Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

பட்டாணி பிரியாணி

  • PDF

பட்டாணி பிரியாணி

தாய்மார்கள் எப்போதும் ஒரே மாதிரியான உணவை செய்து கொடுத்து, குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்துவதை விட, வித விதமான உணவு வகைகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர்.

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி - 250 கிராம்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • தயிரு - 3 டீஸ்பூன்
  • பச்சை பட்டாணி - அரை கப்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • தேவைகேற்ப உப்பு

அரைக்க வேண்டியவை:

  • இஞ்ஜி சிறிய துண்டு,
  • பூண்டு - 10 பல்,
  • பட்டை - 2 துண்டு, 
  • கிராம்பு, ஏலாக்காய் - தலா 2

செய்முறை:

  • அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்னர் அரைத்த விழுது சேர்த்து நறுகிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், பச்சை பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கலாம்.
  • இறக்கியதும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி பிரியாணி மேல் தூவலாம்.
  • முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அழகுபடுத்தலாம்.
  • சூடான சுவையான பட்டாணி பிரியாணி தயார்.

ராய்தா செய்முறை:

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு போட்டு பிசைந்து, தனியாக வைக்கவும்.
  • தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும்.
  • தேங்காய், இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
  • நறுக்கியவற்றை, அரைத்தவற்றை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தயிருடன் கலந்தால் சுவையான ராய்தா ரெடி.

Add comment


Security code
Refresh