Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

7-ம் ஆண்டு சுனாமி நினைவு அஞ்சலி!

  • PDF

 

சுனாமி என்னும் ஆழிப் பேரலை தாக்கி 7 ஆண்டுகள் ஆனதையொட்டி பரங்கிப்பேட்டை பகுதியில் நேற்று சுனாமியால் உயிர் இழந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்வெட்டில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

சுனாமி என்னும் ஆழிப் பேரலை தாக்கி 7 ஆண்டுகள் ஆவதையொட்டி நேற்று பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதி மீனவ கிராமங்களில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பரங்கிப்பேட்டை அன்னங் கோவிலில் சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனூஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு விசைப்படகு பாதுகாப்பு குழு தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். பேரூராட்சி துணை தலைவர் நடராஜன், 4வது வார்டு உறுப்பினர் தர்ம பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் காஜா கமால், அருள் முருகன், ராமலிங்கம், ஜமாத் நிர்வாகிகள் ஹமீது கவுஸ், பஷீர் அகமது, ஜி.எம்.கவுஸ், பேரூராட்சி அலுவலர்கள், விசைப்படகு குழு நிர்வாகிகள்,மீன் வியாபாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் சாமியார் பேட்டை, வேளங்கிராயன் பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோடை ஆகிய பகுதிகளிலும் சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி பரங்கிப்பேட்டை மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.

கிள்ளையில் சின்னவாய்க்கால் பகுதியில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டு இருந்த நினைவு கல்வெட்டுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வித்தியாதித்தன் தலைமையில் முன்னாள் மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே.கே. கலைமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பெண்கள் இறந்த வர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து அனைவரும் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் துணை தலைவர் பொன்மொழி, கிராம தலைவர் மதியழகன், சின்னவாய்க்கால் கிராம தலைவர் சம்பந்தம், நீதிமணி, ஏழுமலை, விஜய லட்சுமி, ராமலிங்கம், கருணா மூர்த்தி, ஆறுமுகம், செங்குட்டுவன், பூராசாமி உள்பட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அதையடுத்து பில்லு மேட்டில் சுனாமியால் இறந்த வர்களின் நினைவாக வைக்கப் பட்டு இருந்த படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக சின்னவாய்க் காலில் இருந்து மவுன ஊர்வலம் பில்லுமேடு வரை வந்தது. அதையடுத்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இறந்த வர்களின் நினைவாக மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Source: "Daily Thanthi"

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011 21:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh