Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கானல் நீர்

  • PDF
வெயில் காலங்களில் சாலைகளில் தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தென்படுவதே கானல் நீர். சூடான காற்றுக்கும் குளிர் காற்றுக்கும் இடையே ஒளி பயணிக்கும் போது ஏற்படும் மாற்றமே கானல் நீர்.
 
பொதுவாகவே சூரியனில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்களின் வேகம் காற்றின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும். கோடை காலங்களில் சூடாக இருக்கும் நிலத்தில் இருந்து மேல் எழும் வெப்பமானது முதல் அடுக்கில் உள்ள காற்றையும் சூடாக்குகிறது. அதே வேளையில் மற்ற அடுக்கில் உள்ள காற்றின் வெப்பம் குறைவாக காணப்படுகிறது.
 
இந்த சமயத்தில் ஒளிக்கதிர்கள் குளிர் காற்றில் இருந்து சூடான காற்று உள்ள பகுதிக்குள் நுழைகிறது. அப்போது ஒளிவிலகல் ஏற்படுகிறது. இதுவே நமது கண்களுக்கு சாலைகளில் தண்ணீர் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது.

Add comment


Security code
Refresh