வடக்கு மத்திய ரயில்வேத் துறையில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி ரயில்நிலைய அதிகாரி, மோட்டார்மென் உள்ளிட்ட கிரேட் "C" அளவிலான பணிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தனி நபர் மற்றும் குழு விளையாட்டுகள் என 5 முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பளு தூக்குதல், தடகளம், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், இறகுப் பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் பங்கு பெற்ற விளையாட்டு போட்டிகளின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும். கூடுதல் விவரங்களை www.ncr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
தேவையான அடிப்படைத் தகுதிகள்:
- பத்தாம் வகுப்பு அல்லது ITI அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தொழில்நுட்ப ரீதியிலான பணிகளுக்கு +2 தேர்ச்சி அல்லது முதலாம் ஆண்டு இயற்பியல் இளநிலைப் பட்ட வகுப்பில் தேர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம். இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
- 2011ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பின் விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
- .
விளையாட்டு வீரர்களுக்கு:
- 10ஆம் வகுப்பு அல்லது ITI தொழில்நுட்ப ரீதியிலான பணி: +2 அல்லது இயற்பியல் இளநிலைப் பட்டத்தில் முதலாம் ஆண்டு தேர்ச்சி
- இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான படிப்பு
- வயதுவரம்பு: 18 - 25. 2011 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :
- விண்ணப்பங்களை 'A'4 அளவு தாளில், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் தட்டச்சு செய்து தயார் செய்து கொள்ளவும்.
- சமீபத்திய புகைப்படம் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டி, தேவையான கல்வித் தகுதி, விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்கவும்.
- 2 ஆயிரத்து 400 ரூபாய் முதல் 2 ஆயிரம் 800 ரூபாய் வரை ஊதியம் உள்ள பணிகளுக்கு தேர்வுக்கான கட்டணம் 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆயிரத்து 800 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலான ஊதியம் உள்ள பணிகளுக்கு தேர்வு கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும்.
- தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 22ஆம் தேதி கடைசி நாளாகும்.