Sat11182017

Last update03:57:49 PM GMT

Font Size

Profile

Menu Style

Cpanel

கேமரா தோன்றிய வரலாறு

  • PDF
புகைப்பட கலைய பொதுவா போட்டோ கிராஃபி என்று கூறுவார்கள். இது கிரேக்க மொழியில் இருந்து தோன்றியது. போட்டோ என்பது ஒளி என்பதும் பொருள் அதுபோல கிராஃபி என்பதற்கு வரைதல் என்பது பொருள், அதுனாலதான் இது தமிழில் ஒளிவரைதல் என்று அழைக்கப்படுகிறது. அதே போல் கேமரா என்னும் சொல் லத்தின் மொழியிலருந்து தோன்றியது. இதற்கு இருட்டு அறை எனபது பொருளாக கொள்ளப்படுகிறது.
 
கி.மு 300 ஆண்டுகாலத்துல வாழ்ந்த அரிஸ்டாட்டில் என்னும் அறிவியல் அறிஞருடைய தலைகீழ் விதியே இந்த கேமரா உருவாவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
 
கேமாராவ முதன் முதல்ல பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் டாக்குரே என்பவர் கண்டுபிடித்தார். ஓவிய கலைஞரான இவர், தான் வரைந்த ஓவியங்களை ஒளி மூலம் copy எடுக்க விரும்பி, கேமரா கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினாராம்.
 
இவர் கண்டுபிடித்த கேமரா டாக்குரே கேமரா என்று அழைக்கப்பட்டது. ஒரு சிறுவன் குதிரையை இழுத்து செல்வது போன்ற புகைப்படமே உலகின் பழமையான புகைப்படமாக கருதப்படுகிறது. இந்த புகைப்படம் 1825ல் எடுக்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
டாக்குரே வகை கேமரா 170 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில கண்டுபிடிக்கப்பட்டிருக்காம், மரத்தால் உருவாக்கப்பட்ட அந்த முதல் வகை கேமரா இன்னும் இயங்கும் நிலையில இருக்குது அப்படிங்குறதுதான் இன்னும் கூடுதல் ஆச்சர்யமான விஷயம்.
 
லூயிஸ் டேக்குரேவிற்கு பிறகு ஜார்ஜ் ஈஸ்ட்மெண்ட் என்பவர் நெகட்டிவ் மூலம் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்துள்ளார், பின்னர் அந்த கேமராக்கள் 1888ல் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பிறகு ஜார்ஜ், கோடாக் என்னும் பெயரில ஒரு நிறுவனத்தையும் தொடங்கிருக்காரு.
 
இவருக்கு பிறகு நிறைய கேமராக்கள் கண்டறியப்பட்டாலும் இந்த நிறுவனம்தான் கேமராக்களினுடைய பரிணாம வளர்ச்சியில முக்கிய பங்கு வகித்தவை என்று சொல்லலாம், ஏனெனில் நவீன ரக டிஜிட்டல் கேமராவையும் முதன் முதல்ல கண்டுபிடிச்சு வெளியிட்டது இந்த நிறுவனத்துல பணியாற்றிய ஸ்டீவ் சாசன் என்பவருதான். நவீனரக கேமராவுக்கு இவருடைய கண்டுபிடிப்புதான் காரணம் என்பதால இவருதான் கேமராவின் தந்தை என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்.

Add comment


Security code
Refresh