MYPNOSun04222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மெய்சிலிர்க்க வைத்த சார்ஜா புத்தகத் திருவிழா!

  • PDF

 

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் ஆண்டுதோறும் ‘சார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’நடைபெறுகிறது. இந்த ஆண்டு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்களுக்கு இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இது முப்பத்தி இரண்டாவது புத்தகக் கண்காட்சியாகும்.

வாசிப்பில் ஆர்வமுடைய நான், நமதூர் இளைஞர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றேன். 53 நாடுகள் பங்கேற்ற இந்த புத்தகத் திருவிழாவில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளும், 22 அரபு நாடுகளும் ஆகும்.இதில் தற்போது ஹங்கேரி,போர்ச்சுகள் மற்றும் நியுலாந்து நாடுகளும் புதிதாக பங்கேற்று மேலும் மெருகேற்றின..!

மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 180 மொழிகளில்  405,000 தலைப்புகளில் இதில் அரங்குகள் அமைத்திருந்தன. இதுவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் இ மில்லியனை தாண்டியதாக அங்கு பணியில் இருக்கும் அலுவலர் சொன்னதை ஆச்சரியம் அடைந்தேன்..!

1982-ல் ஒரு சிறிய கூடாரத்தில் தொடங்கப் பட்டது சார்ஜா புத்தகக் கண்காட்சி. முதல் கண்காட்சியைத் தொடங்கி வைத்ததும் தற்போது முப்பத்தி இரண்டாவது புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்ததும் சார்ஜா மன்னர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹமது அல் குவாசிமி தான். இவர் ஒரு புத்தக ஆர்வலர் என்பதோடு எழுத்தாளரும் கூட. இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் இவரது சில நூல்களும் வெளியிடப்பட்டன. வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெற்றன.

முப்பதாண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்துள்ள இப்புத்தகக் கண்காட்சி விரிவுபட்ட முறையிலும் உலகு தழுவிய நிலையிலும் காணப்பட்டது.

சார்ஜா நகரின் நடுவில் அமைந்துள்ள மிகப் பெரும் வர்த்தகக் கண்காட்சிகளெல்லாம் நடை பெறும் பிரம்மாண்டமான நிரந்தர அரங்கில்தான் இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

ஏராளமான பொருட்செலவில் நடைபெறுகிற இக்கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை.

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வெளிநாடுகளைத் தேர்வு செய்து அவற்றை கௌரவிக்கும் பொருட்டு இக் கண்காட்சியின் கௌரவ விருந்தினராக ஒரு நாட்டையும் கவனத்தைக் கவரும் முக்கிய நாடு என்று ஒரு நாட்டையும் அறிவிக்கின்றனர்.

புத்தகங்களைக் கொண்டு வருவதில், சிறப்பு அரங்கங்கள் அமைப்பதில், அந்த நாடுகளின் கலை, பண்பாடு, வரலாறு, கல்வி ஆகியவற்றை வெளிப் படுத்தும் ஏராளமான கலைஞர்களை, படைப்பாளி களை அழைத்துவந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்து வதில் இந்த இரண்டு நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வெவ் வேறு நாடுகள் இவ்வாறு இங்கு அறிவிக்கப்படு கின்றன.

 

உலகப்புகழ் மிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் சார்ஜா கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக அமைப்பாளர்களால் அழைக்கப்படுகின்றனர். புத்தகக் கண்காட்சி ஒரு பக்கம் நடந்துகொண்டே இருந்தாலும் - மக்கள் குடும்பம் குடும்பமாக இக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்லும் பணி இடையறாமல் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் ஆங்காங்கு இலக்கியக் கருத்தரங்கம், கவிதை வாசித்தல், கதை சொல்லுதல், புத்தக விமர்சனம், இலக்கியக் கலந்துரையாடல், சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், சமையல் வகுப்புகள், வாசகர்களிடமும் பிரமுகர் களிடமும் ஊடகங்கள் பேட்டியெடுத்தல், படைப்பாளி- வாசகர் சந்திப்பு, வாசகர்களுக்குப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் கையெழுத்திடுதல் போன்ற நிகழ்வுகளும் அதே சமயத்தில் நடைபெற்றுக் கொண் டிருக்கும். யாருக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அந்நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கலாம்.

 உலகெங்கிலுமிருந்து புகழ்மிக்க கலைஞர்கள், படைப்பாளிகளின் பெரும் பட்டாளமே சார்ஜா கண்காட்சியில் வந்து இறங்கியிருந்தது.

கண்காட்சியின் நடு நாயகமாக இருக்கிற முக்கிய இடத்தில் தினசரி மாலை இரண்டு மணிநேரத்திற்கும் மேல் குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு இளம் பெண் அங்கு குதூகலத்துடன் கூடி நிற்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். கதை சொல்வதற் கென்றே தனிப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற பக்குவப்பட்ட பெண்ணாக அவரின் செயல்பாடு நமக்கு உணர்த்தியது. அவ்வாறான ஒரு கதையைச் சொல்லி முடித்த பிறகு அந்தக் கதை வெளியான புத்தகத்திலிருந்து அதைப் படித்துக் காட்டுகிறார். அறநெறியைச் சொல்லும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் குழந்தைகளுக்கு உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

 சார்ஜா கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் முக்கியமானது பதிப்புத் துறை சம்பந்தமான பயிற்சிப்பட்டறையாகும். இந்தக் கண்காட்சி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு இப்பட்டறை கண்காட்சி அமைப்பாளர்களாலும் சார்ஜா அரசாலும் நடத்தப் பட்டது. பதிப்புத்துறையில் உலக அளவில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் வகுப் பெடுத்தனர். இன்று பதிப்புத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அதே சமயத்தில் இத்துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும் இதில் அலசப்பட்டது. புதிதாக வந்திருக்கும் நவீன மின்னியல் பதிப்பு குறித்தும் பேசப்பட்டது. படிப்படியாகப் பதிப்புத்துறை அடுத்த கட்டமான டிஜிட்டல் பதிப்பிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பதால் அந்த வளர்ச்சியையும் தனதாக்கிக் கொள்ளப் பதிப்புத்துறை தயாராகவேண்டும் என்ற கருத்தும் இந்தப் பயிலரங்கத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

 சமையல் புத்தகங்களுக்கு இக்கண்காட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற சமையல்கலை வல்லுநர்கள் இங்கு வர வழைக்கப்பட்டிருந்தனர். அரங்கிற்குள்ளேயே கலை நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதே முக்கியத் துவத்துடன் நல்ல மேடை அமைத்து நேரடி சமையல் வகுப்புகள் பிரசித்தி பெற்றவர்களால் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த நாளில் வெவ்வேறு நிபுணர்கள் வெவ்வேறு நாட்டுச் சமையலைச் செய்துகாட்டிக் கொண்டிருந்தனர். அதை ஒரு பெரும் கூட்டம் ரசித்தும் ருசித்தும் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தது.

இக்கண்காட்சியின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று புத்தகப் பதிப்புரிமையை விற்பனை செய்வதாகும். வெளிநாடுகளில் வெளியான புத்தகங்களை அரபிமொழியிலோ இன்னபிற மொழிகளிலோ வெளியிட மூலவர்களிடமிருந்து விலை கொடுத்து உரிமை பெறுவது இங்கு ஏராளமாக நடைபெற்றது. அங்கிருந்த அரபிப் புத்தகங்களை அவரவர் நாட்டில் அந்தந்த மொழிகளில் வெளியிடவும் உரிமை படைத்தவர்களிடம் வெளிநாட்டவர் உரிமை பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இத்தனை சிறப்புகள் கொண்ட சார்ஜா புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ மறக்க முடியாத நிகழ்வுகள் இருப்பினும் நமது தாய் மொழியான தமிழில் ஒரு அரங்கம் கூட இல்லை என்பது பெறும் ஏமாற்றத்தை அளித்தது. சில மளையாள பதிப்பகத்தினர் அமைத்திருந்த அரங்குகளில் மட்டும் பெயருக்காக சில தமிழ் புத்தகங்களை வைத்திருந்தனர்.

கட்டுரையாளர்: பரங்கிப்பேட்டை அ. காதர் அலி, துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (அமைப்பாளர், முகநூல் முச்சந்தி குழுமம்)

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2013 13:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Comments  

 
+8 # Mohamed Owise 2013-11-18 13:21
Very Nice Article from Boss...
Reply | Reply with quote | Quote
 
 
+8 # ஹாஜா மொய்தீன் சிங்கை 2013-11-18 13:38
ஒரு புத்தக கண்காட்சியை நேரில் காண்பது போல் உள்ளது உங்கள் வர்ணனை...!!! வாழ்த்துக்கள் சகோதரா...!!!
Reply | Reply with quote | Quote
 
 
+8 # ஹாஜா மொய்தீன் சிங்கை 2013-11-18 13:40
தமிழ் புத்தகங்கள் நிறைய இருந்தனவா...???
Reply | Reply with quote | Quote
 
 
+7 # காதர் அலி 2013-11-18 13:49
ம்ம்..இருந்தன ....பத்து முதல் பதினைந்து வரை - சுமார் 2 லட்ஷம் புத்தகங்களுக்கு இடையில்...! :sad:
Reply | Reply with quote | Quote
 
 
+5 # ரஹமத்ஜி 2013-11-18 13:51
கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் இலக்கியச் சோலை மற்றும் இன்னும் சில தமிழ் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் தமிழ் பதிப்பகத்தினர் ஸ்டால் அமைக்காதது வேதனை. கட்டுரையாளர் காதர் அலி வர்ணித்து எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்.
Reply | Reply with quote | Quote
 
 
+7 # சல்மான் 2013-11-18 13:53
arumai
Reply | Reply with quote | Quote
 
 
+13 # Thariq-Singapore 2013-11-18 14:16
புத்தக பிரியர்களுக்கு கொன்டாட்டமாக இருந்திருக்கும்... தகவலுக்கு நன்றி...

அப்படியே நமதூர் ILM நூலகத்திற்கு ஒரு நல்ல இஸ்லாமிய வரலாற்று ஆய்வு புத்தகத்தை சார்ஜா புத்தக திருவிழாவின் நினைவாக வழங்கியிருந்தால் நமதூர்ல் இருக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் பயனுடையதாக இருந்திருக்கும்.....

"சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு" என்பது நபிமொழி.

"ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன" என்பது பழமொழி.

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த இன்றைய கல்விக்கூடங்கள் மெத்தனம் காட்டுகின்றன... நூலகங்களில் மாணவர்களின் பங்கு பூஜ்ஜியமே!

அறிவை தீட்டும் ஆயிரம் புத்தகங்கள் இருந்தும் ஆனந்தத்தை அளிக்கும் சினிமா புத்தகங்களே நூலகங்களிலும் அதிகம் புரட்டப்படுகின்றன....
Reply | Reply with quote | Quote
 
 
+7 # ரமீஜா அலி 2013-11-18 15:40
மெய்சிலிர்க்க வைத்த சார்ஜா புத்தகத் திருவிழாவில் தமிழ் நூல்களுக்கான ஒருஅரங்கு கூட இல்லை என்கிற செய்தி முகம்சுழிக்கவே செய்தது, செம்மொழி தமிழுக்கு நேர்ந்த அவமானம் இது. இனியாவது வளைகுடா நாடுகளில் கூத்தாடிகளை கூட்டிக்கொண்டுப்போய் கும்மாளம் போடுவதை விட்டுவிட்டு , புத்தக கண்காட்சியை போன்ற நல்ல விசயங்களில் கவனம் செலுத்தட்டும் தமிழுலகம்.
Reply | Reply with quote | Quote
 
 
+2 # பிலால் 2013-11-18 18:16
இருப்பினும் நமது தாய் மொழியான தமிழில் ஒரு அரங்கம் கூட இல்லை என்பது பெறும் ஏமாற்றத்தை அளித்தது. சில மளையாள பதிப்பகத்தினர் அமைத்திருந்த அரங்குகளில் மட்டும் பெயருக்காக சில தமிழ் புத்தகங்களை வைத்திருந்தனர்.தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் நூல்களும்

சில சகோதரர்கள் ஏற்பட்டால் தமிழ் புத்தககங்கள் இடம் பெற்றன

இந்த லச்சனத்தில் அமீரக தமிழ் சங்கம் ஒரு கேடு
Reply | Reply with quote | Quote
 
 
+6 # காதர் அலி 2013-11-18 20:25
சகோதரர் பிலால் அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன்..! நாம் குறிப்பிட்டது தமிழுக்கென்று தனி அரங்கம் இல்லை என்பதை தான் ஆதங்கத்துடன் சுட்டி காட்டினோம்.மேலும் எனக்கும், தமிழ்சங்கத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்று தெரிந்தும் தாங்கள் என்ன நோக்கத்ததிற்காக இப்படி சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை..!
Reply | Reply with quote | Quote
 
 
+8 # பிலால் 2013-11-19 01:08
மனிக்கவும் அன்பு காதர் அலி நானா தாங்களும் நான் எழுதியதை சரியாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறன் தங்களுடைய கட்டுரை அருமை அதில் எந்த மாற்று கருதும் இல்லை நான் ஏதும் குறை காண வில்லை உங்களுக்கும் தமிழ்சங்கத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்பதும் நான் அறிவேன்

(தமிழுக்கென்று தனி அரங்கம் இல்லை என்பதை தான் ஆதங்கத்துடன்)
இதே ஆதங்கத்துடன் தான் நானும் எழுதினேன் தமிழை வளர்க்க தமிழுக்கென்று சங்கம் வேறு வைத்து உள்ளார்கள் அமீரகத்தில் அந்த சங்கம் மூலம் தமிழுக்கென்று தனி அரங்கம் அமைத்து இருக்கலாம் என்ற ஆதங்கம் தான் எனக்கும் அமீரகத்தில் நிறைய தமிழ் ஆர்வலர்கள் இருகிறார்கள் தமிழ் நாட்டின் தொழில்அதிபர்கள் மூலம் முயற்சி செய்து தனி அரங்கம் அமைத்து இருக்கலாம் என்று தான் சொல்ல வந்தேன்

இப்படி இருக்க இங்கு
கூத்தாடிகளை கூட்டிக்கொண்டுப ்போய் கும்மாளம் போடுவதற்கு தான் இந்த தமிழ் சங்கம் லாயக்கு என குறிப்பிட வந்தேன்

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
(கட்டுரையை விமர்சிக்க வில்லை
தமிழுக்கென்று தனி அரங்கம் இல்லை என்பதே எனது ஆதங்கமும்)
Reply | Reply with quote | Quote
 
 
+6 # syed abdul kader 2013-11-19 18:30
Arumaiyana varthaigalal arputhamaga yeduthuraithu sharjahvikaye sendrathaipol yenadhu sagotharar kooriyathai parthu meisilirkka vaithathu.avar padikkum kalathilaye oru mega puthaga priyar.irunthalum avar itharkkaga nerathai silavalithu buthaga arangirkkusendru angu nadapathai liveil telcast panniyadhu pol irunthadhu.valthukkal,men melum avarathu pani sirrakka ayiram valtukkaudan.by thambi sabu
Reply | Reply with quote | Quote
 
 
+1 # hameeddxb 2013-11-19 23:13
appreicated ali nana & thariq..

bilal
dont use the below word anyehere..
howmanytimes you attaend the tamil sangam meetings?
கூத்தாடிகளை கூட்டிக்கொண்டுப ்போய் கும்மாளம் போடுவதற்கு தான் இந்த தமிழ் சங்கம் லாயக்கு
Reply | Reply with quote | Quote
 
 
+4 # Mohamed Owise 2013-11-20 13:48
கடந்த வெள்ளி மாலை அமீரகத்தின் சார்ஜா மாகணத்தில் நடந்த புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், பதிவிட்ட படமே அதற்கான சான்று...

பார்த்தவுடன் மிக்க வியப்பு, அணைத்து மொழியிலும் புத்தகம் கண்ணில் பட்டது, அனைத்துலக மக்கள் கூட்டம் அலைமோதியது, இக்காலத்திலும் புத்தக பிரியர்கள் நிறைய உள்ளனரே என வியந்தேன்.

மலையாளம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் இஸ்லாம் சார்ந்த மற்றும் பொதுவான புத்தகங்கள் அதிகம் கண்ணில் பட்டது. ஆனால் நமது தாய்மொழியாம் தமிழை தவிர்த்து...

ஆர்வத்துடன் தமிழ் புத்தகம் தேடி அலைந்தேன், ஆனால் கண்ணில் பட்டதோ சில புத்தகமே அதுவும் பத்துக்கும் குறைந்த புத்தகங்களே கிடைத்தது (அதுவும் மூன்று கடைகளில்), மனதுக்கு மிக்க வருத்தமே...

இவ்வளவு பழமை வாய்ந்த மொழியாம் தமிழ் மொழிக்கு அமீரகம் சார்ந்த எந்த சங்கங்களும முயற்சி எடுக்கவில்லை, அமீரக தமிழ் மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் இந்த விடயத்தை அவர்களோடு விவாதித்து அதற்கான முயற்சி எடுத்து வருங்காலங்களில் இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன்....
Reply | Reply with quote | Quote
 
 
+2 # aliakari riyadh 2013-11-20 22:18
no tamil BOOKS VERRY SORRY
Reply | Reply with quote | Quote
 

Add comment


Security code
Refresh