MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இடர்ப்பாடுகளிலிருந்து உரம் பெற்ற MYPNO வின் நீளும் பாதைகள்!

  • PDF

 

கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்தபடியிருக்கிறது. உங்கள் MYPNO வலைத்தளம் தொடங்கி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

இவ்வுலகில் சமூகம் மற்றும் சமுதாயத்தின் பின்னடைவுக்குச் சொல்லப்படும் காரணங்களுள் ஒன்றாக ஊடகம் இருக்கிறது. நாம் ஊடகத்தைப் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற யதார்த்தமும், ஊடகங்கள் நம்மை நல்ல முறையில் ஒழுங்காகப் பிரதிபலிக்கவில்லை என்கிற கசக்கும் உண்மையும் இத்துறையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற உந்துதலை அன்றைக்கு எங்களைப் போன்ற சில இளைஞர்களைத் ஊடகத்துறையில் ஈடுபட தூண்டியது.

முதலில் ஊர்ச் செய்திகளை இன்றைய நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் ஊடே இணைய இதழாக அளிக்கலாம் என்று கருதினோம். அப்படித் தான் தொடங்கிற்று இந்த நெடும்பயணத்தின் முதல் அடி. MYPNO.COM அப்படித்தான் மலர்ந்தது. தேதித்தாள் கிழிபடுகிறதோ இல்லையோ, இணையதளத்தினை பயன்படுத்தும் நமதூர் மக்களின் அன்றாட அலுவல்களில் MYPNO-க்கு வருகையளிப்பதும் அதுதரும் செய்திகளை வாசிப்பதும் தவிர்க்க இயலாததாயிற்று, மக்களின் செய்தித் தாகத்தை சரிவர உங்கள் MYPNO நன்கு உணர்ந்திருப்பதும், வெற்று பரபரப்புக்கு இடம் கொடுக்காமல் செய்திகளைச் செய்திகளாகவே சொல்லும் அதன் பான்மையும் இந்த வளர்ச்சிக்குரிய இறை அருளை எடுத்துவந்தன என்றால் மிகையில்லை.

இன்று MYPNO ஊர்ச்செய்திகளுடன் மற்ற பிரதான செய்திகளையும் அளிக்கும் நல்லதொரு இணைய ஊடகமாகப் பரிமாணித்திருப்பதில் வாசகர்களின் ஒத்துழைப்பும் ஆர்வமும் இதயத்தில் என்றைக்கும் பதிக்கத்தக்க சித்திரங்களாகவே இருக்கின்றன.

இந்த இனிய வேளையில்  சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்: ஊரின் முன்னோடியாக முன்னிலைப்படுத்த, எங்களுக்கு கிடைக்கப்பெற்ற சில புள்ளியல் ததகவல்களையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

இணைக்கப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ளபடி...

  • தினமும் சராசரியாகக் குறைந்தபட்சம் 700 வாசகர்கள் நமது வலைதளத்தை உலாவருகின்றனர்.
  • தினமும் சராசரியாகக் குறைந்தபட்சம் 25,000 சொடுக்குகள் வரை நமது தளத்தில் சொடுக்கப்படுகின்றன.
  • மாத சராசரியாக 27,000 வருகைகள் பதிவு செய்யப்படுகின்றன.

வளரும் ஊடகம் ஒன்று சந்திக்கும் இடர்ப்பாடுகளையும் ஐயநோக்குகளையும் உங்கள் MYPNO சந்திக்காமல் இல்லை. சொல்லப் போனால், அந்த இடர்ப்பாடுகளிலிருந்து அது உரம் பெற்றது. கடப்பாடுகளை கொண்டது. ஐய நோக்குகளை ஜெய நோக்குகளாக மாற்றிட முனைந்து வென்றுவருகிறது.

இந்த இனிய தருணத்தில் எங்களின் வாசகர்களுக்கு நாங்கள் சொல்ல நினைப்பது இதுதான். மென்மேலும் ஊடக வானில் ஒளிர்ந்திடவும், உயரே பறந்திடவும்,   ஊடகவலிமை என்பதை உண்மையின் வலிமையென்றே உணர்(ந்)த்திடவும், உங்கள் அனைவரின் உரிமைக் குரலாய் ஒலித்திடவும் உங்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனைகளும் தான் வேண்டும் எங்களுக்கு!

வாசக நண்பர்களின் குரலோசைகளை ஏந்திக்கொள்ள எங்கள் செவிப்புலன்கள் விழித்திருக்கின்றன எப்போதும். தயக்கமும், தளர் எண்ணமும் இன்றி வாய்மையும் தூய்மையுமான நற்கருத்துகளால் எங்கள் இதயக்கதவுகளை வாசகர்கள் எச்சமயத்திலும் தட்டலாம். அதன்மூலம் உங்கள் MYPNO-வினை மென்மேலும் சிறக்கச் செய்யலாம் என்று கூறிக்கொள்கிறோம்.

நன்றி.

- MYPNO வலைத்தள ஆசிரியர்குழு.

 

  

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 15:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+19 # Abdullaah 2013-01-22 12:54
Classic Editorial.
Congrats MYPNO. Really Wonderful Job.
Carry on...May Allah be with you in all your deeds
Reply | Reply with quote | Quote
 
 
+15 # mohamed rafi, riyadh 2013-01-22 13:44
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஐந்தாவது ஆண்டை கடந்து ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் my pno வலை தளத்திற்கு வாழ்த்துக்கள்.உங்களின் பணி மேன்மேலும் தொடர அல்லாஹ் அருள் புரிவானாக.என்னைபோன்ற வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு my pno ஒரு தவிர்க்க முடியாத தளமாகி விட்டது என்றால் அது மிகையில்லை.தொடரட்டும் உங்கள் பணி.ஜஜாகல்லாஹு கைரா!
Reply | Reply with quote | Quote
 
 
+13 # Valipokkan 2013-01-22 14:31
Surely mypno.com is the first and foremost parangipettai website.
Insha Allah Our Prayers and cooperation are with you people.
UNGALUKKU THOLLAI THANDAVARGAL YELLAM IPPA UNGA MOOLAMAAGAVE PUGAL PERUGIRAARGAL Kavaniththeergalaa?
Reply | Reply with quote | Quote
 
 
+3 # JAFAR MARICAR, MALAZ 2013-01-29 14:10
Quoting Valipokkan:
Surely mypno.com is the first and foremost parangipettai website.
Insha Allah Our Prayers and cooperation are with you people.
UNGALUKKU THOLLAI THANDAVARGAL YELLAM IPPA UNGA MOOLAMAAGAVE PUGAL PERUGIRAARGAL Kavaniththeergalaa?


"உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் இப்போ உங்கள் மூலமாக புகழ் பெறுகிறார்கள் கவனித்தீர்களா? " என்று தமிழில் எழுதக்கூடாதா. வழிப்போக்கரே..?
Reply | Reply with quote | Quote
 
 
+12 # rafiq 2013-01-22 16:16
azalakana tamil, padippatharku nalla suvaiya irunthathu, parattukkal ungaludaiya nerathai inethana vannam selavu saivarku
Reply | Reply with quote | Quote
 
 
+12 # மாலிமார் 2013-01-22 16:59
இந்த my pno தொடங்கியது முதல் தொய்வில்லாமல் 5 வருஷங்களைத் தாண்டி இதுநாள் வரை செய்திகளை பரங்கிப்பேட்டை மக்களுக்கு குறிப்பாக வெளிநாட்டு வாழ் மக்களுக்கு ஈடு இணையில்லாத சேவையை செய்து வருகிறது. நன்றிகளைச் சொல்ல வார்த்தை இல்லை mypno
Reply | Reply with quote | Quote
 
 
+11 # முச்சந்தி குழுமம் 2013-01-22 18:22
இவ்வலை தளம் துவங்கி ஆறு ஆண்டுகள் ஆனாலும் துவங்கிய தினத்தின் முதல் பதிப்பு பரங்கிபேட்டை-புதுச்சத்திரம் சாலை படங்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.உள்நோக்கமற்ற சேவைகள் என்றும் சிகரம் தொடும்...மென்மேலும் சிறகடித்து உயர முச்சந்தி குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
 
 
+6 # முத்துமரைக்காயர் 2013-01-22 22:43
செய்திகளை விருப்பு -வெறுப்பு இன்றி செய்தியாகவே தரும் சிறப்பு பரங்கிப்பேட்டையை பொருத்தவரை வேறு எந்த வலைதளங்களிலும் இல்லை எனலாம்,அதனால்தான் நம்மூரில் எத்தனையோ வலைதளங்கள், வலைப்பூக்கள் இருந்தாலும் அவை அனைத்திலையும் MYPNO மாறுபட்டு மக்களுக்கு தெரிகிறது என்றால் அதுதான் உண்மை.
Reply | Reply with quote | Quote
 
 
+5 # முஹமது கவுஸ். எஸ் 2013-01-23 11:27
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஐந்தாவது ஆண்டை கடந்து ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் my pno வலை தளத்திற்கு வாழ்த்துக்கள்.உங்களின் பணி மேன்மேலும் தொடர அல்லாஹ் அருள் புரிவானாக.என்னைபோன்ற வெளிநாட்டில் வசிப்பவர்களுக்க மட்டுமில்லாமல் முக்கியமாக ஊர் விடயங்களை தெளிவாக எடுத்துரைப்பது, நடுநிலையாக செய்திகளைத்தருவது போன்ற காரியங்களை செவ்வனே செய்வதில் my pno ஒரு தவிர்க்க முடியாத தளமாகி விட்டது என்றால் அது மிகையில்லை.செய்திகளை விருப்பு -வெறுப்பு இன்றி செய்தியாகவே தரும் சிறப்பு பரங்கிப்பேட்டையை பொருத்தவரை வேறு எந்த வலைதளங்களிலும் இல்லை எனலாம்,அதனால்தான் நம்மூரில் எத்தனையோ வலைதளங்கள், வலைப்பூக்கள் இருந்தாலும் அவை அனைத்திலும் MYPNO மாறுபட்டு மக்களுக்கு தெரிகிறது. தொடரட்டும் உங்கள் பணி. ஜஜாகல்லாஹு கைரா!
என்றும் மாறா அன்பு மற்றும் துஆக்களுடன் ..

முஹம்மது கவுஸ் .எஸ்
அஜ்வா குருப்ஸ்
யான்பு / சவுதி அரேபியா
Reply | Reply with quote | Quote
 
 
+1 # MARU. L. BOOPATHY 2013-01-31 11:08
தங்கள் சேவை சிறக்க வாழ்துக்கள். என்றும் அன்புடன் - லெ. பூபதி.
Reply | Reply with quote | Quote
 
 
0 # Faruk Ali 2013-02-01 02:54
மாஷாஅல்லாஹ் MY PNO வெற்றிகரமான ஆறாவது ஆண்டில் அடிஎடுத்து வைத்திருக்கிறீர்கள் ஜசகல்லாஹ்கைரா இன்ஷாஅல்லாஹ் மேலும் உங்கள் பனி தொடர அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன். A . பாரூக்அலி ரியாத் k S A .
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh