Sun11192017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

ஜித்தா PMA பொதுக் குழு கூட்டம்

  • PDF
ஜித்தா வாழ் பரங்கிப்பேட்டை வாசிகளின் கூட்டமைப்பான
பரங்கிபேட்டை முஸ்லிம் அசோசியேஷன்(PMA) பொதுக்குழு கூட்டம்  மற்றும்  முன்னாள்  நிர்வாகி S.Y. ஜாகிர் ஹுசைன்  & தாயகத்தில்  இருந்து வருகை தந்துள்ள தலைமை காஜி  M.K.யஹ்யா சாஹிப் ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளி(17 ஏப்ரல்) அன்று  ஜித்தா நகரில் உள்ள பாரடைஸ் ஹோட்டலில் நடைபெற்றதுஅமைப்பின் செயல்பாடுகளை விளக்கி கூறி PMA தலைவர் கவுஸ் ஹமீது வரவேற்புரையாற்றினார். அவரது உரையில் அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஜாகிர் ஹுசைன், PMA அமைப்பிற்காக ஆற்றிய செயல்பாடுகளை பாராட்டி பேசினார். மேலும்  முன்னால் நிர்வாகிகளான  அஸ்கர் அலி,  ஜாகிர் ஹுசைன், ரஜ்ஜக் மரைக்கார், நைனா மரைக்கார்,  முஹம்மது ஜமில்  ஆகியோரும் தாயகத்திற்குவிடைபெற்று செல்லும்  ஜாகிர் ஹுசைன் அவர்களை வாழ்த்தி பேசினர்.இறுதியாக காஜி  யஹ்யா சாஹிப் மற்றும் ஜாகிர் ஹுசைன்  ஆகியோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

 

கூட்டத்தில் பரங்கிப்பேட்டையில் கழிப்பிடம் இன்றி அவதிப்படும் பகுதிகளில் கழிப்பிடம் அமைப்பது
, ஏழை மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் கணிணி பயில உதவுவது மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அமைப்பின் செயலாளர் ஷாகுல் ஹமீது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.  துணை செயலாளர்  அப்துல் ரசூல் நன்றியுரையாற்ற உணவு பரிமாறப்பட்டு நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014 11:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh