Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற...

  • PDF
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2013-2014 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெற...
  • மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் மாணவர்கள் (9-ஆம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்நலத் துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2013-2014-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.
  • குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  • மாணவ, மாணவிகள் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை http://www.sp.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறும் விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்புப் பட்டியலை உரிய படிவத்தில் பதிவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:20 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh