Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

PMA புதிய நிர்வாகிகள் தேர்வு

  • PDF

Displaying 20140227_223152_resized_1.jpgசவூதி அரேபியா ஜித்தா நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரங்கிப்பேட்டை முஸ்லிம் அசோசியேஷன் (PMA) அமைப்பின் 18ம் ஆண்டு நிறைவு மற்றும் 19ம் ஆண்டு நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 27, வியாழக்கிழமை ஜித்தா பேரடைஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.  ஜித்தா  மண்டலத்திலிருந்து 35க்கும் மேற்பட்ட பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

I. முஹம்மது ஜமீல் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.  அதை தொடர்ந்து PMA தலைவர் U. ஷாஹுல் ஹமீது தலைமையுரை ஆற்றினார். துணைத்தலைவர் : ஹ. சைய்யது முஸ்தஃபா  அமைப்பின் செயற்பாடுகளை விளக்கி பேசினார். பரங்கிப்பேட்டையை சாராத சகோதரர்கள் தொடர்ந்து நிதியுதவி  செய்ததை நன்றி பட கூறினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் முஹம்மது மஸ்வூத் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

தேர்வு குழுவினாராக செயல்பட்ட H. அஸ்கர் அலி, அப்துஸ் ஸமத் மற்றும் காஜா கமால் ஆகியோர் அமைப்பின் கடந்த ஆண்டின் சிறந்த செயல்பாடுகளை குறித்து வாழ்த்தி பேசினர். பொதுக்குழு ஒப்புதலின் அடிப்படையில் கீழ்க்கண்டவர்களை இவ்வாண்டிற்கான நிர்வாகிகளாக தேர்வுசெய்தனர்.

  • தலைவர் : ஜனாப் M. கவுஸ் ஹமீது
  • துணைத் தலைவர்: ஜனாப் முஹம்மது இஸ்மாயில்
  • செயலாளர் ஜனாப் Y. ஷாஹூல் ஹமீது
  • துணை செயலாளர் ஜனாப் அப்துல் ரசூல்
  • பொருளாளர் ஜனாப் அப்துல் ரஜ்ஜாக் முஹம்மது
  • செயற்குழு நிர்வாகிகள்: ஜனாப்  உ. ஷாஹுல் ஹமீத், ஜனாப் முஹம்மது மஸ்வூத், ஜனாப் மு. அப்துர் ரஷீத், ஜனாப் ஜமீல் அஹமது, ஜனாப் கபீர், ஜனாப் ஹுஸைன், ஜனாப் செய்யது முஸ்தஃபா, ஜனாப் காஜா கமால், ஜனாப் ஆரிஃப் ஹுசஸன்.

கடந்த ஆண்டின் சிறந்த செயல் பாடுகளுக்கு ஒத்துழைப்பு குடுத்த அணைத்து PMA உறுப்பினர்களுக்கு தனது நன்றியினை தலைவர் U. ஷாஹுல் ஹமீது நல்கினார். மு.அப்துல் ரஷீத் நன்றி கூற, விருந்துடன் கூட்டம் முடித்தது.

வியாழக்கிழமை, 06 மார்ச் 2014 11:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh