Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பாதுகாப்பான முறையில் மீன்பிடி தொழில்; பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு அறிவுரை

  • PDF
பாதுகாப்பான முறையில் மீன் பிடிப்பது குறித்து பரங்கிப்பேட்டை அருகே சாமியோர்பேட்டை மற்றும் சி.புதுப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
 
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் இளங்கோவன் மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்திய கடலோர படை அதிகாரிகள் கதிரேசன், அறிவழகன் ஆகியோர் மீனவர்களிடையே பாதுகாப்பான மீன்பிடி முறைகள் பற்றி கலந்துரையாடினர்.
 
அப்போது, படகு பதிவு செய்வதன் அவசியம், மீனவர் அடையாள அட்டை, மீன்பிடி தொழிலுக்குச் செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்களான லைப் ஜாக்கெட், டார்ச் லைட், முதலுதவி சாதனங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். சந்தேகப்படும்படி யாராவது கடல் வழியே வந்தால் உடன் கடலோர பாதுகாப்பு படைக்கு 1554 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, 09 அக்டோபர் 2011 23:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh