
மர்ஹூம் பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் தனது சேகரிப்பில் பொக்கிஷமாக வைத்திருந்த ஒரு மிகச்சிறிய அளவு புகைப்படம் கணினியால் பழமை தோற்றம் குன்றாமல் மெருகூட்டப்பட்டு இதோ உங்கள் முன்.
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் பற்றி தற்போதைய வயதானவர்களிடம் சென்று அறிய புகுந்தபோது மீராபள்ளியின் பழமை மற்றும் சிறப்புக்கள் பற்றியும், நமதூரினை பற்றி, அதன் பழமையான பாரம்பரிய பெருமை பற்றியெல்லாம் பல்வேறு அரிய தகவல்கள் நமக்கு கிடைத்தன.
இப்புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு பற்றி யாருக்குமே தெரியவில்லை. தற்போதுள்ள மீராப்பள்ளியின் மூத்த நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயருக்கோ, காஜியார் தெரு மைந்தன் நகுதா பாயுக்கோ (நகுதாபாயுக்கு தற்போது நூறு வயது என்று சொல்கிறார்கள்) இன்னும் சில பெரியவர்களிடம் இந்த புகைப்படத்தை காண்பித்து கேட்டதற்கு யாருமே இந்த அடையாளங்களோடு இந்த தோற்றத்தில் மீராபள்ளியை கண்டதில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக அந்த நடு விளக்கை யாருமே பார்த்ததில்லையாம். அத்தனை பழைமையான இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் அவர்களின் கணிப்பிலேயே சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு செல்கிறது.
உலகின் முதல் போட்டோ எடுக்கப்பட்டது 1826 இல். (இன்றைக்கு 186 ஆண்டுகளுக்கு முன்பு.) 1840 களில் எல்லாம் இந்தியாவிற்கு கேமரா வந்துவிட்டது என்பதையும் தமிழகத்திற்கு குறிப்பாக நமதூருக்கு என்று கூட்டி கழித்து பார்த்தால் எப்படியும் 1870 லிருந்து என்று வைத்துக்கொண்டால், கிட்டத்தட்ட 140 வருட பழமை கதையாகிறது இந்த புகைப்படத்திற்கு. இது மிக அதிகபட்ச சாத்தியகூறு. குறைந்த பட்ச சாத்திய கூறு சுமார் நூற்று இருபது (120) ஆண்டுகள்.
இனி விஷயத்திற்கு வருவோம். இது போன்ற பரங்கிபேட்டையின் பழமையை, பெருமையை, பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் போட்டோக்கள், கையெழுத்துப்பிரதிகள், வேலைபாடுகள் ஏதேனும் இருந்தால் தயவு செய்து வாசகர்கள் அதனை MYPNO-உடன் இணைந்து இந்த வலையுலகில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்படி நீங்கள் MYPNO-உடன் பகிர்வதால் நாம் அதனை ஒரு ஆர்ச்சிவாக தகவல் அடுக்காக பாதுகாத்து வைத்து வரலாம். இது ஒரு துவக்கமே.
...தொடரும்...
தங்களின் பொக்கிஷங்களை பகிர... info@mypno.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
Comments
இது மீராப்பள்ளி தான் பழைமை வாதி.....பக்கிம் ஜாத் இப்படியா இருந்துச்சி வோளுங்க பழைய நினைவுகளை நினைத்து பாருங்கள்....இதிலுமா கருது வேறு பாடு அல்லா அல்லா
ஹி...ஹி..ஹி..
Masha allah very happy to see this old pics..
As palamaivaathi said its look likes pakkem jaath masjid..not meerapalli..
Meera palli is wider in size as well as the arch is more than the pic.
so i think it is pakkeem jath masjid..
Any thanks for the posting of old masjid memories.
Noushad ali - al khobar
ஏன் இதையும் மதே தலைவர்கள் வந்து சொன்னால் தான் நன்புவிர்களா????
முஹல்லாவாசி என்ற வகையில் நான் உருதி படுத்துகிறேன் இது ஜாமியா மஸ்ஜிது மீராப்பாள்ளிதான்
மேலே உள்ள பழைய கட்டிடம் தற்பொழுதும் பின்புரம் அப்படியே உள்ளது இப்போது சென்றால் கூட பார்க்கலாம் நன்றி மை பி என் ஒ
-jafar sadik (nawab),al ain.
தகவலுக்கு நன்றி! தொடரட்டும் mypno - வின் பணி!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: http://pnonazim.blogspot.com/
NICE
N
pallivasal ghalil ulla nalla imangalai ilakkadirgal ...........
idhu varai ilandhu vitteergal inyavadu ..............
RSS feed for comments to this post