MYPNOThu03222018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

தலையங்கம்: எங்கே செல்லும் இந்த பயணம்... ?

  • PDF
படியில் பயணம் நொடியில் மரணம் என விழிப்புணர்வு வாசகங்கள் எத்தனை வைத்தாலும் இவர்களுக்கு புரிவது எங்கே?
 
பேருந்தில் அமைக்கப்பட்டிருக்கும் படி மக்கள் உள்ளே ஏறி செல்ல மட்டுமே தவிர அதில் நின்று பயணம் செய்ய அல்ல. அதிகமானோர் படியில் நின்று கொண்டு படியை ஒட்டியுள்ள கைப்பிடியை இறுக பற்றி பேருந்தின் வெளியே தொங்குவதை பார்க்கலாம். அந்த கைப்பிடி எந்த சப்போர்ட்டில் இருக்கின்றது என்றால் மிக சாதாரணமான போல்ட் தான்.  அந்த போல்ட் சப்போர்ட் போக போக குறையும், போல்ட் லூசாக இருக்கும் பட்சத்தில் கைப்பிடி பிடுங்கி கீழே விழ வேண்டியதுதான். படியில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது உத்தமம்.
 
"பஸ்சுக்குள்ளே இடம் இருந்தாலும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தால் இப்படி தான் போக நேரிடும்... அதுவும் ஸ்டைலா ஒவ்வொரு stopங்கிலும் இறங்கி ஏறுவது, பஸ் move ஆகி ஒன்றரை கிலோமீட்டர் போகும் வரை அதன் பின்னாலேயே ஓடி பின்னர் ஏறுவது, பஸ்ஸில் வரும் figureகளுக்காக பல வகையில் scene போடுவது, சாகசங்கள் செய்வது, எல்லோரும் ஒரே பஸ்ஸில் வந்தால் கூத்தடிக்க வசதியாக இருக்கும் என்று, இருக்கும் பஸ்சை எல்லாம் வவிடுவது, ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது, இப்படி பல ஒழுங்கீன செயல்கள் குறையும் வரை இப்படி தான் நடக்கும்" -இன்றைய இளைஞர்களின் பஸ் பயணம் குறித்த சமூக ஆர்வலர் சொன்ன வார்த்தைகள்தான் இவை
 
இளைஞர்கள் இப்படி வீம்புக்கு, வீராப்பு காட்டி, வீர மரணம் அடைவது வாடிக்கையாகி விட்டது. தடுத்து நிறுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. கேள்விக்குறியாகிறது வருங்காலாத்தின் இளைஞர்கள் வாழ்க்கை.
 
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளதாலும் அனைத்துப் பள்ளிகளும் ஒரே நேரத்தில் முடிவடைவதாலும் மாணவர்கள் கூட்டமாக வந்து பஸ்களில் ஏறுகின்றனர்.
 
பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் புத்தக சுமைகளுடன் படிக்கட்டில் தொங்கிச் செல்கின்றனர். பஸ்ஸுக்குள் இடம் இருந்தாலும், மாணவர்கள் படிக்கட்டை விட்டு உள்ளே வருவதில்லை என நடத்துநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
நடத்துநர்கள் எத்தனை முறைதான் சொன்னாலும் படிக்கட்டு பயணிகள் கேட்பதில்லை, நெருக்கடியைச் சமாளித்து வாகனம் ஓட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் ஓட்டுநர்கள்.

மாணவர்களின் கவனமின்மை, நமது குறுகிய (ஆக்ரமிப்பால்) சாலை ,பேருந்து நடத்துனாரின் மனிதாபமின்மை இப்படி பல காரணங்கள் விபத்துக்கு. இனியும் இது போல் நிகழாமல் இருக்க மக்களும் அரசும் விழிப்போடு இருப்பது அவசியம்.
 
இதற்கான தீர்வாக மற்றொரு சமூக ஆர்வலர் கூறியதாவது: "மாணவர்களுக்கு அதிகமான கவுன்சிலிங் பள்ளிகளில் இதைப் பற்றி கொடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயணத்தின் ஆபத்தை குறித்து, இன்னும் அதிகமான விழிப்புணர்வுவை அரசாங்கமும், கல்வித்துறைகளும் ஏற்ப்படுத்தி தர வேண்டும். பஸ்களுக்கு ஹைட்ராலிக் பிரஷர் கதவுகள் வேண்டும். ஓட்டுனர் அருகில் சின்ன திரை கொண்ட ஸ்க்ரீன் இருக்க வேண்டும். அதில் பின் கதவு, முன் கதவு நன்கு தெரிய வேண்டும். இந்த வசதிகள் இருந்தால் விபத்தை 100% தவிர்க்கலாம்".
 
மாணவர்கள் பஸ் ஏறும்போது அவர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்துத் துறையினருடன் காவல்துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.

அளவுக்கு அதிகமாக பயணிகளை பேருந்துகளில் ஏற்றுவதும் , PEAK HOURSல் அதிகப்படியான பேருந்துகளை இயக்காததுமே இது போன்ற விபத்துகளுக்கு காரணம். அரசு விழித்துக்கொள்ளுமா இனிமேலாவது?
 
கல்வி கற்று தரும் ஒவ்வொரு விஷயமும் பசுமரத்து ஆனி போல் பதியும் என்பர். போலீசார் பள்ளி, கல்லூரிக்கு சென்று, 'போக்குவரத்து விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும்: ரோட்டை எப்படி கடக்க வேண்டும்,' என விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மாணவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. அவ்வப்போது போலீசார் கண்டித்தாலும், டிரைவர், கண்டக்டர் எச்சரித்தாலும் படிக்கட்டு, மேற்கூரை பயணம் செய்வோர் கண்டு கொள்ளவது இல்லை.
 
'இளங்கன்று பயமறியது' என்பது சரிதான். வாழ்க்கையில் சாதிக்க இன்னும் வாய்ப்புகள் இருக்கும்போது, இப்படி தொங்கி கொண்டு பயணம் செய்வதால், என்ன சாதிக்க போகின்றனர்? இன்னும் திருந்தாத இவர்களை குறைசொல்வதா; அல்லது டிரைவர், கண்டக்டர், போலீசாரை நொந்து கொள்வதா?
 
நாளைய இந்தியா, இளைஞர்களின் கையில் என்பதை, இந்த எதிர்கால தூண்கள் உணரும் காலம் எப்போது? ஆபத்தான பயணத்தை தவிர்த்து, புதிய உலகு படைப்போம்.

திங்கட்கிழமை, 16 ஜூன் 2014 10:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh