Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஓட்ஸ் நோன்பு கஞ்சி

  • PDF

ஓட்ஸ் நோன்பு கஞ்சி

தேவையான பொருள்கள்:

  • ஓட்ஸ்-அரை கப்
  • தேங்காய் விழுது-1டீஸ்பூன்
  • மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
  • இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)
  • பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
  • தக்காளி-ஒன்று
  • பச்சை மிளகாய்-இரண்டு
  • புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
  • எண்ணை-2டீஸ்பூன்
  • மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
  • மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா-சிறிதளவு
  • உப்பு-தேவையான அளவு

செய்முறை:

  • தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • எல்லாம் நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
  • பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
  • பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  • நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
  • எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும் புதினா,மல்லி தூவி இறக்கவும்.

சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.

இணையத்திலிருந்து Engr.Sulthan

Add comment


Security code
Refresh