Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

டீ கடையில் நூலகம்!

  • PDF
பெங்களூருவில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்றால், அங்கே பிளாஸ்டிக் ஷெல்ஃப் ஒன்றில்  குழந்தைகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
 
டீ சாப்பிட்டுக்கொண்டே, ஷெல்ஃபில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். பிடித்திருக்கிறது என்று விலை கேட்டால்,  ''இது , குப்பத்தில் இருக்கும் ஏழை மாணவர்கள் படிப்பதற்காக''  என்று சொல்லி கடைக்காரர் கொடுக்க மாட்டார்.
 
ஆஹா, இது நல்ல விஷயம் ஆச்சே...   யார், எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

குப்பத்தில் வாழும் குழந்தைகளுக்கு, பாடப் புத்தகங்களைத் தவிற மற்ற புத்தகங்களைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் பள்ளிக்குச் செல்வதே பெரிய விஷயம். அவர்களிடம் பள்ளிக்குச் செல்ல வேண்டும், கல்வி அறிவைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, பெங்களூருவில் இருக்கும் 'அக்‌ஷரா பவுண்டேஷன்' மூலம் சென்ற ஆண்டு சர்வதேச எழுத்து தினத்தின்போது தொடங்கப்பட்ட முயற்சி இது.
 
'கட்டிங் டீ டேல்ஸ்' (Cutting Tea Tales). கதைப் புத்தகங்கள், பொம்மைகள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் என  எல்லாமே விலை உயர்ந்ததாகவே இருக்கும். இதை வாங்க குப்பத்து மாணவர்களால் முடியாது. அதனால்தான் அக்‌ஷரா பவுண்டேஷன்,  இது போன்ற விலை உயர்ந்த புத்தகங்களை, படித்து முடித்த வசதியானவர்களிடம் இருந்து சேகரித்து, டீ கடை உரிமையாளரின் அனுமதியோடு அங்கு வைத்துள்ளது.

குழந்தைகள், புத்தகங்களைப் படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட வேண்டும்.   சில நாட்கள் கழித்து அந்த புத்தங்களை எடுத்துவிட்டு, புதுப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. முதன் முதலில் கிழக்கு பெங்களூருவில் உள்ள சத்யா நகர் டீக்கடையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
 
'' மாணவர்கள் இந்தப் புத்தகங்களைப் படிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.  அவ்வப்போது இங்கு வந்து அக்‌ஷரா பவுண்டேஷன் உறுப்பினர்கள் இங்கு வந்து,  மாணவர்களுக்கு கதைகள் சொல்லி, படிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள்'' என்கிறார் கடைக்காரர்.

ஒரு மாணவர் கூறுகையில்... ''கூலி வேலை செய்யும் என் அப்பாவினால் இவ்வளவு விலை உயர்ந்த புத்தகங்களை வாங்க முடியாது. இந்தப் புத்தகங்களைப் படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இவை, எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உற்சாகம் பொங்க கூறினான்.

தற்போது,  மூன்று இடங்களில் இந்த 'கட்டிங் டீ டேல்ஸ்' திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இன்னும் இது பலவாகும் என்கிறது அக்‌ஷரா பவுண்டேஷன். 

-என்.மல்லிகார்ஜுனா

Add comment


Security code
Refresh