MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

"யாவருங் கேளீர்"

  • PDF

ஐந்து வருடங்களுக்கு முன்பு  நெய்யத் தொடங்கியிருந்தோம் அந்தக் கனவை.

இதோ இன்று நனவாக, ஊர்ச்செய்திகளின் முன்னோடியாக விளங்கும் உங்கள் mypno.com தான் அது.

இறையருளால், இன்னுமின்னும் உயரப் பறக்கும் வலிமை எங்கள் சிறகுகளுக்கு இருந்தாலும், ஊர்வானத்திலேயே வட்டமடித்துக்கொண்டிருப்பதும் ஊர்மீதான எங்கள் அபிமானத்தின் சாட்சி.

ஆர்வமும், துடிப்பும் மிக்க இளைஞர்களாக ஊர்நலனை; சமூகநலனை முன்னிறுத்தியே இதைத் தொடங்கினோம்.

ஊரில், சமூகத்தில், செய்தியை செய்தியாகவே வாசிக்கத் தெரிந்த வாசகர்களிடத்தில் இதற்குக் கிடைத்த அலாதியான வரவேற்பும், ஆதரவும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்கிற வார்த்தைகளையே இன்றைக்கும்,என்றைக்கும் எங்களை உச்சரிக்க வைத்தவண்ணம் இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் mypno.com தளம் இத்தனை வருடங்களில் தொட்ட உயரங்கள் பல. எங்களின் தடங்களில் தடங்கலாய், கடந்த சங்கடங்களும் சில.

எவ்வித பொருளாதார ஆதாயங்களையும் எதிர்பாராமல், சொல்லப்போனால் எங்கள் சொந்தப் பணத்தையும், நேரத்தையும் முயற்சிகளையும் கொண்டு நடத்தப்படும் இத்தளம் மென்மேலும் வளரவும், வலிமையான ஊடகம் என்பதில் நம்சமூகத்தில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவோ, மறைக்கவோ உங்கள் ஆத்மார்த்தமான அன்பையும் ஆதரவையும் பிரார்த்தனைகளையும் வேண்டி நிற்கிறோம்.

எங்களின் இத்தளம் பற்றிய வாசகர்களிடம் மனம்விட்டு பேசும் ஒரு வாய்ப்பாக, இத்தருணத்தைக் கருதுகிறோம்.
அன்பு வாசகர்களே, mypno குறித்த உங்களின் ஆலோசனைகள், கருத்துகள், அபிப்ராயங்கள் என்று எதையும் நீங்கள் எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.  தக்கவை ஏற்கப்படும் நிச்சயம். ஊற்றின் மீது வந்து படியும் சாம்பலை  ஊதி அகற்றும் பொழுதுகளாக அவற்றை மதிப்புடன் ஏற்றுக்கொள்வோம். உங்களில் ஆக்கப்பூர்வ எழுத்துத் திறனுடையவர்களை எப்போதும் அன்புடன் வரவேற்கிறோம்.

இங்கே, எங்கள் சங்கடங்களாக நாங்கள் துய்த்த, அனுபவித்த சிலவற்றையும் சொல்லியாகவேண்டியிருக்கிறது.
எங்கள் மீதான அதீத உரிமையில், "எங்கள் செய்தியை ஏன் போடவில்லை?" என்று கேட்கப்பட்டிருக்கிறோம்.
முன்னர் ஒரு'சிலரு'க்காக அதற்கு விளக்கமளிக்க வேண்டியிருந்தது. இப்போதும் அதே வார்த்தைகளைத் தான் கூற வேண்டியிருக்கிறது. ஆனால் இம்முறை பலரைக் கொண்ட சில குழுவினருக்காக.

பலவீனத்தைக் கொண்டுள்ள; அறிந்துள்ள மனிதர்களாக, நேர கால வாய்ப்பின் அடிப்படையில் எங்களாலும் சிலநேரம்  செய்திகள், அதாவது ஊர்ச்செய்திகள், தவறவிடப்படுவதுண்டு. அதற்காக அந்தச் செய்தியின் நாயகர்களுக்கு நாங்கள் எதிரிகள் என்று பொருளாகிவிடாது. அதேபோல, சில நேரம் செய்தியாகச் சிலவற்றை நாங்கள் பதிவு செய்வதாலேயே 'அந்தச் செய்திக்குரியவர்கள்' எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களாகிவிட்டார்கள் என்பதுவும் பொருளாகாது.

குறிப்பாகவும் தெளிவாகவும் சொல்லவேண்டியதென்னவென்றால், செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும்,வெளியிடுவதிலும், முன்னதாக அதற்காக உழைப்பதிலும்  ஆசிரியர் குழுவாக அர்ப்பணிப்புணர்வுடன் செயல்பட்டோம். செயல்படுகிறோம். செயல்படுவோம். இதில் மற்றவர்களின் அக்கறையை, ஆர்வத்தை,ஆதரவை வரவேற்கிற அதேவேளை, ஒருபோதும் தலையீடுகளை அனுமதிப்பதற்கில்லை.

எங்கள் தரப்புச் செய்திகளை ஏன் வெளியிடவில்லை என்றும் கேட்கப்படுகிறோம். வாசகர்களின் அதீத ஆர்வத்தை மிகவும் வரவேற்கிறோம். எல்லாத் தரப்பு செய்திகளையும் செய்திகளாகவே வெளியிடுவதற்கே விரும்புகிறோம். ஆயினும், செய்திகளைத் தாண்டி விளம்பர உணர்வு மிகைத்துவிட்டால் அதைத் தவிர்ப்பதற்கே பெரிதும் விரும்புகிறோம். "எங்கள் கொள்கையே கொள்கை; மற்றதெல்லாம் ................" என்ற மனப்பான்மையை மாற்றிக்கொண்டாலே யாருக்கும் இது விளங்கும்.

இன்னும் சொல்லப்போனால், கடந்த காலங்களில் "அந்தச் செய்தியை ஏன் வெளியிட்டாய்?" என்றும் கேட்கப்பட்டோம். உரிமை எடுத்துக்கொண்ட, அந்த 'அதி'  "கார" 'மண'மிகுந்த கேள்விகளையும்  எளிதாக, ஒரு பச்சைமிளகாயைக் கடித்த உணர்வுடனே மெல்லவே கடந்தோம். எனினும், வெறும்வாயை மெல்வதற்கு இடம்கொடுத்தோமில்லை.

இச் சமூகத்தளம் இறையருளால் இன்னமும் சாதிக்க வேண்டியது நிறைய,நிறைய, நிறையவே இருக்கிறது.

உறங்குவதற்கு முன்பு செல்லவேண்டிய தொலைவுகளும் இலக்குகளும் கண்களுக்கு முன் விரிந்துகிடக்கின்றன.

கனவு நுரைத்த பொழுதுகளாய் வாழ்வின் கோப்பைகளில் நிரம்பியிருக்கிறது காலம்.

வரும் மாற்றங்களை பெரும் முன்னேற்றங்களாக மாற்றிக்கொள்ளவேண்டிய மாபெரும் பொறுப்பை சுமந்தலைகின்றோம்.

இன்ஷா அல்லாஹ், மேலும் பல நல்ல மாற்றங்களை நமது சமூகத்தில் முன்னெடுக்கவும், ஊடக அளவில் தேடலாகக் கிளம்பிய இத்தளம் உறுதுணையாக அமையும் என்று உத்தரவாதமளிப்பதோடு, இத்தளத்தில் மேலும் பல நன்முயற்சிகளை எடுப்பதற்கான உறுதியுடன் எங்களின் இந்த ஊடகப் பயணத்தில் மென்மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஆதரிக்கவும் அரவணைக்கவும், பிரார்த்திக்கவும் வாசகர்களாகிய உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

நன்றி, வஸ்ஸலாம்
 

- MYPNO ஆசிரியர் குழு

 

MYPNO வலைப்பூவில் 08-01-2008 அன்று வெளிவந்த முதல் செய்தியை வாசகர்களுடன் பசுமையோடு நினைவு கூர்வதில் உள்ளார்ந்த மகிழ்ச்சியடைகிறோம்...

 

 மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

 

ஊரில் கடந்த வாரம் வரை பெய்த பருவமழை காரணமாக மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு குளத்தில் குளிக்க நிறைய பேர் வருகின்றனர்.

நீச்சல் தெரிந்த சிறுவர்கள் தங்களின் திறமையை காண்பிக்க மீராப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தின்மீதேறி டைவ் ஷாட் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துவதால் வழக்கம்போல் ஒரு சில நிர்வாகிகளின் குரல் அவ்வப்போது வலுக்கும். அதையெல்லாம் நம்ம பசங்க கண்டுகொள்வார்களா என்ன?.

MYPNO-வின் முதற் பதிவு நாள்: 08-01-2008

 

திங்கட்கிழமை, 09 ஜனவரி 2012 12:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # தமிம் 2012-01-08 22:29
MY PNO மேலும் சிறக்க துவாவும், வாழ்த்துக்களும்...!
ஆசிரியர் குழுவுக்கு பாராட்டுக்கள் பல...!
அனைத்து புகழும் இறைவனுக்கே....!
5 என்பது 50 ஆகட்டும் இன்ஷா அல்லா......
Reply | Reply with quote | Quote
 
 
0 # முஅ .மௌலானசாஹிப் . 2012-01-08 23:55
அஸ்ஸலாமு அழைக்கும் ,
எந்த ஒரு பொது சேவையிலும் வாழ்த்துவதற்கு ஐந்து பேர் இருந்தால்
குறைக்கூற பத்து பேர் இருப்பார்கள் .
இந்த நமதூர் வலைதளத்தினால் எவ்வளவு பயன் என்பதை வெளிநாடு வாழ்
நமதூர் சகோதரர்கள் நன்கு அறிவார்கள் ,கனினியை இயக்க ஆரம்பித்ததுமே
mypno விற்கு விஜயம் செய்துவிட்டுத்தான் மற்ற வலைதளத்திற்கு செல்லும்
சகோதரர்களும் இருக்கின்றார்கள் ,ஆனால் என்னா வெளிப்படையாக காட்டிக்
கொள்ள மாட்டார்கள் .
தங்களது ஐந்து வருட சேவையில் பல போற்றல் ,தூற்றல்களை
சந்தித்து விட்டதாக எழுதி இருந்தீர்கள் ,
நாயானது அருளால் இந்த வலைதளத்தின் வாசகர்கள் ஓரளவு மனப்பக்குவம்
அடைந்து இருப்பார்கள் ,ஆகவே எதிர்க்காலத்தில் இதுபோன்ற இன்னல்கள்
இருக்காது என்கின்ற நம்பிக்கையில் ,உங்களது சேவை தொய்வின்றி தொடர
வாழ்த்துகின்றேன் .
Reply | Reply with quote | Quote
 
 
0 # farook baqavi 2012-01-08 23:56
mypnoக்கு நான் சமீபகால வாசகன்தான்,
இருந்தாலும் ஆரம்பக்காலத்தில் -- பார்த்து படித்தும் இருக்கிறேன், ஊரில் இருந்ததால் அதன் மீது அதிகம் ஆர்வம் எடுத்துக்கொள்ளவில்லை,
ஆனால் இப்போது எத்தனையோ செய்திகளை ஆர்வத்தோடு (சில செய்திகளை கவலையோடும்) அறிந்துக்கொள்கிறேன், அதுப்போல் நிறைய....

அடுத்தவருக்காக (சமுதாயத்துக்காக) எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சின்ன சேவை செய்வது இந்த காலத்துல மிகப்பெரிய விஷயம்,
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் எல்லா வித பரகத் செய்வானாக ஆமீன். சுயவிமர்ச்சனமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வர வாழ்த்து(ஆ செய்)கிறேன். வீண் பேச்சிக்களுக்கும், வாதங்களுக்கும் மனம் தளர வேண்டாம்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # நஜீர் உபைதுல்லாஹ் 2012-01-09 00:52
எல்லாப் புகழும் இறைவனுக்கே" அல்ஹம்துலில்லாஹ்.
தாங்கள் இதை தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நேரம் கிடைக்கும் போது எல்லாம் அதாவது ஒரு நாளைக்கு பலமுறை mypno வை திறந்து பார்க கூடியவனாக உள்ளேன்.எவ்வித பொருளாதார ஆதாயங்களையும் எதிர்பாராமல் ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்புணர்வுகளை மனதார பாரட்டுகிறேன். தடங்களில் தடங்கலாய் வந்ததையெல்லாம் கடந்து ஊடகதுறையில் 5 வது மைல் கல்லை எட்டியுள்ளீர்கள்.தொடர்ந்து நடுநிலையுடன் சார்பின்மையில்லாமல் ஊர்ச்செய்திகளின் முன்னோடியாக தொடர்ந்து விளங்க வாழத்துகிறேன்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # UTHUMAN ALI. M 2012-01-09 15:45
I WISH TO TAKE THIS OPPORTUNITY TO CONGRATULATE ALL THOSE WHO SPENT THEIR TIME AND EFFORTS TO BRING OUT THIS WEBSITE WITH GREAT SUCCESS.PLEASE DON'T GIVE IMPORTANCE ON PORTONOVO NEWS ONLY. ALSO TRY TO SHARE
WITH GOOD IDEAS FOR THE SUCCESFUL FUTURE OF OUR PORTONOVO YOUTHS.
CONGRATULATIONS.
UTHUMAN ALI.M
ALJOMAIH CO. RIYADH
Reply | Reply with quote | Quote
 
 
+1 # ரமீஜா 2012-01-09 16:36
ஊரின் முன்னோடியாக விளங்கும் MYPNO நமதூரின் பிற வலைதளங்கள் தொடங்குவதற்க்கும் முன்னோடி என்றால் அது மிகையல்ல
Reply | Reply with quote | Quote
 
 
0 # MARAKALAYAR 2012-01-09 19:56
APPRECIATE YOUR HARD WORK. YOU GUYS DOING GREAT JOB. WISH YOU GET GROWING AND KEEP DOING. THANKS MUCH.
Reply | Reply with quote | Quote
 
 
0 # MG.KAMARUDIN-RIYADH. 2012-01-09 22:06
I WISH TO YOU CONGRATULATE MY PNO.COM
Reply | Reply with quote | Quote
 
 
0 # MG.KAMARUDIN-RIYADH. 2012-01-09 22:09
I WISH TO YOU CONGRATULATE MYPNO.COM
Reply | Reply with quote | Quote
 
 
0 # Port guys 2012-01-10 16:55
CONGRATULATIONS ...
மேலும் சிறக்க en வாழ்த்துக்கள.....
Reply | Reply with quote | Quote
 
 
0 # Zainul Abudeen Malimar 2012-01-10 17:03
Well done, you deserved the success. Congratulations to you and keep it up the same. :D :lol: :-)
Rgds,
Malimar.Z
Reply | Reply with quote | Quote
 
 
0 # JAFAR MARICAR, MALAZ 2012-01-11 09:47
பரங்கிப்பேட்டைக்காக எத்தனையோ இணையத்தளம் இருக்கிறது ஆனால் அதில் முண்ணனியில் இருப்பது MYPNO.COM தான்.

வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டைகாரர்களுக்கு ஊர் செய்திகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தும், இந்த இணையத்தளமும், அதற்காக உழைக்கும் தம்பி-களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஊரிலிருப்பவர்களை விட எங்களுக்கு இதன் அவசியம் புரிகிறது - தேவைப்படுகிறது. என் home page mypno.com தான். சோர்வடைந்து விடாதீர்கள், காலம் மாறும், .அப்போது காட்சிகளும் மாறும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
 
 
0 # azeembasha2012 2012-01-11 11:12
எனக்கு பிடித்த முஹம்மது பந்தர் செய்திகளை வெளியிடும் my pno.com க்கு சலாம் மற்றும் நன்றிகள்.
Reply | Reply with quote | Quote
 
 
0 # jafar sadik navabjan 2012-02-08 10:13
அனைத்து புகழும் இறைவனுக்கே. MY PNO மேலும் சிறக்க துவாவும், வாழ்த்துக்களும் ...!
Reply | Reply with quote | Quote
 
 
0 # Mustafa -Indonesia 2012-04-12 15:50
Alhamdhulillah.. Good Job with Great Efforts...
All the Best.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh