Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

இது தான் நோன்பு

  • PDF

படைத்த ரப்பின்
பாசமுகவரிகளே…!

இல்லாமையால்
பட்டினி சரிதான் !
ஆனால்..
இருந்தும் பசித்திருக்கிறோமே !
வல்ல அல்லாஹ்வுக்காக
பசித்திருக்கிறோமே…!
இது தான் நோன்பு !

எப்படியோ
கரையும் பொழுதுகளை
இபாதத்தால்
கண்ணியப்படுத்துகிறோமே..!
இதுதான் நோன்பு !

இறையச்சமின்னலில்
தவறுகள் ஏதும்
செய்யாதிருக்கிறோமே..!
இதுதான் நோன்பு !

கலிமாவால்
நாவை நனைத்து
ஹக்கனின் நினைவை
கல்பினில்
அதிகம் சேர்க்கிறோமே..!
இதுதான் நோன்பு !

ஏழை வீதிகளுக்கும்
ஈகை அனுப்புகிறோமே..!
அவர்களுக்காக கொஞ்சம்
ஈரம் கசிகிறோமே..!
இதுதான் நோன்பு !

புன்னகை
எல்லோருக்கும் என்று
சொல்லவருகிறதே
புவனம் மகிழ்கிறதே..!
இதுதான் நோன்பு !

இந்த நோன்பு
சும்மா.. வருவதில்லை !
நமக்காக
சுகம் அள்ளி வருகிறது !

படைத்த ரப்பின்
உவப்பை நமக்குப்
பெற்றுத்தர வருகிறது !

மண் வெட்டியால்
நிலத்தைச் சரிப்படுத்துவோம் !
நோன்பு
நம்மைச் சரிப்படுத்த
வருகிறது !

வழி கெடுக்கும்
ஷைத்தானுக்கும்
விலங்கிட்டு வருகிறது !

புவனம் படிக்க
பாடமாய்.. வருகிறது !
சுவனத்தின் நிழலை
நமக்குச்
சொந்தமாக்க வருகிறது !

நோன்பிருந்து
மாண்படைவோம் !
மாண்பாலே
நாம் உயர்வோம் !

ஆன்மீகப் பயனடைவோம் !
அல்லாஹ்வின்
அருள் பெறுவோம் !

பொற்கிழிக் கவிஞர்  மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி, அழைக்க  : 99763 72229

Add comment


Security code
Refresh