Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஒளிரட்டும் பேரூராட்சி!

  • PDF
தமிழ்நாட்டின்  முக்கிய அரசியல் கட்சிகள் தனித்து  போட்டியிட பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அ.தி.மு.க வின்  அசுர வெற்றி கருத்து கணிப்புகளையும் தாண்டியதே.ஆளும் கட்சியாக அ.தி.மு.க இருந்ததால் அக்கட்சியின் உறுப்பினர்கள்  பத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெறுவது எளிதாகவே இருந்தது. பெரும்பாலான மாநகராட்சி வார்டுகளிலும் அக் கட்சியின் உறுப்பினர்களே வெற்றி பெற்றிருந்ததால் அந்தந்த மாநகராட்சிகளின் துணைமேயர் பதவிகளையும் அ.தி.மு.க வே தக்க வைத்துக் கொண்டது.

ஆனால்  பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்சிகளை விட சுயேச்சை வேட்பாளர்களுக்கே மவுசு அதிகம் என்பது இந்த தேர்தலிலும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. நமதூர் போன்ற பல பேரூராட்சிகளிலும்,ஊராட்சிகளிலும் கட்சி அடிப்படையில் அல்லாது, தேர்தலில் போட்டியிட்டவர்களின் நற்பெயருக்கே ஓட்டுகள் விழுந்துள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்பு தி.மு.க வில் இணைந்த முஹம்மது யூனூஸ்-அவர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த ஓட்டுக்களும் அதன் அடிப்படையிலேயே என்றால் அது மிகையல்ல. சிறந்த நிர்வாகத் திறமையோடு, சிற்சில குறைபாடுகளை  தவிர அனைத்து தரப்பினரின்  தேவைகளையும் நிறைவேற்றி கடந்த முறை நல்லதொரு உள்ளாட்சி நிர்வாகத்தை  நடத்தியதற்கு  பரிசாகவே முஹம்மது யூனூஸ் அவர்களை இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்.
 
அந்த வகையில்  17-வது வார்டு கவுன்சிலர் நட்ராஜ் அவர்களும் இங்கு குறிப்பிடத்தக்கவர்.மூன்று முறையும் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தன்னை தி.மு.கவில் இணைத்து கொண்டு பேரூராட்சித் துணைத் தலைவர் ஆகி இருக்கிறார். ஆக ஒரு வகையில் இதுவும் கூட சுயேச்சைகளின் நிர்வாகத்தில் உள்ள பேரூராட்சியே.

தற்போது தி.மு.க வில் இருந்தாலும், ஆளுங்கட்சியோடு அனுசரித்து, நம்பி ஓட்டு போட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றி கடந்த முறையை விட இன்னும் சிறப்பாக செயலாற்றி தலைவரும்,துணைத் தலைவரும் பரங்கிப்பேட்டை பேரூராட்சியை ஒளிரச் செய்வார்கள் என  நம்புவோம்!

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011 16:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # Alaudee maricar Hong 2011-10-30 17:47
சிப்காட் பிறசினைக்கி ஒரு நல்லது செய்தால் போதும் ....வேறு வொண்ணும் வேண்டாம் ...மக்கள் நலமுடன் வாழ்ந்தாலே போதும்
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Sothkarar 2011-10-30 19:27
Athu enna nana satti mela star satta mattum STAR illa AVARUM ORU PP STAR THA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!
Reply | Reply with quote | Quote
 
 
+1 # நஜீர் உபைதுல்லாஹ் 2011-10-30 21:57
பெரும்பாலும் ஆளும்கட்சி தான் இடை தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும்.அதையும் மீறி பரங்கிப்பேட்டையில் தலைவர் யூனூஸ் நானாவும் அவரை சார்ந்த திமுக உறுப்பினர்களும் பெருபான்மையான இடங்களை பிடித்துள்ளது பெரிய விசயம் தான்.இருந்தாலும் யூனூஸ் நானாவின் அரசியல் அனுபவம் + செயல்பாடு + திமுகவின் வாக்கு வங்கி இது மூன்றும் சேர்ந்து தான் இந்த வெற்றி ! இதில் எதையும் பிரித்து பார்க முடியாது.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # ZainulAbudeenMalimar 2011-10-30 22:09
ஆளும் கட்சியை சார்ந்த கட்சியாக இருந்தால் மட்டும் தான், உள்ளாட்சி தலைவர்களால் அந்த அந்த ஊர்களுக்கு நல்ல திட்டங்களை அமல் படுத்த முடியும். இதையும் தாண்டி நமதுருக்கு Pala நல்ல திட்டங்கள் அமைய இறைவனை வேண்டுவோம்.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Jafferpg 2011-10-30 23:17
ஆமாம் சிறப்பான பணியை செய்தார் சென்ற முறை அதுவே இந்த வெற்றிக்கு காரணம். சிப்காட் பிரேச்சனைக்கு போன முறை அமைதி காத்தது போல இந்த முறையும் இருக்காமல் நடவடிக்கை எடுத்தால் போதும்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # a.r.m.naina 2011-10-31 17:20
People voted for his performance,not because his political party.I hope and i am sure he will carry on his duty and responsibility by maintaining cordial relationship with the ruling party and every section of his panchayat people. I wish him for his good health and good performance.
Reply | Reply with quote | Quote
 
 
+1 # அன்பு நண்பர் 2011-11-01 01:35
ஜாபர் அவர்களே இந்த முறை அவர் எதிர்காட்சி!!!!!!!!!!!!!!! :roll: :roll: :roll:
Reply | Reply with quote | Quote
 
 
0 # mkghouse 2011-11-01 01:42
இது ஜனாப்.எம்.எஸ். முஹம்மது யூனுஸ் நானா என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் பல
Reply | Reply with quote | Quote
 
 
0 # MOHAMED ASKAR ALI 2011-11-27 11:52
FIRST OF ALL MY HEARTY SALAMS TO ALL
WE WISH & CO OPERATE WITH HIM FOR ALL THE SUCCESFUL DEVELOPMENT OF OUR NATIVE AS WEL AS OUR SAROUNDING VILLAGES.
ALWAYS WEL-WISHER OF (PORTO NOVO)MOTHER LAND.

" ALL THE BEST ".
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh