Wed01172018

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

மனஅழுத்தம் இன்றி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்

  • PDF
பள்ளி பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மன அழுத்தம் இன்றி மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
 
தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களுக்கு பாதி பிரச்னையை அளிக்கக்கூடியது மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம் உருவாவதற்கு, ஒரே தேர்வில் தனது மேற்படிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற சூழலை உருவாக்கும் நமது கல்வி முறையும் ஒரு காரணம் எனக் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.
 
தேர்வுக்கு முன்பான இதே அழுத்தம்தான், தேர்வுக்கு பின்பு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களை பாதிப்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். புத்தகத்தை கரைத்தே குடித்திருந்தாலும் உளவியல் ரீதியாக தன்னை தயார்செய்துகொள்ளுதலும் அவசியம் என்கின்றனர் அவர்கள். தனக்குத்தானே ஊக்கமூட்டிக் கொள்வது, எதிர்மறை எண்ணங்களை களைவது போன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என அறிவுறுத்துகின்றனர் உளவியல் நிபுணர்கள்
 
தன்னம்பிக்கையுடன் தயாராகும் மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் உளவியல் ரீதியாக கொடுக்கும் ஆதரவுதான் அவர்களின் முடிவுகளில் பிரதிபலிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015 10:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

Add comment


Security code
Refresh