Mon11202017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கஃபா வளாகத்தில் சீனப் பெண்மணி தற்கொலை!

  • PDF

haram suicideசீனாவில் இருந்து உம்ரா செய்வதற்காக வந்த ஒரு பெண் கடந்த திங்கள் கிழமை (16-02-2015) மக்காவின் கஃபத்துல்லாஹ்விற்கு வெளியே (ஹரமுக்கு  உள்ளே) தற்கொலை செய்திருப்பது மக்காவில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

 

 

 

SABQ என்னும் அரபு பத்திரிக்கையின் செய்தியை மேற்கோள் காட்டி மஸ்ஜிதுல் ஹரம் வளாகத்தில், ”தவாபுக்குரிய மேல் தட்டில் இருந்து 30 வயது மதிக்க தக்க இந்த சீனப் பெண்மணி நாற்காலியில் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை” செய்து கொண்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. மஸ்ஜிதுல் ஹரத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் தற்கொலை செய்த கொண்டதற்கு  உண்மையான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை. 

 

 

இந்தியா, சீன, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மக்களிடம் இஸ்லாமிய மார்க்கம் பற்றிய முறையான தெளிவில்லாத காரணத்தால் மக்காவில் சென்று மரணித்தால் அது மிகபெரிய புண்ணியத்திற்குரிய செயலாகும் என்ற நம்பிக்கை இருப்பதாக அறிய முடிகிறது. இந்த மூட நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணுவதாக மக்காவின் காவல் துறையினர் கூறி உள்ளனர்.

புண்ணியம் என்று நினைத்து கொண்டு தற்கொலை என்னும் மாபாதக செயலை செய்வது மிக மிக வருந்ததக்க செயலாகும். இது போன்ற அறியாமையில் இருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது் கடமையாகும்

 

sourece:.emirates247.com 

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015 11:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh