MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பள்ளிவாசலில் ஒரு பசுமைப் புரட்சி!

  • PDF

 

நிலங்களெல்லாம் சிமெண்ட் காடுகளாகவும், மரங்களை கூட்டாக பார்ப்பதே அரிதாகவும் ஆகிபோய் கொண்டுள்ள இந்த கால கட்டத்தில் சத்தமில்லாமல் மௌன பசுமை புரட்சிகளும் நிகழவே செய்கின்றன.  அப்படிப்பட்ட ஒரு அரிய  செயல் நமதூர் கிளுர் நபி பள்ளிவாசலில் நிகழந்து உள்ளது. பசுமை விரும்பிகள் மற்றும் இறையில்லத்தை நேசிப்பவர்களின் கண்களுக்கும் மனங்களுக்கும் குளிர்ச்சியினை தந்து வருகிறது.

 

 

 

நமதூரின் மிக பழமையான பள்ளி என்று கருதப்படும் கிளுர்நபிக்கு  சொந்தமான இடத்தில் அதன் நிர்வாகிகளில் ஒருவரும் அதன் இன்றைய சில நல்ல மாற்றங்களுக்கு அடித்தள மிட்டமிட்டவருமான முஹம்மது மக்தூம் உடைய முன்முயற்சினால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் எதிர்காலத்தில் அந்த இடத்தை  ஒரு சோலைவனமாக மாற்றிக்காட்டும். 

மஸ்ஜிதுக்கு சொந்தமான இடத்தில் மிகவும் திட்டமிட்டு ஆழ பாத்திகள் அமைத்து சுமார் 250 க்கும் அதிகமான தென்னை கன்றுகள் நடப்பட்டுள்ளன.  இது தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, கத்திரிகாய், வெண்டைகாய், கொய்யாமரங்கள் உள்ளிட்ட பல்வேறு   பணப்பயிர்கள் தனித்தனியாகவும் ஊடுபயிராகவும் இங்கு நடப்பட்டுள்ளன. 

 

இதனை முறையாக பாதுகாக்க பள்ளியினை சுற்றி சுற்று சுவர்கள், கம்பி வேலிகள் (ஆடுமாடு புகா வண்ணம் ) நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் பராமரிப்பிற்கு பள்ளியின் குளத்திலிருந்து திட்டமிட்ட வகையில் தொடராக இணைக்கப்பட்ட நிலை பைப்புகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டு உள்ளது. களைகள்  எடுக்கும் பணிகளும் குறிப்பிட்ட நாட்களுக்கொருமுறை நடைபெறுகிறன. 

 இன்ஷா அல்லாஹ் இன்னும் சில காலத்தில் இந்த செடி கொடி கன்றுகள் வளர்ந்து மரங்களாக காய்த்து குலுங்குகையில் இந்த இறையில்லம் ஒரு மாபெரும் பூஞ்சோலையாக மட்டுமல்ல இறையில்லத்திற்கு இதனால் கணிசமான வருமானம் கிடைக்கவும் செய்யும். இதனை முன்னெடுத்த இந்த பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரான முஹம்மது மக்தூம்  உடைய நேரடி பார்வையில் நடைபெறும் இதற்கு பள்ளியின் தற்போதைய முத்தவல்லியான  செய்யது சாகுல் ஹமீது மற்றும் ஏனைய நிர்வாகிகள் லியாகத் அலி, அஷ்ரப் அலி, மற்றும் முஹம்மது பாரூக் ஆகியோரும் தங்களின் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.   

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்கு  சொந்தமான வக்ப் சொத்துக்கள் பல லட்சம் ஏக்கர் கணக்கில் கவனிப்பாரற்றும் ஆக்கிரமிப்புக்களில் சிக்கியும் அழிந்து கொண்டு இருப்பதை நல்லோர்கள் மனம் வெதும்பி பார்த்தும் கேட்டும் வருகிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற செயல்கள் - பள்ளிவாசல் நிலத்தை அதன் அதிகபட்ச பயனை தருமாறு மாற்றி காட்டியுள்ள - கிளுர் நபி பள்ளி நிர்வாகிகள் குறிப்பாக முஹம்மது மக்தூம் உள்ளிட்டோர் மற்றும் இதற்காக விசால மனதுடன் பொருளுதவி செய்த பெயர் குறிப்பிட விரும்பாத தனவந்தர் ஆகியோர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். 

 

இவை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ள சில சகோதரர்களால் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் முதன் முறையாக கிளுர்நபி பள்ளியின் குளம் தூர் வாரப்பட்டு பெரிதாக ஆழ மற்றும் அகலப்படுத்தப்பட்டது என்பதுவும் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இதுபோல், பள்ளிவாசல் நிலங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டால்,  பள்ளியின்  வருமானத்திற்காக நிர்வாகிகள் சிரமப்படும்  நிலைமாறி பள்ளி நிர்வாக மேலாண்மை ஒரு புதிய திசையில் பயணிக்க செய்யும் முயற்சியில்  இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2013 09:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+4 # mohd rafi, riyadh 2012-12-31 14:00
பாராட்டப்படவேண்டிய விஷயம் மிகவும் நல்ல முயற்சி!உலகம் வெப்ப மயமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டிருக்கும் இந்த செயல் பாட்டினால், சுற்று சூழல் சுகதரமாக அமைவதற்கு உதவியாக இருக்கும். இதற்காக நேரத்தை ஒதுக்கி உழைப்பை கொடுத்தவர்களுக்கு வல்ல அல்லஹ் நற்கூலி வழங்குவானாக!
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Smart 2012-12-31 17:28
Masha allah.......!
Reply | Reply with quote | Quote
 
 
+1 # Hp 2012-12-31 21:02
well appreciated & Hats off for All those are involing in such actions...
Reply | Reply with quote | Quote
 
 
0 # முஹம்மத்@இக்பால் 2012-12-31 22:08
மாஸா அல்லாஹ்
பல வருடங்கள் ஆகுது இந்த பள்ளிய பார்த்து
Reply | Reply with quote | Quote
 
 
0 # Md Khalid 2013-01-01 02:57
மாஷா அல்லாஹ்.....இதைபோல் மீராப்பள்ளி மற்ற பள்ளிகளிலும் கடைபிடிக்கவேண்டும்....
Reply | Reply with quote | Quote
 
 
0 # dammam alaudheen 2013-01-01 18:27
maasa allah....its looking nice natural scene...thanks for my pno..dammam alaudheen..
Reply | Reply with quote | Quote
 
 
+4 # முத்து மரைக்காயர் 2013-01-02 14:58
மீராப்பள்ளியில் மைய்தாங்கொல்லையில் நிறைய இடங்கள் சரியான பராமரிப்பின்றி சத்தியமங்களம் காடுகள்போல் காட்சியளிக்கிறது,இப்பகுதிகளை சீர்படுத்தி பலன் தரக்கூடிய பழக்கன்றுகளையும், காய்கறி வகை செடிகளையும் நடவுச்செய்து காடுகளாக காட்சியளிக்கும் இடங்களை பசுமைத்தோட்டமாக மாற்றலாம். பணம்சிலவாகுமே என யோசனைவேண்டாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
Reply | Reply with quote | Quote
 
 
0 # nazim 2013-01-04 17:10
in sha ALLAH next which masjid in portonove?
Reply | Reply with quote | Quote
 
 
0 # mohamed hashim 2013-01-04 23:15
just see my parangi pettai
Reply | Reply with quote | Quote
 
 
0 # IQBAL. 2013-01-05 10:42
//நிலங்களெல்லாம் சிமெண்ட் காடுகளாகவும், மரங்களை கூட்டாக பார்ப்பதே அரிதாகவும் // THERE IS NO WORDS TO EXPRESS THE FEELINGS.....HAMEED,
Reply | Reply with quote | Quote
 
 
0 # thalha 2013-01-13 18:55
mashaalla
Reply | Reply with quote | Quote
 
 
0 # aliakari riyadh 2013-10-11 00:12
good veri good maasha allah nalla green masjidh allah nalla tawfik saivanaga aameen
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh