Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இறால் பஜ்ஜி

  • PDF

இறால் பஜ்ஜி 

தேவையான பொருட்கள்

  • இறால் - 10
  • கடலை மாவு - ஒரு கப்
  • மிளகாய் பொடி அரை தேக்கரண்டி
  • எலுமிச்சைச்சாறு -அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • ரெட் கலர்=கொஞ்சம்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

  • இறாலை சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
  • அடித்தமுட்டையில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, கொஞ்சம் சூடான எண்ணெய், இவற்றை ஒன்றாக கலக்கி, இறாலை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • கடலை மாவில் உப்பு, கொஞ்சம் மிளகாத்தூள், ரெட் கலர் சேர்த்து பஜ்ஜிக்கு கரைப்பது போல் கலக்கி கொஞ்ச நேரம் வைக்கவும்.
  • பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
  • முட்டை சேர்ந்திருப்பதால் இறால் நன்கு உப்பி வரும்.

இதோ சூடான இறால் பஜ்ஜி. நோன்பு திறக்கும் போது சாப்பிட ரெடி.

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Add comment


Security code
Refresh