Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கடல் பாசி - ரூஹ் அஃப்ஜா

  • PDF

கடல் பாசி - ரூஃப் ஹப்சா

தேவையான‌ பொருட்க‌ள்:

  • கடல் பாசி = 10 கிராம்
  • தண்ணீர் = முன்று டம்ளர்
  • ரூஹ் அஃப்ஜா = ஒரு குழி கர‌ண்டி
  • சர்க்கரை = தேவையான அளவு
  • பாத‌ம், பிஸ்தா = வேண்டிய அளவு
  • நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி

செய்முறை

  • ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.
  • வடிகட்டி கொள்ளவும்.
  • மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.
  • இப்போது ரூஹ் அஃப்ஜா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.
  • வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.

குறிப்பு:

  • இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.
  • அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.
  • கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
  • வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.
  • நோன்பு காலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும். அது சூட்டினால் வருவது. அதற்கும் இது ரொம்ப நல்லது.

இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்

Add comment


Security code
Refresh