Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

சுவையான மீன் வடை

  • PDF

சுவையான மீன் வடை

மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது

தேவையான பொருட்கள்:

  • மீன் துண்டுகள் - 500 கிராம்
  • முட்டை - 1
  • உருளைக்கிழங்கு - 100 கிராம்
  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 3
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்கவடை

செய்முறை:

  • மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.
  • பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
  • மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

ருசியான மீன் வடை தயார். இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Add comment


Security code
Refresh