Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

குவைத்தில் நடைப்பெற்ற ஈத் தொழுகையில் கலீல் பாகவி குத்பா பேருரை!

  • PDF

குவைத்தில் தமிழர்கள் பங்கேற்ற பெருநாள் சிறப்பு தொழுகை

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கடந்த 08.08.2013 வியாழக்கிழமை (ஹிஜ்ரீ 1434 ஷவ்வால் பிறை 1) காலை 7:30 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து நமது MYPNO தளத்தின் ஆசிரியர், K-Tic சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ "பெருநாள் ஃகுத்பாப் பேருரை" நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "ரமழானில் மேற்கொண்ட பயிற்சிகள் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும், நோன்பினால் இறையச்சம் (தக்வா) ஏற்பட்டதா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தொழுகைக்கு முன்னதாக, காலை 6:30 மணிக்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லவீ அ. முஹம்மது ஷப்பீர் அலீ (நிறுவனர் & முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை)  "பார்வைகள் பத்து! ரமழானின் முத்து!!" என்ற தலைப்பில், சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 7:15 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ சங்கத்தின் செயற்திட்டங்கள், பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார்.

K-Tic Eid 2013 (5)

இதில் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

K-Tic Eid 2013 (9)

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013 10:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh