MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

அறிவுஜீவிகளின் தங்க வயலில் அமைதி திரும்புமா...?!

  • PDF

 

 

“நடமாடும் பல்கலைக்கழகம்” என்று போற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன்,  2009ம் ஆண்டு வேதியியல் துறைக்கான உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசைத் தட்டிச் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த  விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக்கள்தலைவர்கள் கல்வி பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவு ஜீவிகளின் தங்க வயல் என்றும் போற்றப்பட்டது. இப்பல்கலைக் கழகம் 1929 ஜூலையில் செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் தொடங்கப்பட்டது.  

சிதம்பரத்தின் அடையாளம் என்று போற்றப்படும் இப்பல்கலைக்கழகம் இன்று கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படும் சூழலில் நிதி சிக்கல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.மதியழகன், ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பேசுகையில்,“  பல்கலைக்கழகத்தில் நிதிசிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதியம் வழங்குவதற்கு சிரமமாக உள்ளது. பல்கலைக்கழக வருமானத்தில் 90 சதவீதம் ஊழியர்களுக்கு சம்பளமும், 10 சதவீதம் நிர்வாக செலவும் செய்யப்படுகிறது.  எனவே, ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பது, ஆள்குறைப்பு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 என்றார்

 

 

இதற்கு பதிலளித்து பேசிய அனைத்து ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத்தினர், நிதிநெருக்கடிக்கு ஊழியர்கள் காரணமல்ல. ஊதியம் குறைப்போ, ஆள் குறைப்போ செய்வதை நாங்கள் ஏற்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், “ தீபாவளி பண்டிகை முடிந்து நவ.14-ம் தேதி திறக்கப்பட இருந்த பல்கலைக்கழக அனைத்து துறை வகுப்புகளுக்கும் திரும்ப திறக்கப்படும் தேதி காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.12-ம் தேதி முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக செயல்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் விடுதி அறைகளை நவ.12-ம் தேதி மாலைக்குள் காலி செய்ய வேண்டும் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த  12 ஆண்டுகளில் மொத்தம் 7ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பணியமர்த்தியிருக்கிறது. இதனால் தற்போது 14 ஆயிரம் மாணவர்கள் பயிலும் அந்த பல்கலைக் கழகத்தில் 14 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பான அதிகாரிகள் சொல்லும் தகவல்களை தவிர ஊடகங்களில் வரும் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு சம்பந்தமான செய்திகளை நம்ப வேண்டாம், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் அமைதியான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நிர்வாகம் தயாராக உள்ளது என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெறும் வணிகத்தில் இப்பல்கலைக்கழக ஊழியர்களின் பங்களிப்பும் அதிகம் என்பதால்,   நிதி நெருக்கடியை சமாளிக்க 4500 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவும், மீதமுள்ள ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக வரும் தகவல்கள் இப்பகுதி வணிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்பதே உண்மை.

“இருக்கைகளை விட இருப்பவர்கள் “ அதிகம் என்று சொல்லப்படும் இப்பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள பிரச்சினையை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம் ஆகும்.

 

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 21:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+5 # முத்து மரைக்காயர் 2012-11-12 07:33
நிர்வாக கட்டமைப்பு சரியில்லாதாக்காரணத்தால் பணியிருக்கோ..இல்லையோ...பணம் கொடுத்தால் பணிக்கொடுக்கபடும் என சிலர் ஒருவாக்கிய சித்தாந்ததால் ,இன்று ஊழியர்களுக்கு மாதசம்பளம் கொடுக்ககூட கொடுக்கமுடியாமல் தர்மசங்கட நிலை, தூங்கிக்கொண்டிருக்கும் இணைவேந்தர் முழித்துக்கொள்வது நல்லது
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh