MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தலையங்கம்: படியில் பயணம்! நொடியில் மரணம்!!

  • PDF

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நமது பிள்ளைகள் வெளியூர்களில் பேரூந்துகளில் சென்று படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேண்டுகோளாக இந்த தலையங்கம் பதிவிடப்படுப்படுகின்றது.

பஸ்சில் செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களின் படிக்கட்டு பயணம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் செல்லும் ஒரு சிலர் பஸ்சுக்குள் சென்று பாதுகாப்பாக பயணம் செய்வதை மானப்பிரச்சினை போல கருதுகிறார்கள்.

படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மட்டுமே துணிச்சலானவர்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்பவர்களை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அரசு பஸ்களில் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பிகளில் முழு பலத்தையும் காட்டியபடி மாணவர்கள் படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் தொங்கிக் கொண்டு பயணிப்பது தினமும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தமிழகம் முழுக்க இதுபோன்ற காட்சிகளை அதிகம் காண முடியும். குறிப்பாக கல்வி நிலையங்கள் அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் மாலை நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் சாலையில் கூடி நிற்பார்கள். இங்கு நிற்கும் மாணவர்களுக்கு பயந்து ஒரு சில பஸ் டிரைவர்கள் தூரத்தில் சென்று பஸ்சை நிறுத்துகிறார்கள். அப்போது மின்னல் வேகத்தில் ஓடிச் செல்லும் மாணவர்கள், நிரம்பி வழியிம் பஸ்சில் கிடைப்பதை பிடித்து தொங்கிக் கொண்டே செல்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்கள் தோளில் தொங்க விட்டுள்ள புத்தக பைகள் சாலையில் செல்வோரை பதம் பார்க்கிறது. நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் ஆகியோர் கீழே விழுந்து எழுந்து செல்கிறார்கள். சில நேரங்களில் பஸ்சை பிடிப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு ஓடுபவர்கள், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மீது மோதிவிட்டு செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் சாலையோரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளிலும் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் சிக்குகிறார்கள்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களால் விலை மதிப்பில்லா உயிர்கள் பலியாவதை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். படிக்கட்டில் தொங்கிச் செல்பவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும். இது ஒன்றே அவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகும். அதே நேரத்தில் இளைஞர்களும் தங்களை எதிர்பார்த்து வீட்டில் பெற்றோர் கனவுகளுடன் காத்திருப்பார்கள் என்பதை உணர வேண்டும்.

'படியில் பயணம் நொடியில் மரணம்' என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அனைத்து பஸ்களிலும் தவறாமல் இடம் பெற்றுள்ளன. இதனை இளைஞர்கள், மாணவர்கள் மனதில் பதிய வைத்தாலே இது போன்ற மரணங்களை தடுக்க முடியும்.

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013 17:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+1 # COT.Mohammed Ghouse 2013-06-19 16:04
'மாணவர்க்கு வேண்டுகோள்' விடுத்திருக்கும் தலையங்கத்திற்கு நன்றி.

"இ வுங்(வன்)களுக்கு வேறே வேலையே இல்லே! சொல்லவந்துட்டா ங்(ன்)க"
என்று மெல்லீசா முனுமுனுப்பது தங்களுக்கும் கேட்டிருக்கும்.


மாணவர்கள் மட்டுமல்ல, பணிபுரியும் இளைஞர்களின் சிந்தைக்குள்ளும்...
பொறுப்புணர்வைத் தூண்டிடும் இலவச அறிவுரைகள் நுழைவதே இல்லை!

ஏன்... அபராதம் விதித்திடும் சட்டத்தை அரசே உருவாக்கி வன்மையாய் எச்சரித்தும்கூட,
படிப்பயணங்களில்... அலட்சியம் குறையவே இல்லை.

விபத்தில் சிக்கி செத்தொழிவோரை அல்லது முடமாகித் தவிப்போரைக் கண்டாலும்,
அக்கணமே அல்லது அதிகபட்சம் அடுத்த நாளே அந்நிகழ்வை மறந்தும் போகின்றார்...
இப்புத்திசாலிகள் ஒவ்வொருவருமே.

"உடல்கெட்டபின்பு வந்ததடி ஞானம்" என்ற நிலையை தானே எய்திடும்வரை...
அவரது படிப்பயணங்கள் தொடரும். எவ்வித மனமாற்றமும் ஏற்படாது.


மாணவர் பயணிக்கும் காலை மற்றும் மாலைப் பொழுதுகளில்,
வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திடும்படி,
பொதுமக்கள் அனைவரும் 'போக்குவரத்துத்துறைக்கு வேண்டுகோள்" வைத்து
சாதிப்பதொன்றே... பெற்றோர்க்கு நிரந்தர நிம்மதியைத் தரும் தீர்வாய் அமையும்.


- கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்
Reply | Reply with quote | Quote
 
 
+1 # farukali 2013-06-20 00:06
Jazakallah khair my pno. A.FARUKALI RIYADH KSA.
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh