Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இராணுவத்தில் சேர ஆசையா?

  • PDF

சென்னைப் பிரிவு ராணுவ மையம் சார்பில், ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம், நெய்வேலியில் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பிராந்திய ராணுவக் கேந்திரம், தமிழக வடமாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாமை, நெய்வேலியில் என்எல்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில், சுமார் 1000 இளைஞர்கள் ராணுவ வீரராக தேர்ச்சி பெற்று தற்போது பயிற்சி களத்தில் உள்ளனர்.

இந்த ஆண்டு, ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம், நெய்வேலி கிருஷ்ணன் கோயில் மைதானம் மற்றும் பாரதி விளையாட்டரங்கில் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என சென்னை பிராந்திய ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர் சஞ்சீவ்திவேதி தெரிவித்துள்ளார்.

ஏற்பாடுகளை என்எல்சி சமூக பொறுப்புணர்வுத் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

புதன்கிழமை, 19 ஜூன் 2013 12:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh