Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வட்லாப்பம்

  • PDF

vattilappam

வட்லாப்பம்

தேவையானவை:

  • முட்டை 6
  • முந்திரி 10
  • ஏலக்காய் 6
  • தேங்காய் பால் 1/4 லிட்டர்
  • சீனி 200 கிராம்
  • பசு நெய் 20 மில்லி
  • சிறிது உப்பு

செய்முறை:

  • முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு  மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதிலேயே முட்டை, சீனி, கெட்டியாக பிழிந்த தேங்காய் பாலையும் இட்டு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கிண்ணத்தின் உட்புறத்தில் பசு நெய்யை தடவி மிக்சியில் உள்ள கலவையை அதில் உற்றிக் கொள்ளவும். 
  • பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதன் மீது சிறிய கலவடை(Stand)இட்டு அதன் மீது கலவை அடங்கிய கிண்ணத்தை மூடாமல் வைத்து பிரஷர் குக்கரை மூட வேண்டும்.
  • இதன் பிறகு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நெருப்பை சற்று கூடுதலாக வைத்து குக்கர் சூடானதும் அடுப்பை ‘சிம்’-இல் வைத்து 5 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.
  • ஒரு வேலை சரிவர வேகவில்லையெனில் மேலும் சில விசில்கள் விட்டுறக்கினால் சுவையான வட்லாப்பம் ரெடி.

Engr. Sulthan

Add comment


Security code
Refresh