Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

நீலம்..! இதுவும் கடந்து போகுமா?

  • PDF

"தானே" புயல் எப்பொழுது எந்த நொடியில் எந்த இடத்தை கடக்குமென்று அதிசயமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த பொழுதிலும் அரசின் மெத்தனத்தால் இழப்பை சந்தித்தது கடலூர் மாவட்டம். இன்னும் தானே விட்டுச் சென்ற சோகத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. ஆனால் இந்த முறை முன்னேற்பாடுகள் செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தை தற்போது "நீலம்" புயல் தாக்கினால் "தானே" போன்று பலமாக இருக்குமோ என மக்கள் அச்சத்தில் ஆடிப்போயுள்ளனர். கடலூர் மாவட்டம் தமிழகத்தின் வடிகாலாக இருப்பது பூகோள ரீதியில் அமைந்துள்ள அதன் நிலப்பரப்பு காரணமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மழைநீர் வடிகால் கடலூர் மாவட்டத்தின் வழியாக பெருக்கெடுத்து வங்க கடலில் கலக்கிறது. இதில் வெள்ள பாதிப்புகள் மாவட்டத்தில் பெருமளவு உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது. 

புயல் பாதிப்புகளும் மாவட்டத்தின் மீது படையெடுப்பது தொடர்கதையாகியுள்ளது. சுனாமி, தானே போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கங்கள் மாவட்டத்தை உருக்குலைய வைத்துள்ளது. இதனால் இயல்பாகவே பகுதி மக்கள் பருவ மழையின் தாக்கத்தில் ஆட்டம் காண்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் கடந்த 19ம்தேதி துவங்கிய நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் கொட்டிய மழையிலேயே அனைத்து பிரதான நீர் தேக்கங்களும் நிரம்பியுள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் உருவெடுத்துள்ள புயல் காரணமாக மாவட்டத்தை புரட்டிபோடுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயுள்ளனர். 

இம்முறை ஏற்பட்டுள்ள புயலால் அதன் தாக்கம் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க உத்தரவிட்டுள்ளது.

தானே பாதிப்பு கடந்த ஆண்டு மாவட்ட மக்களை பரிதவிக்கவிட்டுள்ள நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மீணடும் ஒரு "தானே" பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற செய்தி காட்டுத் தீபோல் மாவட்டத்தில் ஊடுருவியுள்ளது. அதற்கு ஏற்ப புயல் சின்னத்தின் அறிகுறியாக சூறாவளி காற்றுடன் கொட்டிய மழையும், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 5-ம் எண் எச்சரிக்கை கூண்டும் மக்களை அச்சத்தில் ஆட்டம் போடவைத்துள்ளது. 

நீலம் நமது கரையை கடக்காமல், இது நம்மை"விட்டு" கடந்து போய்விட்டால் நலமே!

 

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2012 21:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # முத்து மரைக்காயர் 2012-10-30 21:14
தானே புயல் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்தமக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், மற்றொரு புயலா.............நீலமே....எங்களை பார்க்காமல் திரும்பிசென்றுவிடு...அதவே எங்களுக்கு நிம்மதி
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh