Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது: 15 பவுன் நகைகள் மீட்பு

  • PDF
பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை பரங்கிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
 
பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை வழிமறித்து நகைகள் மற்றும் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
 
சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்நிலையில், பரங்கிப்பேட்டையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அருகே உள்ள கரிக்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டன் (28), ஆறுமுகம் மகன் பரமசிவம் (29) ஆகியோரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விஜயரங்கம்-மஞ்சுளாவை தாக்கி 10 பவுன் நகைகளை பறித்தது, கடலூரைச் சேர்ந்த சீனுவாசனிடம் 5 பவுன் நகைகளை பறித்தது, பரங்கிப்பேட்டை பகுதியில் மின்நிலையத்தில் உள்ள கல் பதிக்கும் இயந்திரத்தை திருடியது தெரியவந்தது.
 
இதையடுத்து, அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் ரொக்கம் ரூ.2,500 ஆகியவற்றை பரங்கிப்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
 
Source: Dinamani 

Comments  

 
0 # ரமீஜா 2011-11-20 14:16
தங்கம் விக்குறவிலைக்கு இதுமாதுரி திருட்டுபசங்க புதுசு...புதுசா....கிளம்பிகிட்டுதான் இருப்பாங்க நாமதான் ஜாகிரதைய்யா இக்கனும், இல்லைனா நமக்கு பரங்கிப்பேட்டை ஹல்வா தான் பரிசா கிடைக்கும் :lol: :lol: :oops:
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh