Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பதிவாளரை மாற்ற எம்.எல் ஏ கோரிக்கை!

  • PDF

MLAதமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சிதம்பரம் தொகுதி மா.கம்யூ., பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசும் போது, "அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளரை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதைக் கண்டித்து

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், சிதம்பரம் கிழக்கு பகுதியில், 20 கிராமங்களின் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கிய, பாலமான் கால்வாய் சாக்கடையாக மாறி ஓடுகிறது.

கொள்ளிடம் மற்றும் புவனகிரி வெள்ளாற்று கரையை ஒட்டியுள்ள விலை நிலங்கள், கடல் நீரின் ஏற்றத்தால் உவர் நிலமாக மாறியதால், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அறிவித்த மின்வெட்டுக்கு மேல், 10 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், அரசு ஊழியர்கள் நெருக்கடியால் பஸ்சின் மேற்கூரையில் ஆபத்தான பயணம் செய்துவருகின்றனர்.

விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நிறுத்தப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி சட்டசபையில் பேசாமல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரை மாற்றுவதற்கு சட்டசபையில் பேச வேண்டிய காரணம் என்ன. பதிவாளரை மாற்றுவதுதான் உங்களை நம்பி ஓட்டுப்போட்ட மக்களின் முக்கிய பிரச்சனையா, அல்லது சுயநலமா என, அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வை ஆதரித்து, மண் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும். தமிழகத்தின் கல்வி கோவில் அண்ணாமலை பல்கலைக்கழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சட்டசபையில் உரிமைக்கு குரல் கொடுத்த பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி என கூறப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் முக்கிய இடங்களில் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட போஸ்டரால், நகர மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dinamalar

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012 12:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
0 # மீரா -ஜமால் 2012-04-29 06:33
பேசா மடைந்தைகள் இருக்கும் சட்ட சபையில் நம்ம தொகுதி உறுப்பினர் பேசியது இதுவே அதிகம் தான்.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh