Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பரங்கிப்பேட்டையில் மேலும் ஒரு வழிகாட்டி விளக்கு

  • PDF

பரங்கிப்பேட்டை  முடசல் ஓடை மீனவ கிராமத்தில் வழிகாட்டி விளக்கு செயல்படத் துவங்கியதால் எட்டு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கரைக்கு திரும்பும் போது அடிக்கடி திசைமாறி செல்வதால் கால விரயம், பொருட் செலவு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மீன் வளத்துறை மூலம் பரங்கிப்பேட்டை முடசல் ஓடை மீன் இறங்கு தளம் அருகே கடற்கரையோரம் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்பில் வழிகாட்டி விளக்கு அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது.

இந்த வழிகாட்டி விளக்கு காற்றாலை மூலமாகவும், சூரிய ஒளி மூலமாகவும் விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை தானே எடுத்துக் கொள்ளும். சூரியன் மறையும் நேரத்தின் போது தானாகவே விளக்கு எரியும். காலையில் சூரியன் உதிக்கும் முன்பு தானாகவே விளக்கு நின்று விடும். முடசல் ஓடையில் இருந்து கடல் பகுதியில் எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை விளக்கின் வெளிச்சம் பரவலாக தெரியும்.

இந்த பணி முடிந்து தற்போது செயல்பட துவங்கியுள்ளதால் இரவு நேரங்களில் கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் மீனவர்கள் திசை மாறிச் செல்லாமல் இந்த வழிகாட்டி விளக்கின் வெளிச்சத்தை கொண்டு கரைக்கு வருகின்றனர்.

இதனால் முடசல் ஓடை, சூரிய நகர், எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத் துறை உட்பட எட்டு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்

புதன்கிழமை, 06 மார்ச் 2013 16:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh