்கண்டவைகளுக்கு பதில் அளிப்பது தங்கள் மீது கடமை.

1. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்படாத, மாற்று மதத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளா?

2. முஸ்லீம்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, முஸ்லிம்களுக்காக செய்த நன்மைகள், சாதனைகள் என்ன என்று பட்டியலிடுங்கள். (இஸ்லாத்துக்கு சம்பந்தமே இல்லாத காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்ததை எல்லாம் இங்கே எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

3. பித் அத்தான மீலாது விலா கொண்டாட்டங்கள், ஷிர்க்கான தர்கா வழிபாடுகளை ஆதரித்ததை தவிர்த்து, உறுப்படியான ஏதாவது கூட்டங்களை நடாத்தினீர்களா?

4. உயிர் காக்கும் ரத்த தான முகாம்கள், முஸ்லிம் லீக் வாழ்நாளிலே எத்தனை தடவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5. முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக எத்தனை கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்பட்டன.

6. முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனைகளான, கல்வி/வேலை வாய்ப்பு இட ஒடுக்கீடு போராட்டங்களில் எத்தனை முறை கலந்து கொண்டுள்ளது.

7. ஒரு ஊரில் முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்ற வரும்போது, எத்தனை முறை களத்தில் குதித்து போராடினீர்கள்.

8. பாபர் மசூதி பிரச்சனைகளுக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் குரல் கொத்தபோது எங்கே ஓடி ஒளிந்து கொண்டீர்கள்.

9. சமுதாய மேம்பாட்டிற்காக தங்களின் கட்சி செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள்.
நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

விதிவிலக்காக ஒன்றிரண்டு நடந்திருப்பதை எல்லாம் (exceptions are not examples) எழுதி இவைகள் எங்களின் சாதனைகள் என்று பட்டியல் போட்டால், சமுதாயம் உங்களை இனம்கண்டு கொள்ளும்.

மற்ற மற்ற இயக்கங்கள் எல்லாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளன. மறுக்கவில்லை. ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஆனால் அவர்கள் ஷிர்க், பித் அத்தை விரட்டுவதில் வெற்றி கண்டுள்ளன. அவர்களின் அகீதா பலமாக உள்ளது. ஒவ்வொரு இயக்கங்களும் அவர்களால் முடிந்த அளவு, சமூக அக்கறையுள்ள பல போராட்டங்களை கண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். . சமுதாய சிந்தனை அவர்களிடம் ஊறிக்கிடக்கிறது.

தங்கள் கட்சியின் சமுதாய பார்வை ஜீரோ - தங்கள் கட்சியின் அகீதா கேள்விக்குறி. போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாது. இது எப்படி முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்க முடியும். தயவு செய்து என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துகொண்டு எழுதுங்கள். நாம் சமுதாயத்துக்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள்.

உங்களுக்காக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: அஹ்மத் 20349
ஒருவர் பூமி நிறைய பாவங்கள் செய்ய முடியுமா? உங்கள் சிந்தனையை ஓட விடுங்கள். ஆனால் இறைவன் அதையும் மன்னிக்க தயாராக உள்ளான். ஷிர்க்கை தவிர.

முதலில் பித் அத் மற்றும் ஷிர்க்கான (மீலாது, மவ்லிது மற்றும் தர்கா etc..) விஷயங்களில் இருந்து தவிர்ந்து கொண்டு இறைவனின் மன்னிப்பை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள் இது ஒன்றுதான் நாங்கள் உங்களிடம் கேட்பது. அரசியல், சமுதாய பார்வைகள் எல்லாம் அடுத்தவையாக் இருக்கட்டும்.

வஸ்ஸலாம்
சகோ. அன்வர்
Reply | Reply with quote | Quote
 
-2 # Anvar deen 2 2010-06-23 07:47
..continue உங்களை இனம்கண்டு கொள்ளும்.

-2 # Anvar deen 3 2010-06-23 07:48
முதலில் பித் அத் மற்றும் ஷிர்க்கான (மீலாது, மவ்லிது மற்றும் தர்கா etc..) விஷயங்களில் இருந்து தவிர்ந்து கொண்டு இறைவனின் மன்னிப்பை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள் இது ஒன்றுதான் நாங்கள் உங்களிடம் கேட்பது. அரசியல், சமுதாய பார்வைகள் எல்லாம் அடுத்தவையாக் இருக்கட்டும்.

வஸ்ஸலாம்
சகோ. அன்வர்
Reply | Reply with quote | Quote
 
0 # கலீல் பாகவி-யின் சகோதரன் 2010-06-23 08:10
அன்பர் அன்வர்தீன் அவர்களுக்கு
முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் லீக் தான் என்று குறிப்பிட்டது கலீல் பாகவி அல்ல, பேராசிரியர் காதர் மெய்தீன் தனது பேட்டியில் கூறியதையே இதழியல் உத்தியின் அடிப்படையில் கலீல் பாகவி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த கருத்து கலீல் பாகவி- யின் கருத்து என்று எண்ணி சரமாரியாக பொரிந்து தள்ளுகிறீர்கள், இதிலிருந்து அந்த வீடியோ பதிவினை தாங்கள் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.
Reply | Reply with quote | Quote
 
+1 # கலீல் பாகவி-யின் இன்னுமொரு சகோ 2010-06-23 08:25
சகோ.அன்வர் பாய், நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது கலீல் பாகவி இடம் இல்லை. அந்த கருத்தினை சொன்னது கலீல் பாகவி அல்ல, மீண்டும் ஒருமுறை வீடியோ பதிவு முதல் பகுதி தொடங்கி 3 ஆம் நிமிடத்திலிருந்து கவனமாக கேளுங்கள். அப்படியும் நீங்கள் விளக்கம் பெற வேண்டுமெனில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு
தலைமை நிலையம்
காயிதேமில்லத் மன்ஜில்
36.மரைக்காயர் லெப்பை தெரு
சென்னை -1
தொலைப்பேசி: 91 44 25218786
பேக்ஸ்: 91 44 25217786
மின்னஞ்சல்:
Reply | Reply with quote | Quote
 
+1 # கலீல் பாகவீ 2010-06-23 08:59
சகோதரனுக்கு நன்றி!

அந்த வாக்கியங்கள் பேட்டி, குறித்து செய்யப்படும் தகவல் பலகைக்குரிய விளம்பரத்திற்கான வாக்கியங்கள்.

இந்த பேட்டி குறித்த பிரச்சினைகளை சகோதரர் அன்வர்தீன் அவர்கள் tamilmuslimbrothers என்ற googlee குழுமத்தில் விவாதத்திற்கு வைத்தார்.

அங்கு தெளிவான பதில் அளித்த பிறகும், பேராசிரியரின் நேர்காணலையும் பார்க்காமல், நான் அளித்த பதில்களையும் புரிந்து கொள்ளாமல் இங்கு வந்து தனிநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். :sad:

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக... ஆமீன்.

- கலீல் பாகவீ
Reply | Reply with quote | Quote
 
-1 # Anvar deen 2010-06-23 11:14
சகோ கலீல் பாகவி - வ அலைகுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்..

மற்றவர்களைப்போல link மட்டும் கொடுத்துவிட்டு, ஸலாம் சொல்லிவிட்டு போய் விடவேண்டும்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் லீக் தான்"

"அரசியல் இலாபத்திற்காக தி.மு.க-வுடன் தோழமையாக இல்லை, தி.மு.க-வுடன் இருப்பது கொள்கை ரீதியிலான உறவு"

இதை எழுதியது தாங்கள் தானே. மேற்கண்ட இரண்டு வாக்கியங்களால் தான் உங்களின் மீது கேள்விக்கணைகள். கேள்விகள் பேராசிரியர் KMK அவர்கள் மீது அல்ல. மீண்டும் ஒருமுறை அந்த வாசகத்தை படித்து, அதனுடைய நச்சுக்கருத்தை புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் மனதை நோகடிக்காமல் என்ன எழுதுகிறோம் என்று புரிந்து எழுத அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

வஸ்ஸலாம்
ச்கோ. அன்வர்.
Reply | Reply with quote | Quote
 
+1 # kamaaluddin 2010-06-24 06:23
அன்புள்ள சகோதரர் கலில் பாகவி அவர்களே, தாங்கள் பறங்கிப்பேட்டை சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பல்வேறு பணிகளை பாராட்டுகிறேன். ஒரு சில மடக்கூட்டம் ஒவ்வொரு ஊரிலும் இப்படிதான் உளறிக்கொண்டு இருக்கும். அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். தம்பி அன்வர் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டுகிறேன். கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் அன்வர் போன்ற தறுதலைகள் ஒதுக்கப்பட வேண்டும். ஜாக்கிரதை. அமைதியாக இருப்பதால் அடங்கி போவதாக எண்ணவேண்டாம்.
Reply | Reply with quote | Quote
 
-1 # Anvar deen 2010-06-24 08:35
சகோதரர் கலீல் பாகவீ அவர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

ஒரு கருத்தை நீங்கள் முன்வைத்தால், அதற்கு விளக்கம் தேவைப்படும்போது, பதில் நீங்கள் தான் தரவேண்டும் (அதை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள் என்பது எங்களுக்கு தேவையற்றது) என்ற அடிப்படை அறிவை தாங்கள் பெற்றிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். சரி உங்கள் தலைமை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் லீக் தான்"

இது நச்சுக்கருத்தில்லாமல் வேறு என்ன நல்ல கருத்தா?. தமிழ்நாட்டில் உள்ள மற்ற முஸ்லிம் கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்படாத, அதாவது காபிர்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று சிறு பிள்ளையை கேட்ட்டால் கூட சொல்லிவிடும். இது அல்லாமல் வேறு என்ன நூதன விளக்கம் என்று சொன்னால் நாங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
Reply | Reply with quote | Quote
 
-1 # Anvar deen 2010-06-24 08:36
உங்களைப்போல் நான் தரம் தாழ்ந்து எழுதவில்லை என்பதை பதிவுசெய்கிறேன்.???????
Reply | Reply with quote | Quote
 
0 # Arafathullah Dawood 2010-06-24 08:50
சகோதரர்களுக்கு....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

// பேராசிரியர் KMK அவர்கள் லால்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தபோது நம்முடைய இணையதளத்திற்காக சிறப்பு நேர்காணல் எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த நேர்காணலில் பேராசிரியர் கூறியவற்றில் சிலவற்றை தலைப்பாக போட்டு செய்தி கொடுத்திருந்தோம். // கலீல் பாகவீ

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 09-06-2010 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு, அக்கட்சியின் தேசிய செயலாளரும், மாநில தலைவருமான முன்னாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் மத்திய இரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேலூர் மக்களவை உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர் ரஹ்மான், அப்துல் பாஸித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாட்டில், கல்வி மற்றும் பல்வேறு துறை சம்மந்தமாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“அதில் ஒரு முக்கிய தீர்மானமாக தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உருவாக்கித்தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”.

இந்நிலையில் பேராசிரியர் கே.எம்.கே அவர்களை MYPNO நேர்காணலுக்காக சந்தித்தோம்.
பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் (www.mypno.com) இணையதளத்திலிருந்து பதிவிரக்கம் செய்யப்பட்டது.

சகோதரர்கள் கவனிக்கவும்.
சகோ கலீல் பாகவீ தகவல்படி

பேராசிரியர் KMK அவர்கள் லால்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தபோது இணையதளத்திற்காக சிறப்பு நேர்காணல் எடுக்கப்பட்டதா?????
இல்லை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில், நேர்காணல் எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளதா!!!!!. இப்படி முரன்பாடான தகவல் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதில் 'தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லிம் லீக் தான்' என்று பெருமை பட்டுக்கெள்கிறிர்கள்....
Reply | Reply with quote | Quote
 
+1 # Arafathullah Dawood 2010-06-24 08:52

அன்புடன்
அராபஃத்துல்லாஹ்
Reply | Reply with quote | Quote
 
+1 # MHN 2010-06-26 17:04
பாபர் மசூதி இடிப்பு போராட்டங்களினாலும், கோவை குண்டுவெடிப்பு கைதிகளாகவும் அல்லது இன்ன பிற போராட்டங்கள் நடத்தி சிறை செல்வதினால் என்ன பயன் கிடைத்து விட்டது. அவர்களின் குடும்பத்தினர் பட்ட வேதனைகள் தான் மிச்சம்.

பல நூறு பேரை சேர்த்து கொண்டு போரட்டம் (டிவி யில் தெரியுமாறு) நடத்த வேண்டியது. கைது செய்து சிறையில் அடைத்து விட்டால், உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பது. கைது செய்தவுடன் விடுதலை செய்ய சொல்லி ஏன் வற்புறுத்த வேண்டும். போராட்டம் நடத்தி சிறை செல்ல தாயார் என்று வீர வசனம் வேறு. உடனே விடுவித்து விடுவார்கள் என்பதாலேயே அவர்கள் போராட்டம் நடத்துகிறார். இப்படி ஒரு கேவலமான போராட்டம் தேவை இல்லையே?

எங்களுக்கு எல்லோரிடமும் அரவணைப்பொடு எங்கள் கொள்கையில் உறுதியோடு இருக்க முஸ்லீம் லீகே சிறந்தது.
Reply | Reply with quote | Quote
 
+1 # ABDUL RAHMAN 2010-06-26 19:06
அன்புச் சகோதரருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

முஸ்லிம் லீக் பெயரைக் கேட்டாலே அலரும் சிலரின் வரிசையில் தங்கள் வட்டத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டேன்.கவலையே படாதீர்கள் நாம் சமுதாயப்பணியை அல்லாஹ்விற்க்கு அஞ்சி செய்து வருகின்றோம்.ஆனால்...சிலர் வருடத்திற்க்கு நான்கு வசூல் செய்து (தாயகத்திலும்,வெளிநாட்டிலும்)வ யிற்றுப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு முஸ்லிம் லீக்கின் பணிகள் தெரியவே தெரியாது அதைப்பற்றி நமக்கு கவலையும் இல்லை.முஸ்லிம் லீக்கின் பணிகள் என்ன என்பதை படித்தவர்களும்,நடுநிலையாளர்களு ம் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.சமீபத்திய உதாரணம் குணங்குடி ஹனீஃபா அவர்கள் நம் தலமையகத்திற்க்கு வந்து சான்றளித்து விட்டு சென்றதையும் சமுதாயம் பார்த்தது.மிக சமீபத்தில் திருமண பதுவுச் சட்டத்தில் முஸ்லிம் லீக் கையாண்ட விதத்தையும்,அதை விட மிக சமீபத்தில் கல்விக் கொள்கை சம்மந்தமாக எடுத்த முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றியயும் சமுதாயம் கண்டது.தேவைப் பட்டால் தேதி வாரியாக இடங்களின் ஆதாரத்தோடு (பழைய வரலாறுகளை அல்ல)தற்பொழுதைய தலைவரின் ஆகப்பூர்வமான பணிகளையும்,அதைற்க்கு கிடைத்த பலன்களையும் பட்டியலிட நாம் தயாராகவே உள்ளோம்.டிஸம்பர் ஆறு (பிஸ்னஸ் டே) தொழில் செய்பவர்கள் அல்ல நாம்.எல்லா நாட்களையும் சமுதாயக்காரியங்களை ஆற்றவே தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் நாம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எந்த அரபு,அயல் நாடுகளிலும் கேம்ப்கள் தோறும் சென்று சிறு சம்பளக்காரர்களிடமும் சொறன்டக்கூடிய வழியில் வந்தவர்கள் நாமல்ல ஆகவே நாம் நெஞ்சுயர்த்தி பதிலளிப்போம் எல்லா வாதங்களுக்கும்.....இன்ஷா அல்லாஹ்!

முஸ்லிம் லீக் சமுதாயத்திற்க்கு ஆற்றிவரும் காரியங்களை தொலைக் காட்சியின் வாயிலாக விளம்பரம் செய்து வசூல் ஃபார்முலாவில் இறங்கவே இறங்காது,அதனுடைய செயல்பாடுகளை தெளிவாக அறிய வேண்டுமென்றால் அந்த இயக்கத்தினுடைய அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம். www.muslimleaguetn.com www.indianunionmuslimleague.in www.iuml.com
Reply | Reply with quote | Quote
 
+1 # ABDUL RAHMAN 2010-06-26 19:07

0 # தொண்டன் 2010-06-28 14:13
பிறைமேடை வாசித்துவிட்டீர்களா? மாதமிருமுறை வளரும் பிறைமேடை, ஓர் நடுநிலை சமுதாய பத்திரிக்கை. தற்போதைய பதிப்பு உலகச் செம்மொழி மாநாடு சிறப்பிதழாக! படியுங்கள் பரப்புங்கள் - பிறைமேடை. இன்றே சந்தாதாரர் ஆகுங்கள். 36, மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை - 1. தொலைபேசி: 044-2527 7863, 2521 8786.
Reply | Reply with quote | Quote
 
Add comment

Security code
Refresh