Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சுயமாக தொழில் தொடங்க பயிற்சி

  • PDF

MSME

சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு நிறுவனத்தில் ஏற்றுமதி மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்த சான்றிதழ் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுயமாக தொழில் செய்வது எப்படி, வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி? கடன் பெறுவது எவ்வாறு? சுங்க வரித்துறையை எவ்வாறு அணுகுவது? பேக்கிங் செய்வது எப்படி? உள்ளிட்டவை குறித்த 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

ஜூலை 20, 21, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக பொதுப் பிரிவினர் 6 ஆயிரம் ரூபாயும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 3 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

சேர்க்கைக்கு நேரில் வருபவர்கள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை எடுத்து வரவேண்டும். நேரடி தகவல்களுக்கு, எண் 65/1, GST சாலை, அறை எண்: 23, முதல் தளம் கிண்டி, சென்னை - 600 032 என்ற முகவரியில் உள்ள துணை இயக்குநர் பத்மநாபனை தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு, 86081 30439 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது www.msmedi-chennai.gov.in என்ற இணைய தளத்தையோ அணுகவும்.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh