Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி அதிகாரிக்கு உயர் விருது

  • PDF
பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அதிகாரி அஜித்குமாருக்கு மீன்வள வல்லுநர் கூட்டமைப்பின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மீன்வள விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட மீன்வள வல்லுநர்கள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் மீன்வள தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2011 ம் ஆண்டில் மீன்வள தொழிற்நுட்பத்தை பெருக்குவதிலும், உற்பத்திலும் சிறந்து பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு 'கே. சிதம்பரம் நினைவு விருது' வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை ஆராய்ச்சி அதிகாரி அஜித்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய அரசு உவர்மீன் வளர்ப்பு ஆராய்ச்சி இயக்குநர் பொன்னையா வழங்கினார்.
விருது பெற்ற அஜித்குமார் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் அறிவுறுத்தலின்பேரில் ஆராய்ச்சி என்பது ஆய்வுக்கூடத்தோடு நின்றுவிடாமல் சுற்றுவட்டார மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்லநோக்கத்தோடு நாங்கள் இந்த தொழிற்நுட்பத்தை கடலோர மக்களுக்கு பயிற்றுவித்துள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் அடுத்த கட்டமாக பிச்சாவரம் பகுதியில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.
விருதுபெற்ற அஜித்குமாரை துணைவேந்தர் ராமநாதன், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டினர்.
Source: Dinamalar 

புதன்கிழமை, 11 ஜனவரி 2012 12:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh