Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இன்டர்நெட் சென்டர் வைத்திருப்பவரா நீங்கள்?

  • PDF

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பு பணியை மேற்கொள்ள தகுதியுள்ள இணையதள தேடல் மையங்களின் (இன்டர்நெட் சென்டர்) உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவும் தேர்தல் இணைய தளத்தில் விவரங்கள் தேடுதல் மற்றும் வாக்காளர் பட்டியல் பக்கங்களின் நகலை அச்சிடுதல் போன்ற பணிகளுக்கு உரிய கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு விருப்பம் தெரிவிக்கும் இன்டர்நெட் மையங்களை, மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வாக்காளர் பதிவு மையங்களாக செயல்பட அதன் உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

  • இந்த சேவையை பயன்படுத்தி பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புகார் பதிவு செய்யும் பணிகளுக்கு தலா 10 ரூபாய்.
  • வாக்காளர் பட்டியல் அச்சிட்டு தர ஒரு பக்கத்திற்கு 3 ரூபாய்.
  • வாக்காளர் பெயர், ஓட்டுச்சாவடி மையம் போன்ற விவரங்கள் மற்றும் புகார்களின் நிலையை அறிய 3 ரூபாய்.
  • இந்த தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு தர பக்கத்திற்கு 2 ரூபாய் கட்டணமாக பொதுமக்களிடம் வசூலித்துக் கொள்ளலாம்.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள அனுமதிபெற்ற இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்கள் வரும் 15ம் தேதிக்குள்,

  • மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர், கலெக்டர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது deocuddaloref@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்.
  • அல்லது, அந்தந்த பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ., மற்றம் தாசில்தார்களிடம் வழங்கலாம்.

மேலும், விவரம் வேண்டுவோர் 04142-232811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013 16:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh