MYPNOTue04242018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ரமலான் சிறப்பு சமையல் வகைகள்

  • PDF

ரிச் ஃபுரூட் சலாட்

தே.பொருட்கள்

கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்

பழங்கள்

பச்சை திராட்சை - ஆறு
கருப்பு திராட்சை - ஆறு
பப்பாளி பழம் - அரைகப்
கிரீன் பியர்ஸ் - கால் கப்
ஆப்பிள் - கல் கப்
ஸ்ட்ராபெர்ரி - ஆறு
ஐஸ்கிரீம் - ஏதாவது இரண்டு (அ) முன்று பிளேவர்கள்

செய்முறை

1.பழங்கள் ரெடி மேட் டின்னைஐ விட பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும்.

2.பாலை சாப்ரான் போட்டு காய்ச்சவும். கால் கப் தண்ணீரில் கஸ்டட் பவுடரை கரைத்து பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சவும்.காய்ச்சும் போது கை விடாமல் இரண்டு நிமிடம் தொடர்ந்து காய்ச்சி இரக்கி ஆற வைக்க வேண்டும்.

3.ஆறிய கஸ்டடை பிரிட்ஜில் நல்ல குளிரவிடவும்.

4.முந்திரியை பட்டரில் வருத்து வைக்கவும், பாதத்தை பொடியக அரிந்து (கொர கொரப்பாக) அதையும் பட்டரில் வருத்து கொள்ளவேண்டும்.

5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

6.சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து முன்று அல்லது நான்கு சேலட் கப்பு களில் ஊற்றி, அதன் மேல் ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும்.

7.பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து முன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே முன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

8.ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி , சாக்லேட் பிளேவர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

குறிப்பு:  முதலே பழங்களை காய்ச்சிய கஸ்டடில் போடு வைத்து விட்டால் சாப்பிடும் போது கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது போட்டு கலக்கி கொண்டால் போதும்.மாம்பழம், வாழைபழம் கூட சேர்க்கலாம். நோன்பு நேரத்தில் வாஙகும் பழங்கள் சில நேரம் புளிப்பாகிவிடும் அதை கூட இப்படி செய்யலாம். பார்டிகளுக்கு வைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.

நான்கு நபர்கள் சாப்பிடலாம்.

கடல் பாசி - ரூஃப் ஹப்சா

தேவையான‌ பொருட்க‌ள்

கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கர‌ண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாத‌ம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி

செய்முறை

1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.

3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.

4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.

5. வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.

குறிப்பு: இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.

அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.

நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.

இளநீர் கடல்பாசி

இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள். ஒரு வெஜ்டேரியன் உண‌வு தான். இது வெள்ளை கலர் நூல் போல் ஒரு முழம் அளவிற்கு இருக்கும். இதை பல வகைகளில் சமைக்கலாம். உடல் சூட்டை தணிக்கும் இந்த கடல்பாசி.

நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் செய்வது. ரைஸ்கேக் செய்ய இதை பயன் படுத்துவார்கள். இது கிராம் க‌ண‌க்கில் தான் விற்க‌ப்ப‌டுகிற‌து.

செய்முறை

மொத்த‌மாக‌ செய்வ‌தாக‌ இருந்தால் 5 கிராம் எடுத்து ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டிக‌ட்டி இர‌ண்ட‌ரை ட‌ம்ள‌ர் பாலில் ந‌ன்கு வேக‌ வைத்து அதில் விருப்ப‌மான‌ கல‌ர் கொஞ்ச‌ம் சேர்த்து ந‌ட்ஸ் வ‌கைக‌ள், பேரிட்சை, இல்லை ப‌ழ‌ங்க‌ள் பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிர‌வைத்து வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌லாம்.

குறிப்பு: இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம். அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது. நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.

ஜவ்வரிசி கடல் பாசி

தேவையான பொருட்கள்


ஜவ்வரிசி = ஒரு மேசை கரண்டி
கடல் பாசி = இரண்டு மேசை கரண்டி
பால் = அரை டம்ளர்
தண்ணீர் = ஒன்னறை டம்ளர்
சர்க்கரை = முன்று மேசை கரண்டி
தேவையான நட்ஸ் = சிறிது

செய்முறை

1. ஜவ்வரிசியையும், கடல் பாசியையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட்டு வேக விடவும்.
3. வெந்து தண்ணீர் பாதி வற்றும் போது சர்க்கரை நட்ஸ்,பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
4. சிறிது ஆறியதும் ஒரு வாயகன்ற பாத்திரதில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து நன்கு செட் ஆனதும் வேண்டிய வடிவில் கட் செய்து நோன்பு திறக்கும் வேலையில் சாப்பிடவும்.

குறிப்பு: நோன்பு காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் கடல் பாசி, நோன்பு நேரத்தில் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் ஜவ்வரிசி இதை இரண்டும் சேர்த்து செய்து சாப்பிட்டால் வயிறு இதம் பெரும்.
கர்ப பை புண் மற்றும், அல்சருக்கும் இது அரு மருந்தாகும். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.கலர் தேவை பட்டால் வேண்டிய கலர் சேர்த்து கொள்ளலாம், இல்லை என்றால் ரூ ஆப் ஷா வே போதுமனது.

இது முன்று நபர் சாப்பிடலாம்
ஊறவைக்கும் நேரம் பிரிட்ஜில் வைக்கும் நேரம் தவிர செய்வது பத்து நிமிடம் தான்.

டேங்க் க‌ட‌ற்பாசி

க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ள‌ர்

1. ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.

2. ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆற‌விட‌வும்.

3. ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும். 

புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 16:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh