Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

வெங்காய பிரியாணி

  • PDF

வெங்காய பிரியாணி

சிலர் பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுவர். வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மூளையின் சக்தியை பெருகும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயம் விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு வெங்காய பிரியாணி செய்து தரலாம்.

வெங்காய பிரியாணிக்கு தேவையானவை:

  • அரிசி - 250 கிராம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

அரைக்க வேண்டியவை:

  • மிளகாய் தூள் அரை டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், பட்டை ஒரு துண்டு, கிராம்பு - 2, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 10 பல் ஆகியவை அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

செய்யும் முறை:

  • அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், தக்காளியை சேர்த்து  வதக்கவும்.
  • அதன்பின் மஞ்சள் தூள், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கவும்.

சூடான சுவையான வெங்காய பிரியாணி தயார்.

ரைய்தா செய்முறை:

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு போட்டு பிசைந்து , தனியாக வைக்கவும், தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும்.
  • தேங்காய், இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
  • நறுக்கியவற்றை, அரைத்தவற்றை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தயிருடன் கலந்தால் சுவையான ராய்தா ரெடி.

Add comment


Security code
Refresh