Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மரண அறிவித்தல்!

  • PDF

அகிலத்தில் நலத்தையும் கெடுதியையும்
அறிவித்தவனே!
 
திருமண வாழ்த்துக்களை
எண்களால் அலங்கரித்தவன் நீ!
 
வணிகத்தில் சங்கேத பாஷையும்
உன்னால் பரிமாறப்பட்டது!
கணினிக்கும் முன்னாள்
தட்டச்சு மணல்களில்
தடங்களை உருவாக்கியவன் நீ!
 
விரல்களை நர்த்தனம் ஆடவிட்டு,
இதயத்தின் அதிர்வு ஒலி
உன்னால் உச்சரிக்கப்பட்டது!
 
இருவுபகல் ஓய்வில்லை உனக்கு!
பலரை உறங்காமல் இருக்கச் செய்திருக்கிறாய்!
சிலரை மகிழ்ச்சி ஊஞ்சலிட்டு
தூங்கச் செய்திருக்கிறாய்!
 
இன்று
உனக்கு மரணம்!!
 
உனக்கே இன்று உன்
சாவு செய்தி அனுப்பப்பட்டுவிட்டது!
அதை உன் சக்களத்தி
இ -மெயிலில் அனுப்பவேண்டிய
துர்பாக்கிய நிலை எனக்கு!!
 
-குடந்தை கவிஞர் ஹுஸைன்

 (டாக்டர் எம்.ஏ. முஹம்மது ஹுஸைன், தமிழ் பேராசிரியர் (ஓய்வு), கும்பகோணம்)

Add comment


Security code
Refresh