Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மீன் மஞ்சூரியன்

  • PDF

மீன் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள்:

  • பெரிய மீன் துண்டுகள்-    10
  • மிளகாய்த் தூள்    - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் தேவையான அளவு

கிரேவி தயாரிக்க:

  • பூண்டு -    7 பல்
  • வெங்காயம்     -    3
  • குடை மிளகாய் – 1/2 நறுக்கியது
  • தக்காளி சாஸ் – 4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை -    8 இலைகள்
  • நெய் – 3 ஸ்பூன்
  • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:

  • மீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும்.
  • மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • பின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும்.
  • பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  • தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

இணையத்திலிருந்து Engr.Sulthan

Add comment


Security code
Refresh